முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். டெல்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்துக்கு சென்று அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உடல் அருகே மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். 



எக்ஸ் தளத்தில் இதுகுறித்து குறிப்பிட்ட அவர், "இந்தியாவின் தலைசிறந்த மகன்களுள் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்குக்கு எனது இறுதி மரியாதையைச் செலுத்தினேன்.


 






வரலாறு அவரை கனிவுடன் நடத்தும் என்பது மட்டுமல்ல, தமது தொலைநோக்கால் ஒரு நாட்டையே மறுசீரமைத்த, தமது பணிவால் கோடிக்கணக்காருக்கு ஊக்கமூட்டிய, அடுத்து வரும் தலைமுறைகளுக்கெல்லாம் தமது வாழ்க்கையால் நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான கலங்கரை விளக்கமாக விளங்கும் அரிதினும் அரிதான தலைவர்களுள் ஒருவராக வரலாறு அவரது பெயரைப் பொறித்து வைக்கும்" என பதிவிட்டுள்ளார்.


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நல குறைவால் நேற்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு ஆகியவற்றால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 92.


1932-ம் ஆண்டு செப்டம்பர் 26-ல், தற்போது பாகிஸ்தானில் உள்ள கா என்ற இடத்தில் பிறந்த அவர், 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். நாட்டின் 13-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். 


இதையும் படிக்க: ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!