Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: இறுதிவரை போராட்டம்; தமிழ் தலைவாஸை தட்டித் தூக்கி ஹரியானா வெற்றி

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: ப்ரோ கபடி லீக் 10வது சீசனில் தமிழ் தலைவாஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபிநாடு தளத்தில் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 14 Jan 2024 09:05 PM
Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: ஹரியானா வெற்றி

தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹரியானா அணி 36 - 31 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: 30 புள்ளிகளைக் கடந்த ஹரியானா

ஹரியானா அணி 31 புள்ளிகள் எடுத்து தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: டிஃபெண்டிங்கில் அசத்தல்

தமிழ் தலைவாஸ் அணி டிஃபெண்டிங்கில் அசத்தி புள்ளிகள் எடுத்து வருகின்றது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: 20 புள்ளிகளை கடந்த தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி 22 புள்ளிகள் எடுத்து ஹரியானா அணிக்கு எதிரான புள்ளிகள் வித்தியாசத்தினை குறைத்து வருகின்றது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: மிரட்டிவிட்ட சூப்பர் டேக்கிள்

தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக சூப்பர் டேக்கிள் செய்து 2 புள்ளிகள் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: தொடங்கியது கடைசி 10 நிமிடங்கள்

போட்டியின் கடைசி 10 நிமிடங்கள் தொடங்கியது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: 30 நிமிடங்கள் முடிந்தது

போட்டியின் 30 நிமிடங்கள் முடிந்தது. இதில் ஹரியானா அணி 27 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 19 புள்ளிகள் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: சூப்பர் டேக்கிளில் புள்ளியை எட்டிய தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி சூப்பர் டேக்கிளில் 2 புள்ளிகள் எடுத்து 18 புள்ளிகளை எட்டியுள்ளது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: முன்னேறி வரும் தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் 3 புள்ளிகள் எடுத்துள்ளது. ஆனால் ஹரியானா அணியும் 3 புள்ளிகள் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: முன்னிலையில் ஹரியானா

முதல் பாதி ஆட்டம் முடிந்ததும் ஹரியானா அணி 22 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகளும் எடுத்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் 10 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: முடிந்தது முதல் பாதி

முதல் பாதி ஆட்டம் முடிந்தது. இதில் ஹரியானா அணி முன்னிலை வகிக்கின்றது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: 10 புள்ளிகள் எடுத்த தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி 10 புள்ளிகள் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: 20 புள்ளிகளைக் கடந்த ஹரியானா

ஹரியானா அணி 21 புள்ளிகள் எடுத்துள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 9 புள்ளிகள் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: 10 புள்ளிகள் வித்தியாசம்

போட்டியின் 14 நிமிடங்கள் முடிந்தபோது ஹரியானா அணி 18 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 8 புள்ளிகளும் எடுத்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் 10 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: ஆல் அவுட் ஆன தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி ஆல் அவுட் ஆகியுள்ளது. இதனால் ஹரியானா அணி 16 புள்ளிகள் எடுத்துள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 8 புள்ளிகளில் உள்ளது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: முன்னிலையில் ஹரியானா

இரண்டாம் 10 நிமிடங்கள் தொடங்கியதும் ஹரியானா அணி 2 புள்ளிகள் எடுத்து தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: முதல் 10 நிமிடங்கள் முடிந்தது

போட்டியின் முதல் 10 நிமிடங்கள் முடிந்தது. ஹரியானா அணி 9 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 8 புள்ளிகளும் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: டிஃபெண்டிங்கில் அசத்தும் தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபெண்டர்கள் சிறப்பாக விளையாடி வருவதால் ஹரியாணா அணிக்கு தொல்லை ஏற்பட்டுள்ளது.  தற்போது இரு அணிகளும் தலா 8 புள்ளிகள் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: 6 புள்ளிகளை எட்டிய தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி 6 புள்ளிகள் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: தமிழ் தலைவாஸ் அணி ரிவ்யூவில் ஒரு புள்ளியை தட்டித் தூக்கியது

தமிழ் தலைவாஸ் அணி தனது 4வது புள்ளியை ரிவ்யூ மூலம் எட்டியுள்ளது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: அடித்து நொறுக்கும் ஹரியானா

ஹரியானா அணி 5 புள்ளிகள் எடுத்து முன்னிலையில் உள்ளது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: மூன்று புள்ளிகளில் அணிகள்

ஹ்ரியானா ம்ற்றும் தமிழ் தலைவாஸ் அணி போட்டி தொடங்கிய முதல் 4 நிமிடங்களில் தலா 3 புள்ளிகள் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: நரேந்தர் அவுட்

தமிழ் தலைவாஸ் அணியின் நரேந்தரை வெளியேற்றியது ஹரியாணா. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: முதல் புள்ளியை எடுத்த தமிழ் தலைவாஸ்

போட்டியின் முதல் புள்ளியை தமிழ் தலைவாஸ் அணி எடுத்துள்ளது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: தொடங்கிய ஆட்டம்

தமிழ் தலைவாஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான போட்டி தொடங்கியது. 

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: இன்றைய போட்டிக்கான தமிழ் தலைவாஸ் அணி

தமிழ் தலைவாஸ்: நரேந்தர், அஜிங்க்யா பவார், சதீஷ் கண்ணன், எம் அபிஷேக், மோஹித், சாகர், சாஹில் குலியா

Tamil Thalaivas vs Haryana Steelers LIVE: களமிறங்கும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி

ஹரியானா ஸ்டீலர்ஸ்: சந்திரன் ரஞ்சித், வினய், கே பிரபஞ்சன், மோஹித் நந்தல், ஜெய்தீப் தஹியா, ராகுல் சேத்பால், மோஹித்

Background

ப்ரோ கபடி:


10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றனஇதில், தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தமிழ் தலைவாஸ் அணி கடந்த ஜனவரி 10 ஆம் தேதி உ.பி.யோத்தாஸ் அணிக்கு எதிரான போட்டியில், 19 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிக்கணக்கை தொடங்கியது தமிழ் தலைவாஸ் அணி.


 


அந்த வகையில் உ.பி.யோத்தாஸ் அணியின் நட்சத்திர ரெய்டர் பர்தீப் நார்வாலை சுமார் எட்டு முறை தடுப்பாட்டம் மூலம் அவுட் செய்து அசத்தி இருந்தது தமிழ் தலைவாஸ் அணி. மேலும், தமிழ் தலைவாஸ் அணியின் முக்கிய ரெய்டரான நரேந்தர் சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளை அள்ளினார். அந்த வகையில் உ.பி.யோத்தாஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் 11 ரெய்டுகள் சென்ற அவர் 3 போனஸ் புள்ளிகளுடன் 14 புள்ளிகளை பெற்று அசத்தி இருந்தார்.


அதேபோல், சாகர் 6 டேக்கில் மற்றும் ஷாஹில் சிங் 5 டேக்கில் என எடுத்து அசத்தினார்கள். அஜங்யா பவர் 4 ரெய்டுகள் சென்று 6 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம்தான் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி கணக்கை தொடங்க முடிந்தது. இதனிடையே, 11 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 8 போட்டிகளில் தோல்வி பெற்றிருந்தாலும் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 19 புள்ளிகளை பெற்றிருக்கிறது.


பழி தீர்க்குமா தமிழ் தலைவாஸ்?


தமிழ் தலைவாஸ் அணியின் இந்த வெற்றியின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றி கணக்கை தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி இன்று  ஜனவரி 14 ஆம் தேதி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர் கொள்கிறது


 


முன்னதாக, இதுவரை 11 போட்டிகள் விளையாடியுள்ள ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்திருக்கிறது. அந்த வகையில் 34 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் இருக்கிறது. ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியில் டேக்கில் புள்ளிகளை பெறுவதில் ஜெய்தீப் வழுவாக இருக்கிறார். அதேபோல், ரெய்டர் வினய் மற்றும் சித்தார்த் தேசாய் ஆகியோர் அந்த அணியில் வலுவாக இருக்கின்றனர். இதனிடையே, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக தாங்கள் விளையாடிய கடைசி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கும் தமிழ் தலைவாஸ் இன்றைய போட்டியில் பழிக்குபழி தீர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


மேலும் படிக்க: Yuvraj Singh: இந்தியாவுக்கு திறமை இருக்கு; ஆனாலும் தோல்வி ஏன்? - ஆலோசகராக விரும்பும் யுவராஜ் சிங்!


 


மேலும் படிக்க: Ind vs Afg 2nd T20I: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி... அந்த ரெண்டு பேருக்கு வாய்ப்பு கொடுங்க! ரெய்னா வைத்த கோரிக்கை!


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.