IPL 2022, KKR vs DC Score Live : கொல்கத்தா போராட்டம் வீண்..! டெல்லி அணி அபார வெற்றி...!

முதல் போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும், இரண்டாம் போட்டியில் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும் மோத உள்ளன.

ABP NADU Last Updated: 10 Apr 2022 07:35 PM
கொல்கத்தா போராட்டம் வீண்..! டெல்லி அணி அபார வெற்றி...!

டெல்லி அணி நிர்ணயித்த 216 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அந்த அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

தோல்வியின் விளிம்பில் கொல்கத்தா...!

டெல்லி அணி நிர்ணயித்த 216 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்த பிறகு அடுத்தடுத்து பாட் கம்மின்ஸ், சுனில் நரைனை குல்தீப் யாதவ் தனது சுழலால் அவுட்டாக்கினார். 

அதிரடி அரைசதம் விளாசிய ஸ்ரேயாஸ்...! அடுத்த பந்திலே அவுட்..!

கொல்கத்தா அணிக்காக அதிரடியாக ஆடி வரும் ஸ்ரேயாஸ் அய்யர் 32 பந்துகளில் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசியுள்ளார். 

கொல்கத்தா அணிக்கு மூன்றாவது விக்கெட்..! அதிரடி காட்டப்போவது யார்...?

கொல்கத்தா அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நிதிஷ் ராணா 20 பந்துகளில் 3 சிக்ஸருடன் 30 ரன்கள் எடுத்தார். 

7 ஓவர்களில் 51 ரன்கள்..! களத்தில் ஸ்ரேயாஸ்- நிதிஷ் ராணா..!

டெல்லி அணி நிர்ணயித்த 216 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் கொல்தகதா அணி 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்களை எடுத்துள்ளது. களத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும், நிதிஷ் ராணாவும் உள்ளனர்.

அடுத்தடுத்து ரிவியூவ்ஸ்...! தப்பித்த ரஹானே..! ஒரிஜினல் அவுட்டிற்கு அப்பீல் செய்யாத டெல்லி..!

டெல்லியின் முதல் ஓவரில் முதல் இரு பந்தில் அடுத்தடுத்த அவுட்டாகி ரிவியூவில் தப்பித்த ரஹானே, மூன்றாவது பந்தில் கொடுத்த உண்மையான அவுட்டிற்கு டெல்லி வீரர்கள் அப்பீல்  செய்யாததால் ரஹானே தப்பித்தார். 

கடைசி கட்டத்தில் ஷர்துல் - அக்‌ஷர் அதிரடி...! கொல்கத்தா அணிக்கு 216 ரன்கள் இலக்கு...!

டெல்லி அணி கொல்கத்தாவிற்கு எதிராக அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 215 ரன்களை குவித்துள்ளது. இந்த சீசனிலே அதிகபட்ச ரன் இதுவே ஆகும்.  

கடைசி 2 ஓவர்களில் டெல்லி அதிரடி காட்டுமா?

டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் அவர்களது ரன் வேகம் குறைந்துள்ளது. இதனால், கடைசி 2 ஓவர்களில் டெல்லி அதிரடி காட்டுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

லலித் யாதவ் அவுட்..! 3வது விக்கெட்டை இழந்த டெல்லி..!

டெல்லி அணி 13 ஓவர்களில் 150 ரன்களை கடந்த நிலையில் அந்த அணியின் முக்கிய வீரர் லலித்யாதவ் 1 ரன்களில் அவுட்டானார். 

அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் அவுட்..!

டெல்லி அணிக்காக அதிரடியாக ஆடிய கேப்டன் ரிஷப் பண்ட் 13 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

12 ஓவர்களில் 137 ரன்கள்...! அதிரடி காட்டும் ரிஷப்பண்ட்-வார்னர் ஜோடி..!

கொல்கத்தா அணிக்கு எதிராக அதிரடியாக ஆடி வரும் டெல்லி அணி 12 ஓவர்களில் 137 ரன்களை விளாசியுள்ளனர். 

10 ஓவர்களில் 100 ரன்களை எட்டிய டெல்லி..!

கொல்கத்தாவிற்கு எதிராக அதிரடியாக ஆடி வரும் டெல்லி அணி 10 ஓவர்களிலே 100 ரன்களை எட்டி அசத்தியுள்ளது. 

அரைசதம் விளாசினார் பிரித்விஷா..!

கொல்கத்தா அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்விஷா அதிரடியாக ஆடி 27 பந்தில் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் அரைசதம் அடித்து விளாசினார்.

4 ஓவரில் 50 ரன்கள் அடித்து டெல்லி அசத்தல்

டெல்லி அணி அதிரடி ஆட்டம் 4 ஓவரில் 50 ரன்கள் அடித்து அசத்தல். பிரித்வி 30, வார்னர் 21 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் அடித்த டெல்லி கேப்பிடல்ஸ்

டெல்லி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. மூன்று ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்துள்ளது. 

முதல் ஓவரில் 2 பவுண்டரி அடித்து அசத்திய பிரித்வி ஷா

டெல்லி முதல் ஓவரில் 10 ரன்கள் எடுத்தது. பிரித்வி ஷா 2 பவுண்டரி அடித்து அசத்தினார்.

Background

KKR vs DC Score Live :


ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும், இரண்டாம் போட்டியில் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும் மோத உள்ளன.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.