LSG vs PBKS LIVE Score: பஞ்சரான பஞ்சாப்; முதல் வெற்றியை ருசித்த லக்னோ!
LSG Vs PBKS LIVE Score Updates: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி நாடு தளத்தில் உடனுக்குடன் காணலாம்.
பஞ்சாப் அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தனது வெற்றிப் பயணத்தை தொடங்கியுள்ளது.
பஞ்சாப் அணி 17. 3 ஓவர்களில் 5 விக்கெட்டினை இழந்து 150 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாம் கரன் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் ஆட்டமிழ்ந்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
ஷிகர் தவான் தனது விக்கெட்டினை 50 பந்தில் 70 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பஞ்சாப் கிங்ஸ் அணி தனது இரண்டாவது விக்கெட்டினை இழந்துள்ளது. 13.3 ஓவரில் 128 ரன்கள் சேர்த்துள்ளார்.
12 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 107 ரன்கள் சேர்த்துள்ளது.
பஞ்சாப் அணி தனது முதல் விக்கெட்டினை 11.4 ஓவர்களில் 102 ரன்கள் சேர்த்த நிலையில் முதல் விக்கெட்டினை இழந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேரிஸ்டோ 42 ரன்னில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
11 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
10.2 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் குவித்துள்ளது.
ஷிகர் தவான் 30 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். அவர் ஐந்து பவுண்டரியும் மூன்று சிக்ஸரும் விளாசியுள்ளார்.
7 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் குவித்து 10 ரன்ரேட் அடிப்படைடில் விளையாடி வருகின்றது.
பஞ்சாப் அணி 5.3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
4 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
மூன்று ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் சேர்த்து பவர்ப்ளேவை சிறப்பாக பயன்படுத்தி ரன்கள் குவித்து வருகின்றது.
2 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய தவான் முதல் பவுண்டரியை பதிவு செய்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் முதல் ஓவரை தமிழக வீரரான எம். சித்தார்த் வீசியுள்ளார். அந்த வகையில் அவர் வீசிய முதல் ஓவரில் 5 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.
முதல் ஓவர் முடிந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியுள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.
20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 199 ரன்கள் எடுத்துள்ளது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.
லக்னோ அணி போட்டியின் 19வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துள்ளது. களத்தில் க்ருனால் பாண்டியா 16 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றார்.
லக்னோ அணி 18 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 182 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
17 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
16 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
லக்னோ அணி 15.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
நிக்கோலஸ் பூரன் தனது விக்கெட்டினை 16வது ஓவரின் முதல் பந்தில் 21 பந்தில் 42 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
15 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
14 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டினை இழந்து 136 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சிறப்பாக விளையாடி வந்த டி காக் தனது விக்கெட்டினை 54 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் சிறப்பாக விளையாடி அரைசதத்தினைக் கடந்து விளையாடி வருகின்றார்.
13 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 12வது ஓவரில் லக்னோ அணி 11.3 ஓவரில் இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி மிரட்டி வருகின்றார்.
லக்னோ அணி 11 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டினை இழந்து 80 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் 8வது ஓவரில் அதிரடியாக இரண்டு சிக்ஸர்கள் விளாசிய ஸ்டாய்னஸ் தனது விக்கெட்டினை 12 பந்தில் 19 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
8 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் சேர்த்து மந்தமாக விளையாடி வருகின்றது.
7 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 61 ரன்கள் சேர்த்துள்ளது.
பவர்ப்ளே முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
தேவ்தத் படிக்கல் தனது விக்கெட்டினை 6 பந்துகளில் 9 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
5 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 45 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் நான்காவது ஓவரில் லக்னோ அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் தனது விக்கெட்டினை 9 பந்தில் 15 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
முதல் ஓவர் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் சேர்த்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிராக லக்னோ அணி களமிறங்கியது.
ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் மணிமாறன் சித்தார்த் அறிமுகமாகின்றார். இவருக்கு வயது 25.
லக்னோ அணிக்காக தமிழ்நாடு வீரர் மணிமாறன் சித்தார்த் இன்று களமிறங்குகின்றார்.
பஞ்சாப் கிங்ஸ் ப்ளேயிங் லெவன்: ஷிகர் தவான்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்): குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், தேவ்தத் பாடிக்கல், ஆயுஷ் படோனி, நிக்கோலஸ் பூரன்(கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், மயங்க் யாதவ், மணிமாறன் சித்தார்த்
லக்னோ அணியின் கேப்டனாக கடந்த போட்டியில் செயல்பட்ட கே.எல். ராகுலுக்கு பதிலாக இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரன் கேப்டனாக களமிறங்கியுள்ளார்.
டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
Background
LSG Vs PBKS, IPL 2024: பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 10 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நடைபெற உள்ள போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
லக்னோ - பஞ்சாப் மோதல்:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் தோல்விடைந்தது. மறுமுனையில் லக்னோ விளையாடிய ஒரு போட்டியிலும் தோல்வியுற்றது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகிறது. எனவே, இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
லக்னோ அணியின் முதல் போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பல் தான். இன்றைய போட்டியில் அந்த தவறை லக்னோ அணி திருத்திக் கொள்ள வேண்டும். கே.எல். ராகுல் மற்றும் பூரான் நல்ல ஃபார்மில் இருப்பது அணிக்கு நம்பிக்கை சேர்க்கிறது. நவீன் உல் ஹக் மற்றும் ரவி பிஷ்னாய் என பந்துவிச்சு யூனிட் வலுவாக உள்ளது. மறுமுனையில் பஞ்சாப் அணியில் பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லாவிட்டாலும், நல்ல திறன் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். ஆனால், கடந்த போட்டியில் அந்த திறனை முழுமையாக வெளிப்படுத்தாததே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. கேப்டன் தவான் உள்ளிட்டோர் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியமாகும்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 3 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் லக்னோ அணி 3 முறையும், பஞ்சாப் அணி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. லக்னோ அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 201 ரன்களையும், குறைந்தபட்சமாக 133 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி அதிகபட்சமாக 257 ரன்களையும், குறைந்தபட்சமாக 159 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
ஏகனா மைதானம் எப்படி?
கடந்த ஐபிஎல் தொடரின் போது ஏகனா மைதானம் இரண்டு விதமான களங்களை கொண்டிருந்தது. போட்டியின் மத்தியில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் குவித்தனர். இரண்டாம் பாதியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதால், சேஸிங் மிகவும் கடினமானதாக இருந்தது. ஆனால், இந்த முறை அதிரடியான பேட்டிங்கிற்கு சாதகமாக ஏகனா மைதானம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச அணி விவரங்கள்:
லக்னோ: கே.எல். ராகுல், குயின்டன் டி காக், தேவ்தத் படிக்கல், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர்
பஞ்சாப்: ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -