KKR Vs RR, IPL 2022 LIVE: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி.. ! கொல்கத்தா போராடி தோல்வி !
KKR Vs RR, IPL 2022 LIVE: கொல்கத்தா நைட் ரைட்ரஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்.. !
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது.
கடைசி ஓவரில் ஷெல்டன் ஜாக்சன் விக்கெட்டை மெக்காய் வீழ்த்தினார்.
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 51 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா அணியின் வீரர் வெங்கடேஷ் ஐயரின் விக்கெட்டை ராஜஸ்தான் அணியின் வீரர் சாஹல் வீழ்த்தினார்.
16 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 178 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்துள்ளது.
கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ரஸல் விக்கெட்டை ஒரே பந்தில் ரவிச்சந்திரன் அஷ்வின் எடுத்துள்ளார்.
13 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 148 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்துள்ளது.
கொல்கத்தா அணியின் வீரர் நிதிஷ் ரானாவின் விக்கெட்டை ராஜஸ்தான் வீரர் யுஸ்வேந்திர சாஹல் எடுத்தார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஓவர்களின் முடிவில் 123 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 32 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
கொல்கத்தா அணியின் ஆரோன் ஃபின்ச் விக்கெட்டை ராஜஸ்தான் அணியின் பிரசித் கிருஷ்ணா எடுத்தார். ஃபின்ச் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் ஃபின்ச் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களத்திற்கு வந்தது முதல் அதிரடி காட்டி வருகிறார். கொல்கத்தா அணி 3 ஓவர்களின் முடிவில் 27 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே கொல்கத்தா அணியின் நரேன் ரன் அவுட்டாகினார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 217 ரன்கள் குவித்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 18 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 194 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் வீரர் ரியான் பராக்கின் விக்கெட்டை கொல்கத்தா அணி எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் வீரர் பட்லரை 103 ரன்களுக்கு பேட் கம்மின்ஸ் வீழ்த்தினார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 59 பந்துகளில் சதம் கடந்து பட்லர் அசத்தினார்.
சஞ்சு சாம்சன் விக்கெட்டை கொல்கத்தா வீரர் ரஸல் எடுத்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 15 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 163 ரன்கள் எடுத்துள்ளது.
10 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 99 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்துள்ளது. பட்லர் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார்.
ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் படிக்கல் 18 பந்துகளில் 24 ரன்கள் சுனில் நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் பட்லர் 3ஆவது அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் இவர் 30 பந்துகளில் 51 ரன்கள் அடித்து விளையாடி வருகிறார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமகாக 1000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் தேவ்தத் படிக்கல் இணைந்தார்.
அதிவேகமாக 1000 ஐபிஎல் ரன்கள் அடித்த வீரர்கள்:
31-சச்சின் டெண்டுல்கர்
34- சுரேஷ் ரெய்னா
35-தேவ்தத் படிக்கல்
35-ரிஷப் பண்ட்
37-ரோகித் சர்மா
கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 49 ரன்கள் எடுத்துள்ளது.
எங்க அம்மா மணமகன் பார்க்க சொன்னாங்க... ஐபிஎல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வந்த கோரிக்கை !
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 25 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணிக்காக 150 போட்டியில் சுனில் நரேன் களமிறங்கியுள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியில் சிவம் மாவி சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியில் வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் இடம்பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
நடப்புத் தொடரில் கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தா அணி தோல்வி அடைந்துள்ளது. ஆகவே ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற அதிகமாக முயற்சி செய்யும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. அந்தப் போட்டிக்கு பிறகு இந்தப் போட்டியில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்
நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் 3 தோல்வியுடன் கொல்கத்தா அணி உள்ளது.
நடப்புத் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி மற்றும் 2ல் தோல்வி அடைந்துள்ளது.
Background
15ஆவது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன்னுடைய கடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது.
ஆகவே இரண்டு அணிகளும் மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் இன்றைய போட்டியில் களமிறங்கின்றன. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 25 முறை மோதியுள்ளன. அவற்றில் ராஜஸ்தான் அணி 11 முறையும், கொல்கத்தா அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஒரு முறை கொல்கத்தாவும் மற்றொரு முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -