மேலும் அறிய

பக்தர்கள் கோயிலுக்கு வரவேண்டாம்! - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

மலைப்பாதை சீரமைப்பு செய்யப்படும்வரை யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் என கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

ஆந்திராவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திருப்பதி மலைப்பாதையில் நேற்று மண்சரிவு ஏற்பட்டு மலைப்பாதையில் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மலைப்பாதை சீரமைப்பு செய்யப்படும்வரை யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் என கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் திருப்பதி திருமலைக்கு இடையிலான இரண்டாவது மலைப்பாதையில் பெரிய சேதம் ஏற்பட்டது. அங்கே பெய்துவரும் கணமழை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் வாகன ஓட்டிகள் சுதாரித்துக் கொண்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. திருமலைக்கும் திருப்பதிக்கும் இடையே போக வர இரண்டு மலைப்பாதைகள் உள்ளன. இதற்கிடையே நேற்று முன் தினம் பெய்த கனமழையில் இரண்டாவது மலைப்பாதையில் நேற்று திடீர் மண்சரிவு ஏற்பட்டது. 
சென்னையைக் கடக்கும் காற்று அழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா பகுதிகளின் கரையோரம் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

கன மழை பெய்து வருவதால், திருப்பதி மலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதமோ, உடைமைச் சேதமோ எதுவும் ஏற்படவில்லை. திருப்பதியில் ஏற்பட்ட கன மழை காரணமாகவும், அதனுடன் வந்த சூறாவளிக் காற்றாலும் திருப்பதியில் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது. கோயில் நகரமான திருப்பதி முழுவதும் முழங்கால் அளவுக்கு மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மழையால் பல்வேறு மரங்கள் சாய்ந்துள்ளன. மரங்கள் சாய்ந்திருப்பதால் பல்வேறு பகுதிகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. திருப்பதி முனிசிபல் கார்ப்பரேஷன் சார்பில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. திருப்பதியில் உள்ள பவானி நகர், ஸ்ரீஹரி காலனி, பழைய மகப்பேறு மருத்துவமனை சாலை, கிழக்கு தேவாலயம் சாலை, லட்சுமிபுரம், மதுரா நகர் ஆகிய பகுதிகள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், பழைய மகப்பேறு மருத்துவமனை சாலை, கலிகோபுரம் ஆகிய பகுதிகளில் பெரிய மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்ததால், வாகன ஓட்டிகள் பெருமளவுக்குப் பாதிப்புக்கு உள்ளாகினர். 

திருமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெருமளவில் கன மழை பெய்துள்ளதால், மலைக்குப் பயணிக்கும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பைக் கணக்கில் கொண்டு, திருமலை தேவஸ்தானம் மலைக்குச் செல்லும் சாலையைக் கடந்த நவம்பர் 17 அன்று மூடியுள்ளது. நெல்லூர், சித்தூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை அதிகளவில் பெய்துள்ளது.

தலைப்பு செய்திகள்

நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
Hyundai Cheapest EV: செம்ம ஆஃபர்... ஹூண்டாய் க்ரெட்டா இவி அறிமுகம்- ஒரே சார்ஜில் 500 கிமீ- ரூ.11 லட்சத்துக்கும் கீழே!
Hyundai Cheapest EV: செம்ம ஆஃபர்... ஹூண்டாய் க்ரெட்டா இவி அறிமுகம்- ஒரே சார்ஜில் 500 கிமீ- ரூ.11 லட்சத்துக்கும் கீழே!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
Hyundai Cheapest EV: செம்ம ஆஃபர்... ஹூண்டாய் க்ரெட்டா இவி அறிமுகம்- ஒரே சார்ஜில் 500 கிமீ- ரூ.11 லட்சத்துக்கும் கீழே!
Hyundai Cheapest EV: செம்ம ஆஃபர்... ஹூண்டாய் க்ரெட்டா இவி அறிமுகம்- ஒரே சார்ஜில் 500 கிமீ- ரூ.11 லட்சத்துக்கும் கீழே!
Grand Vitara Hybrid: மாருதியின் 21KM மைலேஜ் தரும் ஹைப்ரிட் கார்..! ரூ.3 லட்சம் தள்ளுபடி, ரூ.6,800 போதுமே, EMI விவரங்கள்
மாருதியின் 21KM மைலேஜ் தரும் ஹைப்ரிட் கார்..! ரூ.3 லட்சம் தள்ளுபடி, ரூ.6,800 போதுமே, EMI விவரங்கள்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
659 கி.மீட்டர் மைலேஜ்.. 52 ஆயிரம் ஆஃபர்! 4 லட்சம் ரூபாய்க்கும் கம்மி விலையில் Maruti Alto K10
659 கி.மீட்டர் மைலேஜ்.. 52 ஆயிரம் ஆஃபர்! 4 லட்சம் ரூபாய்க்கும் கம்மி விலையில் Maruti Alto K10
Embed widget