சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.26) விடுமுறை அளிக்கப்படுமா என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பரவலாக மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


நாளை புயலாக மாறுகிறது


வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வு மையம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மையமாக உருமாறி உள்ளது. நாளை (நவ.27) புயலாகவும் உருமாற உள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இதையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்


அதேபோல மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் அதி கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா?


இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே புயலை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து, விடுமுறை அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதையும் வாசிக்கலாம்: Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!