Rohit Sharma: 24 இன்னிங்ஸ்களுக்கு பிறகு விளாசப்பட்ட அரைசதம்.. கண்டுக்காமல் கடந்து சென்ற ஹிட்மேன்..!
24 இன்னிங்ஸ்களுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டிகளில் அரைசதம் விளாசியதை ரோகித்சர்மா பெரியளவில் கொண்டாடதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது.
ஐ.பி.எல். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி – டெல்லி கேபிடல்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ரோகித் அரைசதம்:
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு கேப்டன் ரோகித்சர்மா மிரட்டலான தொடக்கத்தை அளித்தார்.
கடந்த பல போட்டிகளாகவே பேட்டிங்கில் சொதப்பி வந்த ரோகித்சர்மா 24 ஐ.பி.எல். இன்னிங்ஸ்களுக்கு பிறகு ரோகித்சர்மா அரைசதம் விளாசினார். இது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. ரோகித்சர்மா அரைசதம் விளாசியதை ரசிகர்கள் கொண்டாடினாலும். அவர் அதை பெரிதுபடுத்தவே இல்லை. மும்பை அணி தொடர்ந்து தோல்வியை தழுவி வந்தத காரணத்தாலோ என்னவோ, ரோகித்சர்மா அந்த அரைசதத்தை கொண்டாடவில்லை.
அதிரடியாக ஆடிய ரோகித்சர்மா 45 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இருப்பினும் திலக் வர்மா அதிரடியாலும் கிரீன் கடைசி கட்டத்தில் பவுண்டரி, சிக்ஸர் விளாசியதாலும் மும்பை வெற்றி பெற்றது. மும்பை அணி – டெல்லி அணி தொடர் தோல்வி அடைந்த நிலையில், முதல் வெற்றியைப் பெறப்போவது யார் என்ற சூழலில் நடந்த போட்டியில் டெல்லிக்கு 4வது தோல்வியை அளித்து முதல் வெற்றியை மும்பை பெற்றது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோகித்சர்மா அரைசதம் விளாசியதை ரசிகர்கள் கொண்டாடி வரும் அதே சூழலில், ரோகித்சர்மா தன்னுடைய அரைசதத்தை பெரியளவில் கொண்டாடாத வீடியோவையும் பகிர்ந்து வருகின்றனர். தற்போது வரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் மும்பை அணி 3 போட்டிகளில் ஆடி 1 வெற்றி 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் தற்போது 8வது இடத்தில் உள்ளது.
ஐ.பி.எல். தொடரிலே அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித்சர்மா இதுவரை 230 போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 966 ரன்களை விளாசியுள்ளார். அதில் 1 சதம் மற்றும் 41 அரைசதங்கள் அடங்கும். ரோகித்சர்மா கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் பஞ்சாப் அணிக்கு எதிராக அரைசதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Suryakumar Yadav : 26 நாட்களில் நான்காவது முறை கோல்டன் டக்… தொடரும் சூர்யகுமார் யாதவின் Bad Days..
மேலும் படிக்க: CSK vs RR IPL 2023: ரெக்கார்ட்ஸில் கிங்காக சென்னை கிங்ஸ்.. கடைசி போட்டிகளில் ராஜாவாக ராஜஸ்தான்.. நேருக்கு நேர் ஒரு பார்வை!