மேலும் அறிய

ஏத்தர் கோனார்க்: காஸ்ட்லி இ.வி. விலையை உடைக்குமா? கசிந்த விவரங்கள்- ரூ.1 லட்சத்தில் புதிய புரட்சி!

விலையுயர்ந்த ஈவி என்ற பிம்பத்தை ஏத்தர் மாற்றுமா? புதிய குறைந்த விலை ஸ்கூட்டரின் விவரங்கள்

பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாறி வருகின்றனர். சந்தையில் தற்போதுள்ள நல்ல ஈவி ஸ்கூட்டர்கள் விலை உயர்ந்தவையாகவும், சில குறைவான ரேஞ்ச் கொண்டவையாகவும் உள்ளன. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக, ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் குறைந்த விலையில், அதிக ரேஞ்ச் தரக்கூடிய புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளது.

கசிந்த விவரங்கள்

ஏத்தர் கோனார்க் (Ather Konark) எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த ஸ்கூட்டரின் விவரங்கள் அதன் அறிமுகத்திற்கு முன்பாகவே சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. இது டிவிஎஸ் ஐகியூப், டிவிஎஸ் ஆர்பிட்டர் மற்றும் பஜாஜ் சேத்தக் போன்ற முன்னணி பட்ஜெட் ஸ்கூட்டர்களுக்கு நேரடிப் போட்டியாக அமையும்.

உறுதியான மெட்டல் பாடி

கசிந்த தகவல்களின்படி, இதில் ஃபைபர் பேனல்களுக்குப் பதிலாக முதன்முறையாக உறுதியான மெட்டல் பாடி பேனல்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இது இந்திய குடும்பங்கள் விரும்பும் ஹோண்டா ஆக்டிவா அல்லது பஜாஜ் சேத்தக் போல உறுதியானதாக இருக்கும். இதில் ஹேண்டிலில் பொருத்தப்பட்ட ஹெட்லைட், அகலமான தட்டையான ஃபுளோர்போர்டு, 14-இன்ச் பெரிய முன் சக்கரம் மற்றும் நீளமான வசதியான இருக்கை ஆகியவை உள்ளதால் தினசரி பயன்பாட்டிற்கும், பொருட்கள் வாங்கி வருவதற்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

சிறந்த ரேஞ்ச் மற்றும் சார்ஜிங்

புதிய EL பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், SR மற்றும் QR என இரண்டு சீரிஸ்களில் மொத்தம் 6 வேரியண்ட்களில் (நான்கு SR, இரண்டு QR) வெளியாகலாம். இதன் பேட்டரி அளவைப் பொறுத்து 100 முதல் 200 கி.மீ வரையிலான சிறப்பான ரேஞ்ச் கிடைக்கும். மேலும், 0-ல் இருந்து 80% பேட்டரியை வெறும் 2 மணிநேரத்தில் சார்ஜ் செய்யும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உண்டு.

ஸ்மார்ட் அம்சங்கள்

குறைந்த விலை என்றாலும் ஏத்தர் இதில் வசதிகளைக் குறைக்கவில்லை. ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் இன்பில்ட் நேவிகேஷன் வசதியுடன் கூடிய டிஜிட்டல் TFT டிஸ்ப்ளே இதில் உள்ளது. AtherStack 7.0 சாப்ட்வேர் மூலம் வாய்ஸ் கமாண்ட், பள்ளங்கள் குறித்த எச்சரிக்கை, விபத்து டோவிங் அலர்ட், ரிவர்ஸ் மோடு மற்றும் ஹில்-ஹோல்டு அசிஸ்ட் போன்ற பாதுகாப்பான அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

எதிர்பார்க்கப்படும் விலை

இந்த 'ஏத்தர் கோனார்க்' ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.1 லட்சத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பேட்டரியை வாடகைக்கு எடுக்கும் திட்டத்திலும் இதனை நிறுவனம் அறிமுகப்படுத்தலாம். பேட்டரி இல்லாமல் ஸ்கூட்டரை மட்டும் வாங்கினால் இதன் விலை இன்னும் கணிசமாகக் குறையும். ஒட்டுமொத்தமாக, நடுத்தரக் குடும்பங்களுக்கு ஏற்ற உறுதியான, சிறந்த மதிப்புள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. 

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
Hyundai Bayon: ஒரு வழியா வந்துடுச்சு.. அறிமுகமாகிய Hyundai Bayon கார்! பட்ஜெட் விலையில் இவ்ளோ வசதிகளா?
Hyundai Bayon: ஒரு வழியா வந்துடுச்சு.. அறிமுகமாகிய Hyundai Bayon கார்! பட்ஜெட் விலையில் இவ்ளோ வசதிகளா?
ரைடரா நீங்கள்? ஆஃப் ரோட் பைக்கில் ஜாலி ட்ரிப் போக பெஸ்ட் Honda XR300L! விலை எவ்ளோ?
ரைடரா நீங்கள்? ஆஃப் ரோட் பைக்கில் ஜாலி ட்ரிப் போக பெஸ்ட் Honda XR300L! விலை எவ்ளோ?
Bayon Vs Creta: க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Price: பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
Embed widget