KKR vs SRH, IPL 2023 LIVE: 5 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி பதிலடி கொடுத்த கொல்கத்தா..!

IPL 2023, Match 47, KKR vs SRH: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 04 May 2023 10:57 PM
KKR vs SRH Live: கேப்டன் அவுட்..!

ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் 40 பந்தில் 41 ரன் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

KKR vs SRH Live: 38 ரன்கள் தேவை..!

ஹைதராபாத் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால், வெற்றிக்கு 30 பந்தில் 38 ரன்கள் தேவை எனும் நிலை உள்ளது. 

KKR vs SRH Live: அதிரடி ஆட்டம் முடிவுக்கு வந்தது..!

20 பந்தில் 36 ரன்கள் சேர்த்த க்ளாஸன் தனது விக்கெட்டை ஷர்துல் தாக்கூர் பந்து வீச்சில் வெளியேறினார். 

KKR vs SRH Live: 100 ரன்களைக் கடந்த ஹைதராபாத்..!

12 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்துள்ளது. 

KKR vs SRH Live: 97 ரன்கள் தேவை..!

10 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் சேர்த்துள்ளது. 

KKR vs SRH Live: 7 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத்..!

7 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்கள் சேர்த்துள்ளது. 

KKR vs SRH Live: அட்டகாசமான 20வது ஓவர்..!

ஹைதராபாத் அணியின் 20வது ஓவரை வீசிய நடராஜன் அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றியதுடன் ஒரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்தார். 

KKR vs SRH Live: 172 ரன்கள் இலக்கு..!

கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்தது. நடராஜன், யான்சன் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

KKR vs SRH Live: விக்கெட் வீழ்த்திய நடராஜன்..!

6 பந்தில் 8 ரன்கள் சேர்த்த ஷர்துல் தாக்குர் நடராஜன் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். 

KKR vs SRH Live: மீண்டும் சொதப்பிய சுனில் நரேன்..!

ரஸல் விக்கெட்டுக்குப் பிறகு களமிறங்கிய சுனில் நரேன் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் ஒரு ரன் மட்டும் எடுத்தார். 

KKR vs SRH Live: ரஸல் அவுட்..!

அதிரடியாக விளையாடி பவுண்டரிகள் விளாசிய ரஸல் மார்க்ண்டேயா பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

KKR vs SRH Live: 100 ரன்கள்..!

4 விக்கெட்டுகளை இழந்தாலும் சிறப்பாக விளையாடி வரும் கொல்கத்தா அணி 12 ஓவர்கள் முடிவில் 103 ரன்கள் சேர்த்துள்ளது. 

KKR vs SRH Live: கேப்டனிடம் சரணடைந்த கேப்டன்..!

கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா ஹைதாராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆகி வெளியேறினார். 

KKR vs SRH Live: அடுத்தடுத்து சிக்ஸர்கள்..!

போட்டியின் 10வது ஓவரில் ராணா ஒரு பவுண்டரி இரண்டு சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். 

KKR vs SRH Live: பந்து வீச வந்த நடராஜன்..!

போட்டியின் 8வது ஓவரை வீசிய நடராஜன் அந்த ஓவரில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 

KKR vs SRH Live: பவர்ப்ளேவில் கொல்கத்தா..!

பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் சேர்த்துள்ளது. 

KKR vs SRH Live: 5 ஓவர்கள் முடிவில்..!

சிறப்பான பந்து வீச்சினால் மிரட்டி வரும் ஹைதராபாத் அணி 5 ஓவர்களில் 3 விக்கெட்டை கைப்பற்றி 40 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளது. 

KKR vs SRH Live: ஜேசன் ராய் அவுட்..!

கொல்கத்தா அணி சார்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய் தனது விக்கெட்டை கார்த்திக் தியாகி பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். 

KKR vs SRH Live: அடுத்தடுத்து இரண்டு விக்கெட்.. செக் வைத்த யான்சன்..!

போட்டியின் இரண்டாவது ஓவரில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

KKR vs SRH Live: டாஸ்..!

ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 

Background

KKR vs SRH:  ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 47வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. 


ஐபிஎல் தொடர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் பாதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பல எதிர்பாராத திருப்பங்களும் அரங்கேறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் பிற்பாதி ஆட்டங்கள் தான் புள்ளிப்பட்டியலில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதால் ஒவ்வொரு போட்டியும் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று நடக்கும் ஆட்டத்தில்  ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான ஹைதராபாத் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியும் விளையாடுகின்றது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய  முடிவு செய்துள்ளது.


இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 


நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்று, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.  மிகவும் அனுபவ வீரர்களையும் துடிப்பு மிக்க இளம் வீரர்களையும் கொண்டுள்ள கொல்கத்தா அணிக்கு இந்த சீசனில் இதுவரை நல்லபடியாக அமையவில்லை. குஜராத் அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் பெற்ற வரலாற்று வெற்றியை பார்க்கும் போது இம்முறை கொல்கத்தா அணி மிகவும் சவாலான அணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணிக்கு இந்த தொடர் மிகச்சிறப்பாக அமையவில்லை. 


அதே சமயம்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பெற்றுள்ளது. ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் என்னதான் பெரிய அளவிலான திட்டத்துடன் களமிறங்கினாலும், மைதானத்தில் அந்த அணியால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை கண்கூடப் பார்க்க முடிகிறது. மிகவும் திறமையான இளம் பட்டாளத்தினைக் கொண்டுள்ள இந்த அணியால் தொடர் வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை. இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா ஆட்டம் என்பதால் ஆடுகளத்தில் அனல் பறக்கும் என்றே எதிர்பார்க்கலாம். 


ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் இதுவரை மொத்தம் 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா 15 போட்டிகளிலும், ஹைதராபாத் ஒன்பது போட்டிகளிலும் வென்றுள்ளது. மேலும் கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் கொல்கத்தா மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் இந்த சீசனில் முதல் பாதியில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை  அதன் சொந்த மண்ணில் ஹைதராபாத் 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.