2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் 14ஆம் அதேதி அன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கோவையில் இருந்து பொதுத் தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் வெளியிட உள்ளார்.
தமிழக மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 10ஆம் வகுப்பு, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை மாநிலத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக முன்கூட்டியே பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. மாணவர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மார்ச் 1 தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு
அதன்படி 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதியுடன் முடிந்தது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதேபோல 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 4-ல் தொடங்கிய நிலையில், மார்ச் 25ஆம் தேதியோடு நிறைவடைந்தது. தொடர்ந்து 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது.
அக்.14 அட்டவணை வெளியீடு
இந்த நிலையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் 14ஆம் அதேதி அன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக திருத்தி அமைக்கப்பட்ட நாட்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. இதன்படி இரண்டு நாட்களைத் தவிர மீதமுள்ள சனிக்கிழமைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.