பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர் சந்திரசேகரன், சாச்சனா நாமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர் ஜே ஆனந்தி, சுனிதா கோகைய், ஜெஃப்ரி, ரஞ்சித், பவித்ரா ஜனனி, சவுந்தர்யா நஞ்சுண்டன், அருண் பிரசாத், முத்துக்குமரன், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்ணவ், ஜாக்குலின் ஆகிய போட்டியாளர்கள் இடம் பெற்ற நிலையில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர்ஷினி வெங்கட், மஞ்சரி, ராயன், ரியா தியாகராஜன், ஷிவகுமார், ராணவ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.
தற்போது உள்ளே இருக்கும் போட்டியாளர்கள்:
இப்போது 83 எபிசோடுகளை கடந்த பிக் பாஸ் சீசன் 8 ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் 3 வாரங்களில் இறுதி கட்டத்தை எட்ட உள்ள இந்த நிகழ்ச்சில், தற்போது அன்ஷிதா, அருண், தீபக், ஜாக்குலின், ஜெஃப்ரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ராயன், சவுந்தர்யா, பவித்ரா, விஷால், மஞ்சரி ஆகியோர் உள்ளனர்.
தற்போது போட்டியாளர்களை உற்சாக படுத்தும் விதமாக, ஃப்ரீஸ் டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். முதலில் தீபக்கின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தனர். அதன் பிறகு மஞ்சரி, விஷால், ராயன், சவுந்தர்யா, ராணவ், பவித்ரா, அன்ஷிதா, ஜெஃப்ரி, அருண், ஜாக்குலின், முத்துக்குமரன் ஆகியோரது குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தனர். இதையடுத்து அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் ஈரோடு மகேஷ் ஆகியோர் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.
இந்த வார எவிக்ஷன்:
இந்த நிலையில் தான் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷனில் அன்ஷிதா, ஜாக்குலின், ஜெஃப்ரி, மஞ்சரி, பவித்ரா, ராணவ், விஷால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில், யார் வெளியேற்றப்படுவார்கள் என்று பார்க்கையில் வைல்டு கார்டு மூலமாக உள்ளே வந்த மஞ்சரி மற்றும் ராணவ் ஆகியோருக்கு வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அதே போல் ஃப்ரீஸ் டாஸ்கில் மஞ்சரியின் அம்மா, மகன், சகோதரி, மைத்துனர் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தனர். இந்த நிலையில் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து, குடும்பத்தினரை பார்த்த அதே ஜோரில் மஞ்சரி வீட்டுக்கு நடையை கட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.