இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேரடிக் களத்துக்கு ABP News சென்றுள்ளது. அங்கிருந்து நமது மூத்த செய்தியாளர் ஜக்வீந்தர் பாட்டியால் தரும் நேரடி தகவல்கள்:


இஸ்ரேல் மீண்டும் தனது தாக்குதலைத் தொடங்கி உள்ளது. லெபனானின் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா முன்னாள் தலைவர் ஹஸ்ஸன் நஸ்ரல்லாவின் சகோதரர் ஹஷெம் சைஃபுதீன் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


கடந்த மாதம் ஹஸ்ஸன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்ட பிறகு, சைஃபுதீனே தலைவராகப் பொறுப்பேற்கத் திட்டமிட்டிருந்தார். 




இஸ்ரேலின் தரை மற்றும் வான்வழித் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 151 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனானின் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. லெபனான் ராணுவ வீரர்கள் இருவரும் இதில் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கான காரணம் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை.






செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த 4 தன்னார்வலர்களும் தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கவில்லை. எனினும் தனது படைகள் எல்லையோரத்தில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளைக் கொலை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் ஈரானும் இஸ்ரேலியப் படைகளைக் குறிவைத்ததாகத் தெரிவித்துள்ளது.


 



இந்த நிலையில், ABP News செய்தியாளர் ஜக்வீந்தர் பாட்டியால் பேசிக் கொண்டிருக்கும்போது பின்னால் வெடிக்கும் குண்டுகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. எனினும் எதற்கும் அஞ்சாமல், அவர் தொடர்ந்து செய்திகளை வழங்குகிறார்.


இஸ்ரேல் போர் குறித்த அடுத்தடுத்த தகவல்களையும் செய்திகளையும் உடனுக்குடன் காண ABP News உடன் இணைந்திருங்கள்.