IPL 2023 Auction LIVE: முடிந்தது ஐபிஎல் மினி ஏலம்.. கடைசி கட்டத்தில் ஷகிப் அல் ஹசனிற்கு அடித்தது லக்!

எங்கள் நேரடி வலைப்பதிவில் ஏலத்தின் நேரடி நிகழ்வுகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கிராண்ட் ஹையர் ஹோட்டலில் ஐபிஎல் மினி ஏலம் தொடங்கியது.

மணிகண்டன் Last Updated: 23 Dec 2022 08:00 PM
இளம் வீரர்களை குறிவைத்து வாங்கிய சிஎஸ்கே அணி...

சத்திஸ்கரை சேர்ந்த ஆல்-ரவுண்டரான அஜய் மண்டல் என்பவரையும், ஐதராபாத்தை சேர்ந்த பகத் வர்மாவையும் ரூ.20 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

ரூ.4.4 கோடிக்கு ஏலம்போன அயர்லாந்து வீரர்!

அயர்லாந்தை சேர்ந்த ஜோஷுவா லிட்டில் எனும் இடது கை வேகப்பந்து வீச்சாளரை, குஜராத் அணி ரூ.4.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அந்நாட்டை சேர்ந்த வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தை பெறுவது இதுவே முதல்முறையாகும்.

மினி ஏலத்தில் வாங்கப்படாத வீரர்கள்

பிளெஸ்ஸிங் முசாராபானி (ஜிம்பாப்வே), துஷ்மந்தா சமீரா (இலங்கை), சந்தீப் சர்மா (இந்தியா), டஸ்கின் அகமது (வங்கதேசம்) ஆகியோர் ஏலத்தில் யாராலும் கோரப்படவில்லை.  

நியூசி., பந்துவீச்சாளரை ஏலத்தில் வாங்கிய சிஎஸ்கே

நியூசிலாந்தைச் சேர்ந்த கைல் ஜாமீசனை அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது சிஎஸ்கே.

தமிழக வீரரை ஏலத்தில் எடுத்த கொல்கத்தா

தமிழகத்தைச் சேர்ந்த என்.ஜெகதீசனை ரூ.90 லட்சத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

சிவம் மாவியை ரூ.6 கோடிக்கு வாங்கிய குஜராத்

குஜராத் அணியால் சிவம் மாவி ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டர்.

ரூ.20 லட்சத்திற்கு ஷேக் ரஷீதை வாங்கியது சிஎஸ்கே

ஷேக் ரஷீதை ரூ.20 லட்சத்திற்கு வாங்கியது சிஎஸ்கே.

நிகோலஸ் பூரனை ரூ.16 கோடிக்கு வாங்கியது லக்னோ

நிகோலஸ் பூரன் லக்னோ அணியால் ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்டார்.

மும்பை அணி வாங்கிய வீரர்

ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் 17.50 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார்.

பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கியது சிஎஸ்கே

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவரை ரூ.16.25 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது.



சாம் கர்ரனை வாங்கியது பஞ்சாப் கிங்ஸ்

ஆல்-ரவுண்டர் சாம் கர்ரனின் (இங்கிலாந்து) அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  சாம் கர்ரன் முன்பு ஐபிஎல்லில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணிகளில் விளையாடியுள்ளார். முடிவில் சாம் கர்ரனை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.

ரஹானேவை வாங்கியது சிஎஸ்கே

அஜிங்க்ய ரஹானேவை ரூ.50 லட்சத்திற்கு வாங்கியது சிஎஸ்கே.

ஜோ ரூட்டை வாங்க முன்வராத அணிகள்!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோ ரூட்டை ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை. அவரது அடிப்படை விலையாக ரூ.1 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

மயங்க் அகர்வாலை வாங்கிய ஐதராபாத்

பஞ்சாப் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட மயங்க் அகர்வாலின் அடிப்படை விலை ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சிஎஸ்கேவும், ஐதராபாத் அணியும் மயங்க் அகர்வாலை வாங்க போட்டி போட்டன. இறுதியில் ஐதராபாத் அணி ரூ.8.25 கோடிக்கு வாங்கியது.

ரூ.13.25 கோடிக்கு ஹாரி ப்ரூக்கை வாங்கிய ஐதராபாத்

இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் அடிப்படை விலை ரூ.1.50 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் கடும் போட்டியில் ஈடுபட்டன. ரூ.13.25 கோடிக்கு ஐதராபாத் அணி வாங்கியது.

கேன் வில்லியம்சனை வாங்கியது குஜராத்!
குஜராத் டைட்டன்ஸ் அணி நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்னை 2 கோடிக்கு வாங்கியது
கரும்பு வழங்கப்படாததற்கு பழனிசாமி கண்டனம் 

திமுக அரசின் அறிவிப்பில் செங்கரும்பு இடம்பெறாதது, செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளின் தலையில் இடி விழுந்தது போன்றது - பழனிசாமி

மினி ஏலத்தை எப்படி பார்ப்பது..?

இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் ஐ.பி.எல். மினி ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க், வியாகாம் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக கண்டுகளிக்கலாம். 

அதிக வயதுடைய வீரர்..!

இந்த மினி ஏலத்தில் அதிக வயதுடைய வீரராக இந்தியாவைச் சேர்ந்த அமித் மிஸ்ரா தனது 40 வயதில் தனது பெயரை ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா ஐபிஎல் 2023 ஏலப் பட்டியலில் அதிக வயதுடைய வீரராக பதிவு செய்துள்ளார். 

மிகக் குறைந்த வயதுடைய வீரர்..!

இந்த மினி ஏலத்தில் பதிவு செய்யப்பட்ட மிக குறைந்த வயதுடைய இளம் வீரர் என்ற பெருமையை அல்லா முகமது கசன்ஃபர் பெற்றுள்ளார். இவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர். இவரின் ஆரம்ப விலை ரூ 20 லட்சம். 

குறைந்த தொகையுடன் களமிறங்கும் அணி..!

இந்த மினி ஏலத்தில் மிகக் குறைந்த தொகையுடன் களமிறங்கும் அணி என்றால் அது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் தான். அந்த அணி 7 கோடியே 5 லட்சம் ரூபாயுடன் களமிறங்குகிறது. 

அதிக தொகையுடன் ஏலத்தில் இறங்கும் அணி..!

இந்த மினி ஏலத்தில் சன்ரைசஸ் ஹைதரபாத் அணிதான் அதிகபட்ச தொகையுடன் களமிறங்குகிறது. அதாவது அந்த அணி ரூ, 42 கோடியே 25 லட்சத்துடன் களமிறங்குகிறது. 

Background

எங்கள் நேரடி வலைப்பதிவில் ஏலத்தின் நேரடி நிகழ்வுகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கிராண்ட் ஹையர் ஹோட்டலில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுகிறது.


ஐபிஎல் 2022க்கு முன் நடைபெற்ற மெகா ஏலத்துடன் ஒப்பிடும் போது, ​​2023 ஏலத்திற்காக அணி பிரதிநிதிகள் கொச்சியின் கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் கூடுவார்கள். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 மற்றும் குறைந்தபட்சம் 18 வீரர்களைக் கொண்ட தங்கள் அணிகளை முடிக்க வேண்டும்.


2023 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் [SRH] அதிகபட்சமாக ரூ, 42, 25,00,000 கொண்டிருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த முறை சிறிய பட்ஜெட்டைக் கொண்டுள்ளது ரூ.7,05,00,000 கொண்டுள்ளது.


மொத்தம் 11 வீரர்கள் தங்களது அடிப்படை விலையை அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடியாக நிர்ணயித்துள்ளனர். இரண்டு இந்தியர்கள் - மயங்க் அகர்வால் மற்றும் மணீஷ் பாண்டே - அவர்களின் அடிப்படை விலை ரூ. 1 கோடி..


இந்த ஆண்டு மினி ஏலத்தில் பதிவு செய்யப்பட்ட மிக குறைந்த வயதுடைய இளம் வீரர் என்ற பெருமையை அல்லா முகமது கசன்ஃபர் பெற்றுள்ளார். இவர் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கிலும் தனது பெயரை பதிவு செய்தபோதும், எந்த ஒரு அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. இருப்பினும், தற்போது இந்திய பீரிமியர் லீக்கில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். 


அல்லா முகமது கசன்ஃபரின் விருப்பமான வீரர்: 


முகமது மிகவும் திறமையான ஃபிங்கர் ஸ்பின்னர். இந்தியன் பீரிமியர் லீக்கில் இவரது அடிப்படை விலை 20 லட்சம் ரூபாய். 


இந்தநிலையில், இவருக்கு இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் விருப்பமான பந்துவீச்சாளராக கருதுகிறார்.  ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் பதிவு செய்த பிறகு காபூலில் உள்ள தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த முகமது, “ரவிச்சந்திரன் அஷ்வின் இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்தான் எனக்கு விருப்பமான பந்து வீச்சாளர். அவரது பன்முகத்தன்மையை நான் விரும்புகிறேன். நான் எப்போதும் அவரை எனது உத்வேகமாக கருதுகிறேன்” என்று தெரிவித்தார். 


அதேபோல், அமித் மிஸ்ரா தனது 40 வயதில் தனது பெயரை ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா ஐபிஎல் 2023 ஏலப் பட்டியலில் அதிக வயதுடைய வீரராக பதிவு செய்துள்ளார். 


மினி ஏலம் முழு விவரம்:


ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்களின் அடிப்படை விலை விவரம் வெளியாகியுள்ளது. முக்கிய வீரர்களின் அடிப்படை விலையை கீழே காணலாம்.



  1. மயங்க் அகர்வால்      – 1 கோடி ரூபாய்

  2. அஜிங்க்யா ரகானே   – 1.5 கோடி ரூபாய்

  3. ரைலி ரோசாவ்             - 2 கோடி ரூபாய்

  4. கனே வில்லியம்சன்   – 2 கோடி ரூபாய்

  5. சாம் கரன்                  - 2 கோடி ரூபாய்

  6. கேமரூன் கிரீன்          - 2 கோடி ரூபாய்

  7. ஷகிப் அல் ஹசன்    - 1.5 கோடி ரூபாய்

  8. ஜேசன் ஹோல்டர்    - 2 கோடி ரூபாய்

  9. பென் ஸ்டோக்ஸ்     - 2 கோடி ரூபாய்

  10. டாம் பான்டன்         - 2 கோடி ரூபாய்

  11. ஹென்ரிக் கிளாசென் – 1 கோடி ரூபாய்

  12. நிகோலஸ் பூரன்       - 2 கோடி  ரூபாய்

  13. பில் சால்ட்                 - 2 கோடி ரூபாய்

  14. கிறிஸ் ஜோர்டன்     - 2 கோடி ரூபாய்

  15. ஆடம் மில்னே          - 2 கோடி ரூபாய்

  16. அடில் ரஷீத்               - 2 கோடி ரூபாய்

  17. ட்ராவிஸ் ஹெட்       - 2 கோடி ரூபாய்

  18. டேவிட் மலான்        - 1.5 கோடி ரூபாய்

  19. மணீஷ் பாண்டே  - 1 கோடி ரூபாய்

  20. ஜிம்மி நீஷம்          - 2 கோடி ரூபாய்

  21. பிரண்டன் கிங்     - 2 கோடி ரூபாய்


உள்பட பல வீரர்கள் அடிப்படை விலை 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக ரூபாய் 20 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில வீரர்களுக்கு ரூபாய் 1.50 கோடியும், சில வீரர்களுக்கு ரூபாய் 1 கோடியும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


ஐபிஎல் மினி ஏலம் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் இந்தியாவில் டிவியில் நேரடி ஒளிபரப்பு இருக்கும். ஜியோசினிமா செயலியில் நேரடி மொபைல் ஸ்ட்ரீமிங் கிடைக்கும்.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.