PR Sreejesh: பை பை 16! ஸ்ரீஜேஷ் ஜெர்சி எண்ணுக்கு நிரந்தர ஓய்வு!

இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷை கவுரவிக்கும் வகையில் அவரது ஜெர்சி எண் 16க்கு ஓய்வு அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.

Continues below advertisement

பாரீஸ் ஒலிம்பிக் 2024:

பாரீஸ் ஒலிம்பிக் 2024 ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தது. கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்று இருந்தது. இச்சூழலில் தான் பாரீஸ் ஒலிம்பிக் தொடருடன் சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ஸ்ரீஜேஷ் அறிவித்தார். இந்நிலையில் அவரை கவுரவிக்கும் வகையில் ஹாக்கி இந்தியா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

ஸ்ரீஜேஷ் ஜெர்சிக்கு ஓய்வு:

அதாவது, ஸ்ரீஜேஷ் பயன்படுத்திய ஜெர்சி எண் 16 ஆம் நம்பருக்கு ஓய்வு அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஹாக்கி இந்தியா செயலாளர் போலா நாத் சிங், "பிஆர் ஸ்ரீஜேஷ் ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக அவரது பணியை தொடர்வார். அவரை கவுரவிக்கும் வகையில் இந்திய ஹாக்கி சீனியர் அணியில் 16ஆம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.

அதேநேரம் ஜூனியர் ஹாக்கியில் 16ஆம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்கப்படவில்லை. ஜூனியர் ஹாக்கி அணியில் அவரைப் போன்ற ஒருவர், ஸ்ரீஜேஷின் 16ஆம் எண் ஜெர்சியை அணிந்து வருவார்"என்று கூறியுள்ளார். முன்னதாக ஓய்வுக்கு பின்னர் இந்திய ஹாக்கி அணியை பயிற்சியாளராக தொடர்ந்து வழிநடத்த விரும்புவதாக ஸ்ரீஜேஷ் விருப்பம் தெரிவித்து நிலையில் ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola