மேலும் அறிய

Bajaj Electric Motorcycle: சிறப்பான அறிவிப்பு.. இ-பைக்கை அறிமுகம் செய்யும் பஜாஜ்.. எப்போ தெரியுமா?

ஸ்கூட்டி மாடலான சேதக் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுடன் தனது மின்சார வாகனப் பிரிவை விரிவுபடுத்தும் நோக்கில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் மின்சார மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யவுள்ளது.

சேதக் வாகனத்தின் உற்பத்தியை அதிகரிப்பதோடு 2028 நிதியாண்டில் தனது முதல் மின்சார பைக்கை அறிமுகப்படுத்த உள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இ-பைக் தயாரிப்பில் பஜாஜ்

இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி ஏற்கனவே சந்தையில் உள்ள ஸ்கூட்டி மாடலான சேதக் ரக வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுடன் சேர்த்து தனது மின்சார வாகனப் பிரிவை விரிவுபடுத்தும் நோக்கில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் மின்சார மோட்டார்சைக்கிளை அடுத்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தும் என தெரிவித்துள்ளது.

2026-2027 நிதியாண்டின் முதல் காலாண்டு வருவாய் அறிக்கையின்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், சேதக் வாகனங்களுக்கான தேவை அதிகமாக உள்ளதாக அதன் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

Also Read: Cheapset 9 Seater: நாட்டின் மலிவான 9 சீட்டர் - ரக்கட் எஸ்யுவி, டீசல் எடிஷன், 840KM மைலேஜ் - EMI விவரங்கள்

இருசக்கர வாகனப் பிரிவில் தனது முதல் மின்சார வாகனக் களத்திற்காக, இந்த பிராண்ட் 'சேதக்' என்ற பெயரை மீண்டும் கொண்டு வந்தது நல்ல பலனையும் அளித்துள்ளது. இது தற்போது உள்நாட்டு சந்தையில் அதிகம் விற்பனையாகும் மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். 'ஃப்ரீடம் சிஎன்ஜி' மாடல் சுமாரான வெற்றியை மட்டுமே அடைந்த நிலையில், பஜாஜ் நிறுவனம்  தற்போது பிரதான உற்பத்தியாளர்களிடமிருந்து போதுமான பங்களிப்பு இல்லாத அதிகம் ஆராயப்படாத சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலான மோட்டார் சைக்கிள் பிரிவில் கால் பதிப்பதாகத் தெரிகிறது.

புதிய உச்சத்தை எட்டிவரும் இ-பைக் விற்பனைகள்

2026 ஏப்ரல் ஜூன் காலாண்டில் தங்களது உள்ளூர் வணிகத்தில் மின்சார வாகனங்கள் சுமார் 30 சதவீதப் பங்களிப்பை வழங்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  விநியோகத் தடைகளைச் சமாளிக்கும் பொருட்டு சேதக் நிறுவனத்தின் மாதாந்திர உற்பத்தித் திறன் அடுத்த சில மாதங்களில் 50,000 யூனிட்டுகளிலிருந்து 60,000 யூனிட்டுகளாக அதிகரிக்கப்படும். மின்சார இருசக்கர வாகனப் பிரிவில் போட்டி புதிய உச்சத்தை எட்டிவரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 டிவிஎஸ் மோட்டார், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஏதர் எனர்ஜி உள்ளிட்ட பிராண்டுகள் எதிர்கால மேம்பாட்டிற்காக  தங்களது மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு வரிசையை வலுப்படுத்தியுள்ளன. இந்தத் தயாரிப்பு மேம்படுத்தலுடன் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஏப்ரல்-ஜூன் 2026 காலகட்டத்திற்கான தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த காலாண்டு நிதி செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. ஏனெனில், செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகரித்து ரூ. 17,244 கோடியாக உயர்ந்துள்ளது.

அந்நிறுவனத்தின் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் இரண்டிலும் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், மின்சார வாகன வணிகத்தின் வருவாய் கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளது.

ஆனால், உற்பத்தித் திறன் மற்றும் உதிரிபாகங்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்களால் உற்பத்தி குறைவாகவே இருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்தது. அதே நேரத்தில், பல்சர், அவெஞ்சர் மற்றும் டோமினார் ரகங்கள் ஆண்டுக்கு ஆண்டு இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்தன. 125 சிசி முதல் 160 சிசி வரையிலான பல்சர் ரகங்களில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பஜாஜ் ஆட்டோ உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
Jaguar Type 01 EV Car: மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Embed widget