பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33வது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை முதல் பதக்கத்தை துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் வென்றார். அதாவது 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார். 


இந்நிலையில் இன்று (ஜூலை 30) 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. அந்தவகையில் மனு பாக்கர் யார் என்பதை Manu Bhaker:டோக்கியோவில் ஜஸ்ட் மிஸ்..பாரீஸில் நனவாகிய கனவு! யார் இந்த சிங்கப்பெண் மனு பாக்கர்?பார்த்தோம்.  தற்போது சரப்ஜோத் சிங் யார் என்று இந்த தொகுப்பில் பார்ப்போம்:


கால்பந்து டூ துப்பாக்கிச்சுடுதல்:


ஹரியானா மா நிலத்தில் உள்ள தீன் என்ற சிறிய கிராமத்தில் 2001 ஆம் ஆண்டு பிறந்தவர் சரப்ஜோத் சிங். இவரது தந்தை ஜதீந்தர் சிங் விவசாயி. தாயார் ஹர்தீப் கவுரின் இல்லத்தரசி. தனது கல்லூரி படிப்பை சண்டிகரில் உள்ள டி.ஏ.வி கல்லூரியில் முடித்தவர். தனது கல்லூரி படிப்பிற்கு பின்னர் துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியை அபிஷேக் ராணாவிடம் பெற்றார்.


கல்லூரி படிப்பதற்கு முன்னர் அவருடைய 13 வயது வரை கால்பந்து மீது தான் ஈர்ப்புடன் இருந்திருக்கிறார். ஒரு முறை அங்கே நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் போட்டியை நேரில் பார்க்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து இருக்கிறது.


கால்பந்து வீரராக ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்த சரப்ஜோத் சிங்கிற்கு துப்பாக்கிச்சுடுதல் வீரராக மாற வேண்டும் என்ற ஆசை துளிர்த்து இருக்கிறது. இதனைத்தொடர்ந்து தனது தந்தையிடம், "அப்பா, நான் ஷூட்டிங் தொடர விரும்புகிறேன்" விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.


அதற்கு அவரது தந்தை ஜிதேந்தர் சிங், "விவசாய குடும்பத்தில் பிறந்த நமக்கு இந்த விளையாட்டு சரிபட்டு வராது" என்று கூறியிருக்கிறார். ஆனால் சரப்ஜோத் சிங் தொடர்ந்து தன் தந்தையிடம் வலியுறுத்தி இருக்கிறார். ஒரு வழியாக அவரது தந்தை இதற்கு ஒப்புதல் அளிக்க துப்பாக்கிச்சுடுதலில் களம் இறங்கினார் சரப்ஜோத் சிங் .இதனைத்தொடர்ந்து 2019 இல் நடந்த ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.


சரப்ஜோத் சிங்கின் பதக்கங்கள் மற்றும் சாதனைகள்:


ஆசிய விளையாட்டுப் போட்டி 2022: குழுப் போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் கலப்பு அணிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்.


ஜூனியர் உலகக் கோப்பை 2022: குழு போட்டியில் 1 தங்கப் பதக்கம் மற்றும் தனிநபர் மற்றும் கலப்பு குழு போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள்


ஆசிய சாம்பியன்ஷிப் 2023 கொரியா: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் போட்டியில் வெண்கலப் பதக்கம்


ISSF உலகக் கோப்பை 2023 போபால்: தனிநபர் போட்டியில் தங்கப் பதக்கம்


உலகக் கோப்பை 2023 : கலப்பு குழு போட்டியில் தங்கப் பதக்கம்


ஒலிம்பிக்கில் இதுவரை துப்பாக்கிச்சுடுதலில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்:


ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் - ஆண்கள் இரட்டை டிராப் - வெள்ளி - ஏதென்ஸ் 2004


அபினவ் பிந்த்ரா - ஆண்கள் 10மீ ஏர் ரைபிள் - தங்கம் - பெய்ஜிங் 2008


ககன் நரங் - ஆண்கள் 10 மீ ஏர் ரைபிள் - வெண்கலம் - லண்டன் 2012


விஜய் குமார் - ஆண்களுக்கான 25 மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் - வெள்ளி - லண்டன் 2012


மனு பாக்கர் - பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் - வெண்கலம் - பாரிஸ் 2024


மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் கலப்பு அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் - வெண்கலம் -பாரீஸ் 2024