திருவள்ளூரில் ரயில் விபத்து காரணமாக மீட்டர் பணிகள் நடைபெற்று வருவதால் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று பல்வேறு ரயில்வே திருப்பிவிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் ரயில் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகிவிட்டது. கடந்தாண்டு, கடந்த ஜூன் மாதம் 2-ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில், 293 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருவள்ளூர் அருகே ரயில் விபத்து:
கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 23ஆம் தேதி, ஆந்திர பிரதேசம் விழியநகரத்தில் நடத்த ரயில் விபத்தில் 14 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்து நடப்பதற்கு 12 நாள்களுக்கு முன்புதான், பிகார் பக்சர் மாவட்டத்தில் நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாகி 4 பேரின் உயிரை காவு வாங்கியது. இறப்புகள் ஏற்படாத ரயில் விபத்துகள் பல கடந்தாண்டு நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேரில் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மெயின் லைனில் பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மெயின் லைனுக்கு பதிலாக லூப் லைனுக்கு ரெயில் தடம் மாறியதால் விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடம்புரண்ட 11 பெட்டிகளையும் கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சேதமடைந்த தண்டவாளம் மற்றும் சிக்னல்களை சரிசெய்ய வேண்டும், எனவே 15 மணி நேரம் வரை மீட்பு பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
காயம் அடைந்தவர்கள் எத்தனை பேர் ?
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் இழப்புகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் ரயில் பயணித்த ஒருவர் கால் எலும்பு முறிவு மற்றும் இருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
பயணிகளை அழைத்துச்சென்ற பேருந்து .
விபத்து ஏற்பட்ட பிறகு ரயிலில் பயணம் செய்த பயணிகளை மாநகரப் பேருந்து உதவியுடன், அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து ரயிலில் மீட்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தில் முக்கிய அதிகாரிகள் மீட்பு பணி நடைபெறுவதை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து நடந்தது எப்படி?
சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் இது குறித்த, தீவிர விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. முக்கிய அதிகாரிகள் தொடர்ந்து விபத்து குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்கள்
பாண்டிச்சேரி முதல் திருப்பதி செல்லும் ரயில்கள் இரண்டு ரத்து செய்யப்படுகின்றன. சென்னை சென்ட்ரல் முதல் திருப்பதி செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மறுமார்க்கமாக திருப்பதி முதல் சென்னை மற்றும் பாண்டிச்சேரி வரும் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படும் ரயில்களில் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருப்பி விடப்படும் ரயில்களில் விவரம்
டெல்லி, ஹைதராபாத், விசாகப்பட்டினம், எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. அனைத்து ரயில்களும் சூலூர் பேட்டையில் நிற்காமல் திருப்பிவிடப்பட உள்ளன. திருப்பி விடப்படும் ரயில்களின் பட்டியலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
ரயில்கள் ரத்து செய்யப்படுவதால், பொதுமக்கள் அதற்கு ஏற்றவாறு பயணம் திட்டத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.