மேலும் அறிய

Bajaj Chetak EV: கூகுள் மேப்ஸ், ரைட் மோட்கள், 80KM ஸ்பீட் - பஜாஜ் சேடக்கில் டக்கரான அப்டேட்கள், விலையில் சர்ப்ரைஸ்

Bajaj Chetak EV 2026: பாஜஜ் நிறுவனம் தனது சேடக் மின்சார ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த லைன் -அப்பிற்கும் முக்கியமான பல அப்டேட்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

Bajaj Chetak EV 2026: பாஜஜ் நிறுவனம் தனது சேடக் மின்சார ஸ்கூட்டரில் கூகுள் மேப்ஸ் மற்றும் புதிய டாப் ஸ்பீட் போன்ற அம்சங்களை வழங்க முடிவு செய்துள்ளது. 

சேடக் EV-க்கு அப்க்ரேட்களை வாரி வழங்கும் பஜாஜ்..

பஜாஜ் நிறுவனம் தனது சேடக் மின்சார ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த வேரியண்ட் லைன் - அப்பிற்கும் கணிசமான அப்க்ரேட்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் புதிய அம்சங்கள், செயல்திறன் மேம்பாடு மற்றும் போர்ட்ஃபோலியோ முழுமைக்கும் பெயர்களை திருத்துவது ஆகியவையும் அடங்குமாம். புதிய மாற்றங்களானது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அனைத்து வேரியண்ட்களுக்கும் இது பொருந்தும் எனவும் பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படி வந்துள்ள மாற்றங்கள் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பஜாஜ் சேடக் - பெயர்களில் வந்த மாற்றம் என்ன?

பெயர்களில் வந்த மாற்றங்களை முதலில் பார்த்தால், புதிய பஜாஜ் சேடக் வாகனங்களானது C35, C30 மற்றும் C25 என மூன்று பிரிவுகளாக C சீரிஸ் பெயர்களை பின்பற்றுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக சேடக் போர்ட்ஃபோலியோ மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளதால், புதிய பெயர் நடவடிக்கையானது பயனர்களுக்கு தெளிவான புரிதலை வழங்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக நாட்டில் அதிகம் விற்பனையாகும் மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றாக பஜாஜ் சேடக் மின்சார ஸ்கூட்டர் உருவெடுத்துள்ளது, சேடக்கின் போர்ட்ஃபோலியோ விரிவடைடலுக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. 

சேடக் EV - கூகுள் மேப் அப்டேட்:

சேடக்கில் வழங்கப்பட்டுள்ள மிக முக்கிய அப்டேட்டாக, முதன்மை வேரியண்டான C 35 01 மாடலில், சேடக்கில் செயலியிலேயே நேரடியாக கூகுள் மேப் வசதி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. முந்தைய எடிஷனில் இருந்த தனியுரிமை நேவிகேஷன் அம்சத்திற்கு பதிலாக, மிகவும் பரிச்சயமான நேவிகேஷன் வசதி இடம்பெற வேண்டும் என்றபயனர்களின் தொடர்ச்சியாக கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Bajaj Chetak EV: கூகுள் மேப்ஸ், ரைட் மோட்கள், 80KM ஸ்பீட் - பஜாஜ் சேடக்கில் டக்கரான அப்டேட்கள், விலையில் சர்ப்ரைஸ்

சேடக் EV - உயர்த்தப்பட்ட டாப் ஸ்பீட்

சேடக்கின் அனைத்து மாடல்களிலும் அதிகபட்ச வேகம் உயர்த்தப்பட்டுள்ளது. C 35 01 மற்றும் C 35 02 மாடல்களின் அதிகபட்ச வேகம் முன்பு மணிக்கு 73 கிலோ மீட்டர் ஆக இருந்தது. இப்போது அது மணிக்கு 80 கிலோ மீட்டர் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. C 35 03 மற்றும் C 30 01 மாடல்களின் வேகம் மணிக்கு 63 கிலோ மீட்டரிலிருந்து 70 கிலோ மீட்டர் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம், C 25 01 மாடலின் வேகம் முன்பு 55 கிலோ மீட்டரிலிருந்தது 60 கிலோ மீட்டர் ஆக அதிகரித்துள்ளது. முதன்மை மாடலில், மோட்டாரின் ஆற்றல் 4.5 kW-இலிருந்து 4.8 kW ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அன்றாடப் பயணச் சூழல்களில் இது மேலும் வேகமான செயல்திறனை வழங்குகிறது.

சேடக் EV - சார்ஜ் செய்யும் நேரங்களிலும் மாற்றம்

சேடக்கில் இடம்பெற்றுள்ள பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கான நேர வரம்புகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. C 30 01 இப்போது பூஜ்ஜியத்திலிருந்து 80 சதவிகிதம் வரை சார்ஜ் ஆக வெறும் 2 மணி 55 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. முன்னதாக இதற்கு 3 மணி 50 நிமிடங்கள் தேவைப்பட்டது.  அதாவது, சார்ஜ் செய்ய முன்பை விட கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயனர்களுக்கு மிச்சமாகிறது. ஸ்போர்ட்ஸ் மற்றும் ஈகோ அம்சங்களை உள்ளடக்கிய ரைட் மோட்கள் மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவை முன்பு குறிப்பிட்ட வேரியண்ட்களில் மட்டும் கூடுதல் கட்டணத்தை செலுத்தி பெறும் அம்சங்களாக இருந்தன.


Bajaj Chetak EV: கூகுள் மேப்ஸ், ரைட் மோட்கள், 80KM ஸ்பீட் - பஜாஜ் சேடக்கில் டக்கரான அப்டேட்கள், விலையில் சர்ப்ரைஸ்

சேடக் EV - ஒவர் தி ஏர் அப்டேட்ஸ்

ஆனால் அந்த அம்சங்கள் இப்போது C 35 மற்றும் C 30 சீரிஸ்களில் நிலையானவையாக மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் பயனர்களுக்கு எந்தக் கூடுதல் செலவும் இன்றி அதிக மதிப்பு சேர்க்கப்படுகிறது. ஓவர்-தி-ஏர் அப்டேட்ஸ் திறனும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதனால் C 35 01 மற்றும் C 35 02 மாடல்கள் இப்போது மென்பொருள் மேம்பாடுகள், செயல்திறன் ஆப்டிமைசேஷன் மற்றும் புதிய அம்சங்கள் ஆகியவற்றை சர்வீஸ் செண்டருக்கு செல்லாமலேயே பெற முடியும்.

அதாவது, சாஃப்ட்வேர் தொடர்பான புதுப்பிப்புகளுக்காக சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டிய தேவையை நீக்கி, உரிமையாளர்களுக்கு எந்தவித கூடுதல் சிரமமும் இன்றி ஸ்கூட்டர்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கிறது. வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நேவிகேஷன், செயல்திறன் மற்றும் அம்சங்கள் தொடர்பான கோரிக்கைகள் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதே சமயம், புதிய 'C சீரிஸ்' என்ற பெயரிடல், இனிவரும் காலங்களில் அந்த பிராண்டிற்கு ஒரு தெளிவான தயாரிப்புத் தொகுப்பை வழங்குகிறது.

பஜாஜ் சேடக் மின்சார எடிஷனின் விலை வரம்பானது 91 ஆயிரத்து 504 ரூபாயில் தொடங்கி ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 305 ரூபாய் வரை நீள்கிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Public Grievance Redressal : 30 நாள் தான் டைம்.! பொதுமக்களுக்கு ரிசல்ட் வந்தே ஆகணும்- அரசு அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
30 நாள் தான் டைம்.! பொதுமக்களுக்கு ரிசல்ட் வந்தே ஆகணும்- அரசு அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Embed widget