Upcoming Hybrid Cars: ஹை லெவல் ஹைப்ரிட்.. அட்டகாசமாக வரப்போகும் 5 கார்கள் - என்னென்ன?
இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் அறிமுகமாக உள்ள 5 புதிய ஹைப்ரிட் கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் கார்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், தொலைநோக்குப் பார்வையுடனும் ஒவ்வொரு கார் நிறுவனங்களும் புதிய கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவில் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள புதிய 5 ஹைப்ரிட் கார்கள் என்னென்ன? என்பதை கிழே காணலாம்.
1. Maruti Suzuki Fronx Hybrid:
மாருதி சுசுகியின் மிகவும் புகழ்பெற்ற கார் Maruti Suzuki Fronx. இந்த காரின் அப்டேட் வெர்சனாக ஹைப்ரிட் காராக அறிமுகமாகியிருப்பது Maruti Suzuki Fronx Hybrid. இது சப் 4 மீட்டர் எஸ்யூவி கார் ஆகும். 1.2 லிட்டர் இசட் சீரிஸ் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் மோட்டார் பேட்டரி பேக் அப் உள்ளது.
2. Kia Sonet Hybrid:
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற காராக இருப்பது Kia. இவர்களின் மிகவும் புகழ்பெற்ற கார் Kia Sonet ஆகும். இவர்களின் ஹைப்ரிட் காராக அறிமுகமாகியிருப்பது Kia Sonet Hybrid. இந்த கார் அடுத்தாண்டு அல்லது 2028ம் ஆண்டு அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. கியாவின் இந்த கார் அறிமுகமானால் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.
3. Renault Bridger Hybrid:
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று Renault. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இவர்கள் இந்தியாவில் அடுத்தாண்டு அறிமுகப்படுத்த உள்ள கார் Renault Bridger Hybrid. சப் 4 மீட்டர் எஸ்யூவி காரான இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஹைப்ரிட் காரான இந்த கார் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் வேரியண்ட்களிலும் அறிமுகமாக உள்ளது.
4.Honda’s New Compact SUV:
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கார்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் உள்ளது. இவர்கள் இந்திய சந்தையில் புதியதாக Honda’s New Compact SUV காரை அறிமுகப்படுத்த உள்ளது. நெக்ஸான், வெனுயூ, சோனட் மற்றும் எக்ஸ்யூவி 3 எக்ஸ்ஓ ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கார் ஒரு ஹைப்ரிட் காராக அறிமுகமாக உள்ளது.
5. Toyota Urban Cruiser Taisor Hybrid:
உலகின் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனமான டொயோட்டோ நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உளள கார் இந்த Toyota Urban Cruiser Taisor Hybrid. இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்தாண்டு இந்த கார் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. ஹைப்ரிட் காரான இந்த காரில் பல்வேறு வசதிகளும், சிறப்பம்சங்களும் இடம்பெற உள்ளது. இசட் சீரிஸ் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹைப்ரிட் கார்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், விரைவில் அறிமுகமாக உள்ள இந்த கார்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















