KKR vs MI Live Score:KKR vs MI Live Score: ரஹானே ஆனார் அவுட்... கொல்கத்தா வின் பண்றது டவுட்!
IPL 2022, Match, KKR vs MI: அணிகள் இடையே நடைபெறும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
KKR vs MI, Match : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மில்ஸ் வீசிய 14 ஓவர் முதல் பந்தில் ரசல் தலா ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 11 ரன்களில் ப்ரீவிஸிடம் கேட்ச் ஆனார்.
முருகன் அஷ்வின் வீசிய 12 வது ஓவரில் நிதிஷ் ராணா 8 ரன்களில் அவுட்டானார். கொல்கத்தா அணிக்கு தற்போது 49 பந்துகளில் 79 ரன்கள் தேவையாக உள்ளது.
கொல்கத்தா அணியில் அதிரடியாக ஆடிகொண்டிருந்த பில்லிங்ஸ் 17 ரன்களில் அவுட் ஆனார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 9 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 10 ரன்களில் அவுட்டாகி நடையைக்கட்டினார்.
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் ரஹானே 11 பந்துகளில் 7 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 3 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 38 ரன்களுடனும், பொல்லார்ட் 22 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரில் 5 பந்துகள் மிச்சம் இருக்க 52 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது.
16. 1 ஓவரில் திலக் அடித்த நான்கு ரன்களுடன் மும்பை அணி 100 ரன்னை கடந்தது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 15 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் 20 ரன்களுடனும், திலக் வர்மா 4 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.
கடந்த இரண்டு போட்டிகளில் அரைசதம் கடந்து மும்பை அணிக்கு சிறப்பான தொடக்கம் தந்த இஷான் கிஷன், கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 14 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை அணிக்காக தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ப்ரீவிஸ், வருண் வீசிய 8 வது ஓவரில் 29 ரன்களில் விக்கெட் கீப்பர் பில்லிங்ஸிடம் ஸ்டெம்ப் அவுட்டானார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் கிஷன் 12 ரன்களுடனும், டெவால்ட் ப்ரீவிஸ் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
4 ஓவர் முடிவில் மும்பை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்துள்ளது.
உமேஷ் யாதவ் வீசிய 3 வது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா 12 பந்துகளில் 3 ரன் எடுத்து விக்கெட் கீப்பர் பில்லிங்ஸிடம் அவுட் ஆனார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ஓவர் முடிவில் ஒரு ரன் எடுத்துள்ளது.
மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
Background
IPL 2022, Match, KKR vs MI:
ரோகித் சர்மா தலைமையிலான 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் முதல் இரு ஆட்டங்களில் முறையே டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியது. இரு ஆட்டங்களிலும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் அரைசதம் அடித்தார். இளம் வீரர் திலக் வர்மாவின் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முருகன் அஸ்வின் நன்றாக வீசுகிறார்கள். மற்றவர்களின் ஆட்டம் குறிப்பிடும்படி இல்லை. காயத்தால் ஒதுங்கி இருந்த பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் பயிற்சி மேற்கொண்டு வருவதால் இன்றைய ஆட்டத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வருகை தந்தால் பேட்டிங் வலுப்படும். பொதுவாக மும்பை அணி, தொடரை மெதுவாகத்தான் தொடங்கும். போக போக அவர்களின் ஆட்டம் சூடுபிடிக்கும். இனி வெற்றிக் கணக்கை தொடங்குவதில் அதீத தீவிரம் காட்டுவார்கள்.
இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 2 வெற்றி (சென்னை, பஞ்சாப்புக்கு எதிராக), ஒரு தோல்வி (பெங்களூவுக்கு எதிராக) என்று 4 புள்ளிகளுடன் நல்ல நிலையில் உள்ளது. பந்து வீச்சில் உமேஷ் யாதவ் (8 விக்கெட்), சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி, டிம் சவுதி மிரட்டுகிறார்கள். இப்போது அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்சும் இணைந்து விட்டார். இதே போல் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ரஹானே, வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்செல் என்று பேட்டிங்கிலும் பலம் பொருந்திய அணியாக திகழ்கிறது. பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ரஸ்செல் 8 சிக்சருடன் 70 சிக்சர் குவித்து அமர்க்களப்படுத்தினார். எனவே மும்பைக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.
ஆரம்பத்தில் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு பனிப்பொழிவு கைகொடுத்ததால் 'டாஸ்' முக்கிய பங்கு வகித்தது. ஆனால் இப்போது பனியின் தாக்கத்தை கணிசமாக குறைக்க மைதானத்தில் ரசாயனம் தெளிக்கப்படுகிறது. இதனால் முதலில் பேட் செய்யும் அணிகளும் வெற்றி பெறத் தொடங்கி விட்டதால் 'டாஸ்' பெரிய பிரச்சினையாக இருக்காது. வியூகத்தை கச்சிதமாக அமல்படுத்துவதை பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -