உலக அளவில் கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கிய ஸ்பெயின் நாட்டின் லாலிகா கால் பந்தாட்ட பயிற்சி நிறுவனம் தேனி மாவட்டத்தில் தனியார் பள்ளியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. எட்டு வயதிற்கு மேற்பட்ட   பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி சிறந்த கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
                                                   
ஸ்பெயின் நாட்டில் நூறாண்டுகளுக்கு மேலாக கால் பந்தாட்ட பயிற்சி வழங்கி உலக அளவில் கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கிய லாலிகா கால்பந்தாட்ட பயிற்சி மையம் இந்தியாவிலும் பல்வேறு தனியார் பள்ளிகளில் ஒப்பந்தம் போட்டு கால்பந்தாட்ட பயிற்சி வழங்கி வருகிறது.


ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!




இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் செயல்படும் கல்வி குழும பள்ளியுடன் ஸ்பெயின் நாட்டின் லாலிகா கால்பந்து பயிற்சி மையம் ஒப்பந்தம் போடப்பட்டு இன்று துவக்க விழா நடைபெற்றது. இதில் லாலிகா கால்பந்தாட்ட பயிற்சி மையத்தின் தொழில்நுட்ப பயிற்சியாளர் மிகுவல் காசல் பெரியகுளத்தில் உள்ள கல்வி குழும பள்ளிக்கு வருகை தந்து குத்துவிளக்கேற்றி லாலுகா கால் பந்தாட்ட பயிற்சி மையத்தின்  பயிற்சி குறித்து விளக்கி கூறினார்.


Tirupati Laddu Row: ’திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது’- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!


இதனைத் தொடர்ந்து அப்பள்ளியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் எட்டு வயதிற்கு மேல் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சியை துவக்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கால்பந்தாட்ட  முதற்கட்ட பயிற்சியை வழங்கினார். இதில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கால்பந்தாட்ட பயிற்சி மேற்கொண்டனர்.




Udhayanidhi Pawan Kalyan: சனாதன தர்மம் - சாபம் விட்ட பவன் கல்யாண், துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, லாலிகா கால்பந்தாட்ட பயிற்சி மையம் ஸ்பெயின் நாட்டில் நூறாண்டுகளாக இயங்கி வருவதோடு இந்தியாவில் இதுவரையில் 22 பள்ளிகளில் பயிற்சி மையங்களை துவங்கி உள்ளதாகவும், இந்தியாவில் புனேவை சேர்ந்த காஜல் டிசோச என்ற பெண் லாலிகா அகடமியில் பயிற்சி மேற்கொண்டு 19 வயதிற்கு உட்பட்ட உலகக் கோப்பை  கால்பந்தாட்ட போட்டியில்  இந்தியாவின் சார்பாக பங்கேற்றவர் என்பதை தெரிவித்ததோடு உலக அளவில் பல்வேறு கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கிய  லாலிகா கால்பந்தாட்ட கழகம்  இந்தியாவிலும் சிறந்த வீரர்களை உருவாக்க திட்டமிட்டு பயிற்சி துவங்கி உள்ளதாக தெரிவித்தார்.