ஹெடிங்லியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய ரசிகர்களுக்கு மற்றொரு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
ஹெடிங்லி டெஸ்ட்:
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது, முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் பேட்டிங் அபாரமாக இருந்தது. இந்தியா நிர்ணயித்த 371 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. நான்காவது இன்னிங்ஸில், இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளுக்காக மிகவும் சிரமப்பட்டனர்
பும்ரா குறித்து கம்பீரின் பெரிய அப்டேட்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பத்திரிகையாளர் சந்திப்பில் ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமை குறித்து ஒரு முக்கிய தகவலை வழங்கினார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார் என்று கம்பீர் கூறினார். ஜஸ்ஸி இந்திய அணியில் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இருப்பார் என்றும், இந்திய அணி அவர் இல்லாமல் 2 போட்டிகளில் விளையாடும் என்றும் பயிற்சியாளர் கூறினார்.
முதல் டெஸ்ட் போட்டியில், பும்ரா மட்டுமே ஓரளவுக்கு ஃபார்மில் தெரிந்த ஒரே பந்து வீச்சாளர். பும்ரா முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ராவைத் தவிர, மற்ற பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினப்பட ஒருபுறம் , ரன்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர். இருப்பினும், மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் எந்த இரண்டில் பும்ரா அணியின் ஒரு பகுதியாக இருப்பார் என்பதை கம்பீர் தெளிவுபடுத்தவில்லை.
மோசமான சாதனை:
நான்காவது இன்னிங்ஸில் இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்கத் திணறினர். 42 ஓவர்களுக்குப் பிறகு இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்தது. ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் முதல் விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்தனர். கிராலி-டக்கெட் கூட்டணி இந்திய அணியை போட்டியில் இருந்து முற்றிலுமாக தூக்கி எரிந்தனர். 19 ஓவர்கள் வீசிய போதிலும், பும்ராவால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. அதே நேரத்தில், சிராஜின் விக்கெட் எடுக்காமல் இருந்தார். 148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஐந்து சதங்கள் அடித்த போதிலும் ஒரு அணி தோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறை. இந்த அவமானகரமான சாதனை இப்போது இந்திய அணியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது .