ஜடேஜா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 2000 ரன்களுக்கு மேல் எடுத்து 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்:
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இக்கட்டான நிலையில் களமிறங்கி ஜடேஜா 89 ரன்கள் ஆட்டம் இழந்து இந்தியாவை நல்ல நிலைக்கு கொண்டு சென்றது மட்டுமில்லாமல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) வரலாற்றில் ஒரு தனித்துவமான மைல்கல்லையும் ஜடேஜா எட்டினார்.
சாதனை நாயகனாக மாறிய கில்.. இந்தியா இல்ல... ஆசியாவிலேயே முதல் கேப்டனாக செய்த சம்பவம்
WTC-ல் 2000 ரன்கள்:
2021-ல் தொடங்கியப் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் 2000 ரன்களுக்கு மேல் எடுத்து 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் ரவீந்திர ஜடேஜா. இது வரை 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் உட்பட 2010 ரன்களைக் குவித்துள்ளார். நடந்து வரும் டெஸ்டில், அவர் 137 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார், இதில் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடங்கும். கேப்டன் ஷுப்மான் கில்லுடன் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 203 ரன்கள் சேர்த்தார். இது இந்தியா அணி வலுவான ஸ்கோரை அமைக்க முக்கிய காரணமாக அமைந்தது.
இந்திய 580:
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அளித்தார். இந்திய அணி 211/5 என்கிற நிலையில் இருந்த போது கேப்டன் கில் மற்றும் ஜடேஜா ஜோடி சிறப்பாக விளையாடி இங்கிலாந்து பவுலர்களை திக்குமுக்காட வைத்தனர். குறிப்பாக கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். ஆசிய கண்டத்தில் SENA நாடுகளான (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் ஆசிய கண்டத்தை சேர்ந்த கேப்டன் ஒருவர் முதல்முறையாக இரட்டை சதம் அடித்திருப்பதும் இதுவே முதல்முறையாகும்
இது மட்டுமில்லாமல் இங்கிலாந்து மண்ணில் தனிநபராக அதிக ரன்களை(269) குவித்த இந்தியர் என்ற சாதனையையும் கில் படைத்துள்ளார். அதோடு, இங்கிலாந்தில் அதிக ரன்களை எடுத்த ஆசியர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் கில்.
இறுதியில் இந்திய அணி அனைத்து 580 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. அதிகப்பட்சமாக கேப்டன் கில் 269 ரன்களும், ஜடேஜா 89 ரன்களும், ஜெய்ஸ்வால் 87 ரன்களும் எடுத்தனர்
இங்கிலாந்து தடுமாற்றம்:
தங்களது முதல் இன்னிங்ஸ்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் மற்றும் போப் ஆகியோர் ரன் எதுவும் ஆட்டமிழந்த நிலையில் இங்கிலாந்து அணி 13/2 என தடுமாறி வருகிறது.