MI vs KKR, IPL 2023 LIVE: கொல்கத்தாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை..!
IPL 2023, Match 22, MI vs KKR: மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
வெற்றி இலக்கை நெருங்கி வரும் மும்பை அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்துள்ளது.
கொல்கத்தாவின் ஷ்யாஸ் வீசிய 14வது ஓவரில் ஒரு ரன் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்த ஓவர் முடிவில் 148 - 3.
கொல்கத்தா அணியின் சுயாஷ் சர்மா திலக் வர்மாவை தனது பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். திலக் வர்மா 25 பந்தில் 30 ரன்கள் சேர்த்தார்.
அதிரடியாக ஆடி வரும் சூர்ய குமார் யாதவ் 20 பந்தில் 37 ரன்கள் குவித்துள்ளார். 13 ஓவர்கள் முடிவில் அந்த அணி இரண்டு விக்கெட்டை இழந்து 147 ரன்கள் சேர்த்துள்ளது.
திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் பார்ட்னர்ஷில் மும்பை அணி சிறப்பாக ரன்கள் சேர்த்து வருகிறது. 12 ஓவர் முடிவில் 130 - 2 .
11 வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் மழை பொழிந்தார். இதனால் இந்த ஓவர் முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டை இழந்து 123 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ரன்கள் குவித்து வரும் மும்பை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் குவித்துள்ளது.
சிறப்பாக ரன்கள்:சேர்த்து வரும் மும்பை அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் சேர்த்துள்ளது.
இரண்டு விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 8 ஓவர்கள் முடிவில் 90 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடிவந்த இஷான் கிஷன் 25 பந்தில் 58 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்துள்ளார்.
7 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட்டை இழந்து 81 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக ரன்கள் குவித்து வரும் மும்பை அணி ஒரு விக்கெட்டை இழந்து 72 ரன்கள் சேர்த்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட்டை இழந்து 65 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடி வந்த ரோகித் சர்மா தனது விக்கெட்டை சுயாஷ் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
கொல்கத்தா அணிக்கு எதிராக ரோகித் சர்மா 1,000 ரன்கள் குவித்துள்ளார்.
அதிரடியாக ஆடிவரும் மும்பை அணி 4 ஓவர்கள் முடிவில் 57 ரன்கள் சேர்த்துள்ளது.
மும்பை அணி அதிரடியாக ரன்கள் சேர்த்து வருகிறது. இதனால் 3 ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் சேர்த்துள்ளது.
இரண்டாவது ஓவரில் இஷான் கிஷன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி, சிக்ஸரும் விளாசினார். இதனால் இந்த ஓவர் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் சேர்த்துள்ளது.
186 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள மும்பை அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் சேர்த்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயராக ரோகித் சர்மா களமிறங்கியுள்ளார்.
சிறப்பாக ரன்கள் சேர்த்து வரும் கொல்கத்தா அணி 19 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் சேர்த்துள்ளது.
104 ரன்கள் குவித்த வெங்கடேஷ் ஐயர் தனது விக்கெட்டை மெரிடித் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
களமிறங்கியது முதல் அதிரடியாக விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர் 49 பந்தில் தனது முதல் ஐபிஎல் சதத்தினை எட்டியுள்ளார். இவர் 5 பவுண்டரியும் 9 சிக்சரும் விளாசியுள்ளார்.
சிறப்பாக ரன்கள் சேர்த்து வரும் கொல்கத்தா அணி 16 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் சேர்த்துள்ளது.
13 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் சேர்த்துள்ளது.
களமிறங்கியது முதல் தடுமாறி வந்த ஷர்துல் தாக்குர் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இவர் 11 பந்தில் 13 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா அணி 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் சேர்த்துள்ளது.
அடுத்தடுத்து சிக்ஸர்களை வெங்கடேஷ் விரட்டியதால் கொல்கத்தா அணி 11 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ரன்கள் சேர்த்து வரும் கொல்கத்தா அணி 10.4 ஓவர்களில் 104 ரன்கள் சேர்த்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வரும் வெங்கடேஷ் 23 பந்தில் 53 ரன்கள் சேர்த்துள்ளார். இது மும்பைக்கு எதிரான அவரது மூன்றாவது அரைசதமாகும். 9 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ரன்கள் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா தனது விக்கெட்டை இழந்துள்ளார். இவர் 10 பந்தில் 5 ரன்கள் சேர்த்தார்.
8 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டை இழந்து 73 ரன்கள் சேர்த்துள்ளது.
இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் கொல்கத்தா அணி 7 ஓவர்களில் இரண்டு விக்கெட்டை இழந்து 68 ரன்கள் சேர்த்துள்ளது.
பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா அணி இரண்டு விக்கெட்டை இழந்து 57 ரன்கள் சேர்த்துள்ளது.
கொல்கத்தா அணியின் குர்பாஸ் 8 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பியூஷ் சாவ்லா பந்து வீச்சீல் இழந்து வெளியேறினார்.
சிறப்பாக ரன்கள் சேர்த்து வரும் கொல்கத்தா அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் முடிவில் 55 ரன்கள் சேர்த்துள்ளது.
நான்கு ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டை இழந்து 39 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடிவந்த கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் பந்தை பவுண்டரிக்கு விளாச முயன்றபோது அவரது காலில் அடிபட்டது. இதனால் மைதானத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொல்கத்தா அணி மூன்று ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 25 ரன்கள் சேர்த்துள்ளது.
நிதானமாக ஆடி வரும் கொல்கத்தா அணி இரண்டு ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 12 ரன்கள் சேர்த்துள்ளது
இரண்டாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் கொல்கத்தாவின் ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறியுள்ளார்.
முதல் ஓவர் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் சேர்த்துள்ளது.
டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது 'women in sports' என்ற கோட்பாட்டை முன்வைக்கும் வகையில் தனித்துவமான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது.
விளையாட்டில் பெண்கள்
36 தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 19,000க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் மற்றும் 200 ஸ்பெஷல் சைல்டு-களின் ஆரவாரத்துடன் இந்த போட்டி நடைபெற உள்ளது. மேலும் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி ஜெர்சியை அணிந்து ஆட உள்ளனர். இந்த நிகழ்வானது, ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள, அனைவருக்கும் கல்வி மற்றும் விளையாட்டு (ESA) முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். இதற்காக நகரம் முழுவதிலும் உள்ள NGO களில் இருந்து குழந்தைகளை நேரடியாக விளையாட்டைக் காண அழைக்கப்பட்டுள்ளனர்.
பெருமிதம் கொள்ளும் நீதா அம்பானி
MI vs KKR போட்டியானது ESA முன்முயற்சியின் ஒரு பகுதியாக பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படவுள்ளது. இந்த முயற்சி குறித்து பேசிய நீதா அம்பானி, "இந்த சிறப்பு போட்டியானது விளையாட்டுகளில் பெண்களின் ஈடுபாட்டை கொண்டாடும் விதமாக இருக்கும். இந்த ஆண்டு முதல் பெண்கள் பிரீமியர் லீக் மூலம் இந்தியாவின் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முக்கிய தொடக்கம் கிடைத்தது. பெண்களின் கல்வி மற்றும் விளையாட்டுக்கான உரிமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், இந்த ஆண்டுக்கான ESA நிகழ்வை பெண் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கிறோம்!", என்றார்.
WPL ஜெர்சியில் மும்பை அணி
ரிலையன்ஸ் அறக்கட்டளை இந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டியை நேரலையில் ரசிக்க பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 19,000 இளம் பெண்களை வரவழைப்பதில் பெருமிதம் கொள்கிறது என்று மேலும் கூறினார். இது மட்டுமின்றி இன்றைய போட்டியில் விளையாடும் மும்பை அணி வீரர்கள் WPL தொடரில் மும்பை அணி வீராங்கனைகளின் ஜெர்சியை அணிந்து விளையாடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஜெர்சியுடன் மும்பை அணியின் திலக் வர்மா நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு மும்பை அணி அதிகாரப்பூர்வமாக இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பிரம்மாண்ட ஏற்பாடு
பழம்பெரும் முன்னாள் இந்திய பேட்டர் சச்சின் டெண்டுல்கர், தொடக்கத்திலிருந்தே ESA பயணத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். இந்த முயற்சியானது கல்வி மற்றும் விளையாட்டு அனுபவங்களை எந்த வகையான குடும்பப் பின்னணியில் இருந்தாலும் எல்லா குழந்தைகளுக்கும் அணுகக்கூடிய வகையில் உத்வேகம் மற்றும் வாய்ப்புகளை வழங்க முயல்கிறது. இந்த 19,000 பேரை ஏற்றிச் செல்ல 2000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் மொத்தம் 500 தனியார் பேருந்துகள் பயன்படுத்தப்படும்.
1,00,000 உணவுப் பெட்டிகள் மற்றும் போதுமான தண்ணீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் சிறப்பு பதிப்பான ESA டி-ஷர்ட்களையும் பெறுவார்கள். மேலும் அவர்களுக்கு வான்கடே கான்கோர்ஸில் வரிசையாக இருக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்கும் வாய்ப்பும், விளையாட்டின் போது அவர்கள் அவர்களே உருவாக்கும் வாசகம் எழுதிய போர்டையும் காண்பிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -