பெண்கள் விவேகத்திற்கு மட்டுமின்றி வேகத்திற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அந்த வகையில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கார் ரேஸ், பைக் ரேசில் அசத்தி சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவின் முதல் பெண் ரேசிங் சாம்பியன் என்ற பட்டம் பெற்றவர்தான் அலிஷா அப்துல்லா. 


சென்னையில 1989ம் வருஷம் பிறந்தவங்கதான் நம்ம அலிஷா அப்துல்லா. அலிஷாவோட அப்பா அப்துல்லா ஒரு racer அப்படிங்குறதால அவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே ரேசிங்ல ஆர்வம் பிறந்துருச்சு.. தன்னோட 8 வயசுலயே அவங்க அப்பாவோட சேர்ந்து டிராக்ல அலிஷா ரேசுக்கு ப்ராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சாங்க..  ரேஸ் டிராக்ல ப்ராக்டீஸ் பண்ண ஆலிஷா முதன்முறையா போனப்ப Go Kart வண்டியோட engine-ல அவங்ளோட முடி மாட்டிகிச்சு.. அதுனால அவங்க அப்பா அவங்களோட முடியை வெட்ட வைச்சுட்டாரு.. அப்போ ரொம்ப சின்ன பொண்ணா இருந்த அலிஷா முடியை வெட்டுனதுக்காக ரொம்ப நேரம் அழுதுருக்காங்க..




பார்முலா ரேஸ்களில் பயன்படுத்தப்பட்ற Go Karting ரக கார்களை வச்சு MRF நடத்துன ரேஸ்ல தன்னோட 9 வயசுலயே அலிஷா ஜெயிச்சாங்க.. பைக் ரேஸ், கார் ரேஸ்னு ரெண்டு மேலயும் ரொம்ப ஆர்வமா இருந்த அலிஷா தொடர்ச்சியா ரெண்டுலயுமே தீவிர பயிற்சி எடுத்தாங்க..  தான் ஒரு பொண்ணு அப்டிங்குறதால பொண்ணுங்க கூட மட்டும்தான் ரேஸ் ஓட்டுவேனு இல்லாம, பசங்க கூட நெறய ரேஸ்ல participate பண்ணி அவங்களையும் தோற்கடிச்சாங்க… அலிஷாவோட 18 வயசுல அவங்க அப்பா அப்துல்லா 600 cc பைக்கை கிப்டா வாங்கிக் கொடுத்து அவங்க திறமையை ஊக்கப்படுத்துனாரு..


அலிஷாவோட திறமைக்கு கிடைச்ச பரிசா இந்தியாவோட முதல் Female Superbike Champion பட்டத்தை ஜெயிச்சு பல பெண்களுக்கும் உதாரணமா இருந்தாங்க.. Volkswagen National Polo Cup, National Road Racing Championship அப்படினு இந்தியாவுலயே ஏராளமான tournament-ல participate பண்ணாங்க.. ஒரு முறை பைக் ரேஸ்ல இருந்தப்ப அலிஷா ரொம்ப மோசமான accident ல சிக்கிட்டாங்க… 2 மணி நேரம் unconscious-ஆ இருந்தாங்க..  அந்த விபத்துக்கு பிறகு நிறைய பேரு race-ல இருந்து விலகிடுனு அலிஷாவுக்கு advice பண்ணிருக்காங்க.. ஆனாலும், அலிஷா தன்னோட தன்னம்பிக்கையால குணமாகி வந்து திரும்பவும் ரேஸ்ல participate பண்ணாங்க..




பைக் ரேஸ்ல மட்டும் participate பண்ணிட்டு வந்த அலிஷா car race-லயும் பங்கேற்க முடிவு பண்ணாங்க.. அதுக்கான தீவிர பயிற்சியை எடுத்துகிட்ட ஆலிஷா 2015ம் வருஷம் தாய்லாந்துல நடந்த female car race-ல கலந்துகிட்டாங்க.. ஆசியாவுல இருக்குற பெஸ்ட் 25 female racer இந்த போட்டியில கலந்துகிட்டாங்க..  அதுல 5வது இடத்தை பிடிச்சும் ஆலிஷா அசத்துனாங்க… சர்வதேச அளவுல இந்தியாவுல இருந்து race-ல கலந்துகிட்ட FIRST INDIAN FEMALE RACER அப்படிங்குற பெருமையும் ஆலிஷாவுக்குதான் இருக்குது…


அலிஷாவோட லட்சியமே இந்தியாவுல ஏராளமான female racers-ஐ உருவாக்கனுங்குறுதான்.. இதுக்காக தன்னோட பெயர்லயே ஒரு academy-யை நடத்திகிட்டு வர்றாங்க.. இந்த அகாடமியில பொண்ணுங்களுக்கு பைக் ரேஸ்ல participate பண்றதுக்கு full practice கொடுக்குறாங்க..  அலிஷாவுக்கு அவங்க அப்பா எப்படி ஒரு குருநாதரோ, அதேபோல நம்ம அஜீத்சாரை தன்னோட godfather-னு தான் சொல்றாங்க..




அஜீத் சார் சின்ன வயசுல மெக்கானிக் ஷெட்ல ஒரு குழந்தையோட இருக்குற மாதிரி போட்டோஸ் எல்லாரும் பாத்துருப்போம்.. அந்த போட்டோவுல அஜீத் சார்கூட இருக்குற அந்த சின்ன குழந்தை ஆலிஷாதான்.. அப்போ இருந்தே அஜீத் சார் அலிஷாவோட பேமிலி ப்ரண்டா இருக்காரு.. அலிஷா தமிழ்ல இரும்புக்குதிரைனு ஒரு படம்கூட நடிச்சுருக்காங்க…
தான் மட்டும் பைக், கார் ரேஸ்ல சாதிக்கணும்னு நினைக்காம இந்தியாவுல ஏராளமான racer-களை உருவாக்கனும் அப்படிங்குற உன்னத நோக்கத்தோட செயல்பட்ற அலிஷா நிச்சயமா இந்தியாவிற்காக ஏராளமான racer-களை உருவாக்க வாழ்த்துக்கள்..!


மேலும் படிக்க : Untold Stories 19 : இந்தியாவிற்காக காமன்வெல்த்தில் முதல் தங்கம்.. பயிற்சி முதல் பதக்கம் வரை.. யார் இந்த ரூபா உன்னிகிருஷ்ணன்?


மேலும் படிக்க : Untold Stories Episode 18 : ரிக்‌ஷா ஓட்டுனர் மகள் டூ உலக சாம்பியன்..! கேரமில் கோலோச்சிய சென்னைப் பெண்...!