மேலும் அறிய

XUV700 Facelift: 7 சீட்டரில் மஹிந்த்ரா செய்யப்போகும் மேஜிக் - டாப் 5 அப்க்ரேட்களுடன் வரப்போகும் மான்ஸ்டர்

Mhindra XUV700 Facelift: மஹிந்த்ரா நிறுவனம் தனது XUV700 காரின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் செய்யப்போகும் 5 முக்கிய மாற்றங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

 Mhindra XUV700 Facelift: மஹிந்த்ரா நிறுவனம் தனது XUV700 காரின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் செய்யப்போகும் 5 முக்கிய அப்டேட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மஹிந்த்ரா XUV700 ஃபேஸ்லிஃப்ட்

மஹிந்த்ரா நிறுவனம் தனது XUV700 கார் மாடலை கடந்த 2021ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. நிறுவனத்தின் நிறுத்தப்பட்ட XUV500 கார் மாடலுக்கு மாற்றாக இது கொண்டு வரப்பட்டது. மாடர்னான ஸ்டலிங், அம்சங்கள் நிறைந்த கேபின், உயர்ந்த பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றால் உடனடியாக வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்த XUV700, 4 ஆண்டுகள் ஆன பிறகும் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது. இந்நிலையில் தான் இந்த கார் முதல்முறையாக ஒரு பெரும் அப்டேட்டை பெற உள்ளது. மேம்படுத்தப்பட்ட எடிஷனானது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சந்தைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அதில் இடம்பெற உள்ள டாப் 5 அப்டேட்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

XUV700 - XEV 9e அடிப்படையிலான டிசைன்

சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களானது, XUV700 காரின் டிசைனானது மஹிந்த்ராவின் புதிய தலைமுறை  XEV 9e போர்ன் - எலெக்ட்ரிக் எஸ்யுவியின் தாக்கத்தை பெற்றுள்ளதை உணர்த்துகிறது. முன்புற பகுதியானது மிகப்பெரிய மாற்றத்தை பெற உள்ளது.  அதன்படி, புதியதாக உருவாக்கப்பட்ட க்ரில், புதிய ட்வின் பாட் எல்இடி முகப்பு விளக்குகள், புதிய சிக்னேட்சர் எல்இடி  டிஆர்எல்எஸ் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட கீழ் பகுதி ஆகியவை அடங்கும். பின்புறம் மற்றும் பக்கவாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏதும் இன்றி அப்படியே தொடரும் என கூறப்படுகிறது.

XUV700 - மூன்று ஸ்க்ரீன் செட்-அப்

கேபினில் வழங்கப்பட உள்ள மிகப்பெரிய மாற்றம் என்பது XEV 9e கார் மாடலில் இருப்பதை போன்ற 3 ஸ்க்ரீன் செட்-அப் ஆகும். ஒவ்வொன்றும் 12.3 இன்ச் அளவை கொண்டு, வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே அணுகலை கொண்டிருக்கும். கூடுதலாக டேஷ்போர்டும் மறுவடிவமைப்பு செய்யப்படக்கூடும். புதிய மஹிந்த்ரா XUV700 கார் மாடலானது ஹர்மன் அல்லது கர்டோன் சவுண்ட் சிஸ்டத்தை பெற வாய்ப்புள்ளது. தற்போதைய எடிஷனில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் அப்படியே புதிய எடிஷனிலும் தொடரப்பட உள்ளது.

XUV700 - இன்ஜினில் மாற்றம்?

புதிய XUV700 எடிஷனில் இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. அதன்படி, இந்த எஸ்யுவி ஆனது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் அதே 2.0 லிட்டர் டர்போ mStallion பெட்ரோல் மற்றும் 2.0லிட்டர் mHawk டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடர உள்ளன. அவை முறையே 200PS & 380Nm மற்றும் 155PS & 360Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களுக்கும் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

XUV700 - சற்றே விலையேற்றம்

கூடுதலாக இணைக்கப்படும் அம்சங்கள் மற்றும் தோற்றத்தில் ஏற்படுத்தப்படும் மேம்படுத்தல்களை கருத்தில் கொண்டால், XUV700 ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் சற்றே விலை உயர்வை எதிர்கொள்ளும். தற்போதைய எடிஷனானது 14.49 லட்சத்தில் தொடங்கி 25 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்டுள்ளது. இதிலிருந்து குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் வரையில் விலை உயர்த்தப்படலாம்.

XUV700 - வெளியீடு, போட்டியாளர்கள்

மஹிந்த்ராவின் மேம்படுத்தப்பட்ட XUV700 கார் மாடலானது 2026ம் ஆண்டின் முதல் பாதியிலேயே சந்தைப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. ப்ரீமியம் 7 சீட்டர் எஸ்யுவி செக்மெண்டில் இடம்பெறும் இந்த காரானது, டாடா சஃபாரி, ஹுண்டாய் அல்கசார் மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் ஆகிய கார் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
Hyundai Upcoming Car: கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
KTM 200 Duke: திரும்பி பார்க்கும் இளசுகள்.. அறிமுகமாகியது KTM 200 Duke! விலை எப்படி?
KTM 200 Duke: திரும்பி பார்க்கும் இளசுகள்.. அறிமுகமாகியது KTM 200 Duke! விலை எப்படி?
Car Discount: தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்
தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு - எந்தெந்த பிரிவினருக்கு உயர்வு? - முழு விவரம்
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு - எந்தெந்த பிரிவினருக்கு உயர்வு? - முழு விவரம்
Chennai Power Cut: சென்னைவாசிகளே! நாளை (31-10-2026) 5 மணி நேரம் மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Chennai Power Cut: சென்னைவாசிகளே! நாளை (31-10-2026) 5 மணி நேரம் மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
TVK On Stalin:: ”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்க திட்டம்!
நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்க திட்டம்!
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை: யார் இந்த ஹோமி பாபா ? அவரின் சாதனை என்ன?
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை: யார் இந்த ஹோமி பாபா ? அவரின் சாதனை என்ன?
Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
Embed widget