ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில், எதிர்த்துப் போட்டியில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் பெறாமல் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சீமான் கூறியதாவது, 


கேவலமான பார்வை:


திராவிடச்சிந்தனையாளர்கள்தான் இப்படி சிந்திப்பாங்க. 15 கட்சியோட கூட்டணி வச்சு நீங்க வாங்குற வாக்கு தி.மு.க. வாக்குனு சொல்றீங்க. தனிச்சு நின்னு நான் வாங்குற வாக்கு அ.தி.மு.க., பா.ஜ.க. வாக்கு. இது கேவலமான பார்வை. அவங்க எல்லாம் வாக்கு செலுத்தி இருந்தா நான் வென்றிருக்க மாட்டேனா? 700 வாக்குதான் போன முறை நோட்டாவுக்கு இருந்தது. இப்போ 6 ஆயிரம் ஆனதுக்கு காரணம் என்ன? 


42 சுயேட்சை 12 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் ஓட்டு போட்டது யார்? பா.ஜ.க. எனக்கு ஏன் ஓட்டுப்போட போகுது? போன முறை பா.ஜ.க. நிக்கல. எனக்குத்தான் போட்டுச்சா? விக்கிரவாண்டியில பா.ஜ.க. நிக்கல.. எனக்குத்தான் போட்டுச்சா? அதிமுக நிக்கல.. எனக்குத்தான் போட்டுச்சா?
 
நான் புலி


அந்த கட்சிகள் நான் வளரனும்னு எப்படி விரும்புவீங்க? இந்த கட்சிகளை எதிர்த்துதான் நான் நிக்குறேன். நான் வீரன். எனக்குப் படை எல்லாம் தேவையில்லை. சண்டைக்கு தனியாதான் போவேன். நாலு பேரு அடிக்க வர்றான்னு 4 பேரை கூப்பிட்டு போறதுக்கு நான் நாய், நரி கிடையாது. நான் புலி. தனியாதான் போவேன். 


தொடக்கத்துல இருந்து சொல்றேன். நான் தனிச்சுதான் நிப்பேன். கோழைதான் கூட்டத்தோட நிக்கனும். அவனுக்கு வீரமும், துணிவும் தேவையில்ல. தனிச்சு நிக்குறவனுக்குத்தான் துணிவும், வீரமும் தேவை. ஊழல், லஞ்சத்தை ஒழிக்க யாரோட சேந்து ஒழிப்பீங்க? 


ஆசிரியரே பாலியல் தொல்லைக்கு ஆளாக்குறாங்க. மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பல பேர் சேந்து பாலியல் வன்கொடுமை செஞ்சுருக்கானுங்க. சமூகம் எங்க போயிகிட்டு இருக்கு. ஆட்டோ, பேருந்தில போக முடியல. பல்கலைக்கழகம் போக முடியல. 41 பேரை இட ஒதுக்கீடு முறையை கடைபிடிக்காம பணி நியமனம் செஞ்சுட்டாங்க. 


நான் பெரியாரை ஏத்துக்க மாட்டேன்:


நீதிமன்றம் சொன்ன உடனே அவசரம், அவசரமாக இந்த 41 பேரை எடுத்துட்டு வேறொருத்தவங்களை நியமிச்சுருக்காங்க. இதுக்கு முன்னாடி நடந்ததை எல்லாம் அந்தம்மா வெளியில மறுபடியும் வழக்குக்கு கொண்டு வந்தாங்க. அந்த கோப்புகள் வெளியில வராம இருக்கதுக்குத்தான் இந்த விபத்து நடந்துச்சு.


உலகமே பெரியாரை ஏத்துக்கிட்டாலும் நான் ஏத்துக்கமாட்டேன்.  எங்கிட்ட எவ்வளவோ பெரியார்கள் (பெரியோர்கள்) இருக்கும்போது நான் ஏன் பெரியாரை ஏத்துக்கனும்.


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.