தைப்பூசம் தவிர விசேஷ நாட்கள் எதுவும் இல்லை என்பதால் பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஆனாலும் கூட மல்லிகைப்பூ வரத்து வழக்கம் போல் மிக குறைவாகவே உள்ளது.
மவுசு குறையாத மதுரை மல்லிகைப் பூ
மீனாட்சியம்மனுக்கு அடுத்தபடியாக மதுரை என்றதும் நினைவிற்கு வருவது மல்லிகைப் பூ தான். தனித்துவமான நிறம், வாசனை, பூவின் கெட்டித் தன்மை என்று மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதியில் விளையக்கூடிய பூக்களுக்கு தனி மவுசு உள்ளது. இதனால் மதுரை மல்லிகைப் பூக்கள் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடு என நாள்தோறும் டன் கணக்கில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆன்மீக நகரமாக கருதப்படும் மதுரையிலிருந்து பூக்களை வாங்க வியாபாரிகள் பெரிதும் விரும்புகின்றனர். மதுரையில் கிடைக்கும் பூக்கள் தான் வாசனை திரவியங்களுக்கும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மதுரை மல்லிப்பூவின் விலை கடந்த வாரம் ரூ.5 ஆயிரம், 4500 வரை விற்பனையானது. இந்த சூழலில் முகூர்த்த நாட்கள் குறைந்ததால் தற்போது 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
- Valentines Day: "சேரா காதல்தான்.. ஆனால் தீராக்காதல்" காலத்திற்கும் அழியா ஒரு தலைக் காதல் படங்கள்!