விளையாட்டுத்துறையில் இந்தியாவிற்கு பல முறை மகுடங்களை சூடி அழகுப்பார்த்ததில் பெண்களின் பங்கு அளவிட முடியாதது. அதிலும், பல விளையாட்டுகளில் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு கிரீடங்களை சூட்டி அழகுப்பார்த்ததில் தமிழக வீராங்கனைகள் பங்கு தவிர்க்க முடியாதது. கேரம் விளையாட்டில் உலக அளவில் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்தான் நமது இளவழகி.


சென்னை, வியாசர்பாடியில 1984ம் வருஷம் ஒரு ஏழ்மையான குடும்பத்துல பிறந்தவங்கதான் இளவழகி. இவங்க அப்பா இருதயராஜ். அவர் ஒரு பட்டதாரியா இருந்தாலும், அப்போ இருந்த காலகட்டத்துல அவருக்கு சரியான வேலை கிடைக்கல. அதுனால அவர் ரிக்ஷா ஓட்டுனாரு. இருதயராஜ் நல்ல கேரம் ப்ளேயர். ஆனாலும், அவருக்கு தன்னோட திறமையை வெளிக்காட்ட நல்ல வாய்ப்பு அமையல. 




இருதயராஜூக்கு மொத்தம் மூணு பொண்ணுங்க.. அவங்கள்ல முதல் பொண்ணுதான் இளவழகி. தனக்கு தெரிஞ்ச carom  விளையாட்டை தன்னோட பொண்ணுங்களுக்கும் இருதயராஜ் சொல்லிக்கொடுத்தாரு. கண்டிப்பா இந்த carom game தன்னோட பொண்ணுங்களுக்கு பெரியளவு சப்போர்ட்டா இருக்கும்னு இருதயராஜ் நம்புனாரு.. அவரோட நம்பிக்கை உலகளவுல ஜெயிக்கும்னு அவருக்கு அன்னைக்கே தெரிஞ்சுருக்கும்போல…


இளவழகிக்கு முதல் குரு அவங்க அப்பா இருதயராஜ்தான். இளவழகிக்கு கேரம் விளையாட்டுல இருக்குற ஆர்வத்தை பாத்த அவங்க அப்பா இருதயராஜ், அவங்களுக்கு proper ah practice  கொடுக்க ஆசைப்பட்டாரு. ஆனா, இளவழகியோட வீடு ரொம்ப சின்னதா இருந்ததால அவங்க வீட்ல கேரம் practice பண்ண முடியாம போயிடுச்சு…இதுனால, இருதயராஜ் தன்னோட நண்பர் ஆறுமுகமோட வீட்டுக்கு தன்னோட பொண்ணுங்களை தினமும் கூப்பிட்டு போயி பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சாரு..




இளவழகியோட திறமையால school level competition-ல இளவழகியோட ஸ்கூல் ஜெயிச்சது.. இளவழகியை பாராட்டி அவங்க head mistress, P.ed. டீச்சர் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு கேரம்போர்டை அவங்களுக்கு பரிசா கொடுத்தாங்க.. அதுக்கு அப்புறம் இளவழகி இன்னும் தீவிரமா பயிற்சி எடுத்தாங்க.. தன்னோட தீவிர பயிற்சி மூலமா அடுத்தடுத்து வெற்றிகளை குவிச்ச இளவழகிக்கு state level competitonல விளையாட வாய்ப்பு கிடைச்சது…


1996ம் வருஷம் மதுரையில நடந்த sub junior tournament-ல இளவழகி விளையாடுனாங்க.. தன்னோட திறமையால கேரம் போட்டியில இந்திய அளவுல தவிரக்க முடியாத வீராங்கனையா இளவழகி வளர்ந்து நின்னாங்க… அவங்களுக்கு 2003வது வருஷம் அமெரிக்காவுல போயி விளையாடுறதுக்கான அற்புதமான வாய்ப்பு கிடைச்சது.. ஆனா, 76 ஆயிரம் இருந்தாதான் அமெரிக்கா போக முடியுங்குற நிலைமை ஏற்பட்டுச்சு.. sponsor தேடி இளவழகி எல்லா இடமும் அலைஞ்சாங்க.. கடைசியில ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியோட உதவியால அவங்களுக்கு அமெரிக்கா போக வாய்ப்பு கிடைச்சது…




அந்த tournament-ல BEST WOMEN PLAYER award இளவழகிக்கு கிடைச்சது..  2008ம் வருஷம் national carrom championship சென்னையில நடந்துச்சு.. அந்த தொடர்ல முன்னாள் உலக சாம்பியன் ராஷ்மிகுமாரியோட final-ல இளவழகி விளையாடுனாங்க.. அந்த மேட்ச்ல பிரமாதமா ஆடி முதன்முறையா national carrom champion பட்டத்தை ஜெயிச்சாங்க..  அதே வருஷம் France நாட்டுல world carrom championship tournament  நடந்துச்சு.. இந்த தொடர்ல விளையாடுறதுக்கு இளவழகிக்கு வாய்ப்பு கிடைச்சது..  இந்த தொடர் தொடங்குனதுல இருந்தே இளவழகி சிறப்பா விளையாடிகிட்டு வந்தாங்க.. semi final-ல ராஷ்மி குமாரியை தோற்கடிச்சு..


இறுதிப்போட்டிக்கு முன்னேறுனாங்க.. இறுதிப்போட்டியில இளவழகியோட மற்றொரு இந்திய வீராங்கனை நிர்மலா மோதுனாங்க.. ஆனாலும், இளவழகி 25-11, 25-11 அப்படிங்குற கணக்குல நிர்மலாவை தோற்கடிச்சு.. முதன்முறையா உலக கேரம் சாம்பியன் பட்டத்தை ஜெயிச்சாங்க.. மொத்தத்துல 2008ம் வருஷம் இளவழகிக்கு ரொம்பவே சந்தோஷமான வருஷமா அமைஞ்சது.. 2010-ல அமெரிக்காவுல worldcup carrom tournament நடந்தது. அந்த போட்டியிலயும் விளையாடுறதுக்கு இளவழகிக்கு வாய்ப்பு கிடைச்சது… தமிழ்நாட்டுல இருந்து இளவழகியோட 3 வீராங்கனைகள் விளையாட போயிருந்தாங்க… அந்த tournament-ல ஒற்றையர் பிரிவுல சாம்பியன் பட்டம் அடிச்சது மட்டுமில்லமா, இரட்டையர் பிரிவுலயும் இளவழகி சாம்பியன் பட்டம் ஜெயிச்சு அசத்துனாங்க.. 




National champion, asia champion, இரண்டு முறை world championனு கேரம் விளையாட்டுல தனி ராஜாங்கமே நடத்துன இளவழகி தன்னோட கேரம் திறமை தனக்கு அப்புறமும் தொடரனும் அப்படிங்குற நோக்கத்துல மாணவர்களுக்குனு ஒரு தனி பயிற்சி அகாடமியை தொடங்கி நடத்திட்டு வர்றாங்க… ஒரு சாதாரண குடும்பத்துல பிறந்து உலகளவுல இந்தியாவுக்கு பெருமை சேத்த தமிழ்நாட்டு சிங்கப்பெண் இளவழகியைப் போல பல இளவழகிகள் உருவாக்கனும் அப்படிங்குற அவங்க லட்சியம் வெற்றிபெற வாழ்த்துக்கள்..!


இன்னும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை அடுத்தடுத்த எபிசோட்களில் தெரிந்து கொள்ளலாம், 


மேலும் படிக்க : Untold Stories Episode 17: பெருங்கடல்களின் பேரரசன்..! நீச்சல் உலகின் சக்கரவர்த்தி..! யார் இந்த மிஹிர்சென்..!


மேலும் படிக்க : Untold Stories Episode 16: தடை அதை உடை...! எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இந்திய பெண் பச்சேந்திரி பால்..!