மேலும் அறிய

Netflix Password: கதை முடிஞ்சுது! இனி பாஸ்வேர்ட்டை பகிர முடியாது.. அதிரடி காட்டிய நெட்ஃபிளிக்ஸ்...குமறும் நெட்டிசன்ஸ்!

இந்தியாவில் இனி நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டுகளை பகிர அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Netflix Password: இந்தியாவில் இனி நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டுகளை பகிர அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நெட்பிளிக்ஸ்:

கொரோனா காலத்திற்கு பிறகு இந்தியாவில் ஓடிடி தளங்கள் அசுற வளர்ச்சி அடைந்தன. அதில், அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற பயன்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்தவகையில், உலக அளவில் மிகவும் பிரபலமான ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. பிரத்யேகமாக பிரமாண்ட செலவில் தயாரிக்கப்பட்டு இந்த செயலியில் வெளியாகும் வெப் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. வருடம் மற்றும் மாதம் என பல்வேறு விதமான சந்தா திட்டங்களை பயன்படுத்தி, நெட்பிளிக்ஸில் வெளியாகும் வீடியோக்களை பயனாளர்கள் கண்டு ரசிக்கலாம்.

பாஸ்வேர்டை பகிரும் பிரச்னை:

அவ்வாறு சந்தா செலுத்தி கோடிக்கணக்கான பயனாளர்கள் வீடியோக்களை பார்த்தாலும், பயனாளரின் பாஸ்வேர்டை பயன்படுத்தி மற்றவர்கள் தங்களது சாதனங்களில் சந்தா செலுத்தியவரின் கணக்கு மூலமாக வீடியோக்களை பார்ப்பது நெட்பிளிக்ஸ் தளத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே கணக்கிற்கு இரண்டு பேர் சேர்ந்து சந்தா செலுத்தி அதனை பயன்படுத்துவது என பல்வேறு வகையில், ஒரே நெட்பிளிக்ஸ் கணக்கு பலரால் பகிர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் 10 கோடிக்கும் அதிகமானோர் நெட்பிளிக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருவதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றனர்.  இதனால் லட்சக்கணக்கான சந்தாதாரர்களை இழந்து, நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் தான் வருவாய் இழப்பை சந்திக்க, நெட்பிளிக்ஸ் நிறுவனம் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது.

அமலுக்கு வந்த புதிய நடைமுறை:

அதன்படி, ஒரே வீட்டில் வசிக்கும் நபர்களால் மட்டுமே இனி நெட்பிளிக்ஸ் கணக்கிற்கான பாஸ்வேர்டை பகிர முடியும். வேறு நபர்களுடன் பாஸ்வேர்டை பகிர்ந்தால் பயனாளர்களிடமிருந்து அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமல்படுத்தியது நெட்பிளிக்ஸ். இதுகுறித்து நெட்பிளிக்ஸ் கூறியதாவது, நெட்பிளிக்ஸ் கணக்கை ஒரு குடும்பம் மட்டும் பயன்படுத்துவதற்குரியது. ஒரு வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் எங்கிருந்தாலும் ஒரு நெட்பிளிக்ஸ் தளத்தை பயன்படுத்தலாம். அதாவது, வீட்டில், பயணத்தில், விடுமுறையில் எங்கிருந்தாலும் பயன்படுத்தலாம் என்று நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறினர். 

காரணம் என்ன?

முன்னதாக  கடந்தாண்டில் நெட்பிளிக்ஸ் 238 மில்லியன் சந்தாதாரர்கள் மற்றும் 1.5 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளது. ஆனால் இந்த ஆண்டில், 2 லட்சம் வாடிக்கையாளர்களை நெட்பிளிக்ஸ் இழந்துள்ளதால் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் தனது வருவாயை அதிகரிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், நெட்பிளிக்ஸ் தளத்தில் இனி விளம்பரங்களை கொடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது விளம்பரம் வராமல் பார்ப்பதற்கு அமெரிக்காவில் மாதத்தில் 10 டாலர் செலுத்த வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
Ali Khamenei Sons Crying Video: டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
Ali Khamenei Sons Crying Video: டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் கார் இன்னும் குறைவா.. ரூ.1.45 லட்சம் தள்ளுபடி: மிஸ் பண்ணிடாதீங்க!
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் கார் இன்னும் குறைவா.. ரூ.1.45 லட்சம் தள்ளுபடி: மிஸ் பண்ணிடாதீங்க!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
Embed widget