SRH vs GT LIVE Score: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; ஹைதராபாத் ப்ளேஆஃப்க்கு தகுதி!

IPL 2024 SRH vs GT LIVE Score Updates: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 16 May 2024 11:07 PM
SRH vs GT LIVE Score: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; ஹைதராபாத் ப்ளேஆஃப்க்கு தகுதி!

17வது ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுவதாக இருந்தது. இந்த போட்டி நடத்தப்படாததால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் காரணமாக ஹைதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 4 ஆண்டுகளுக்குப் பின்னர் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதியாக இந்த அணி 2020ஆம் ஆண்டு ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. 

SRH vs GT LIVE Score: போட்டி தடைபட்டால் என்ன ஆகும்?

இந்த போட்டி நடைபெறாமல் தடைபட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுக்கப்படும். இதனால் ஹைதராபாத் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் மூன்றாவது அணியாக மாறும். 

SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!

ஹைதராபாத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆட்டம் தொடங்குமா தொடங்காதா என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

SRH vs GT LIVE Score: மீண்டும் குறுக்கிட்ட மழை; ஏக்கத்தில் ரசிகர்கள்!

8.15 மணிக்கு போட்டி தொடங்குவதாக இருந்த நிலையில், மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

SRH vs GT LIVE Score: இன்னும் சற்று நேரத்தில் டாஸ்; தாமதமானாலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை!

8 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 8.15 மணிக்கு முதல் ஓவர் வீசப்படவுள்ளது. இதுமட்டும் இல்லாமல் மழையால் காலதாமதமாக தொடங்கும் இந்த போட்டியில் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படாமல், 20 ஓவர்கள் போட்டி நடத்தப்படுகின்றது. 

SRH vs GT LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்!

ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் மழை குறிக்கிட்டு வருவதால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

SRH vs GT LIVE Score: குஜராத் - ஹைதராபாத் ஆட்டம் நடக்குமா? விட்டு விட்டு விளையாடும் வருண பகவான்!

ஹைதராபாத் - குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Background

இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 66வது போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு  ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. 


சூடுபிடிக்கும் ஐ.பி.எல்.:


சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியை பொறுத்தவரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டி வெறும் சம்பிரதாயம் மட்டுமே. இதில், குஜராத் அணி வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. குஜராத் அணி 11 புள்ளிகளுடன் பிளே ஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி தற்போது புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. 


ஆனால், இந்த போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளை பெற்றுள்ளது. இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில், ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட பிளே ஆஃப்க்கு தகுதிபெறும். 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் ஹைதராபாத் அணி 18 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 2ம் இடம் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. 


பிட்ச் ரிப்போர்ட்: 


ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சாகவே பார்க்கப்படுகிறது இருப்பினும், முதல் இன்னிங்ஸில் புதிய பந்தில் வேகப் ந்துவீச்சாளர்கள் விக்கெட்களை எளிதாக வீழ்த்த வாய்ப்புண்டு. அதேசமயம், இரண்டாவது இன்னிங்ஸில் பனியின் தாக்கம் காணப்படுவதால், பந்து வீச்சாளர்களுக்கு பந்துவீசுவது கொஞ்சம் கடினமாகும், அப்போது, இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தலாம். கடந்த போட்டிகளில் இங்கு நடைபெற்ற போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் வாணவேடிக்கை காட்டினர். 


இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே இதுவரை அதிக போட்டிகள் நடைபெறவில்லை. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஹைதராபாத் மற்றும் குஜராத் அணி 4 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் 3 போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 1 போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. 


விளையாடிய மொத்த போட்டிகள்: 4

குஜராத் டைட்டன்ஸ் வெற்றி: 3

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி: 1

முடிவு இல்லை: 0

கைவிடப்பட்டது: 0

 

ஹைதராபாத் ஸ்டேடியத்தில் SRH vs GT நேருக்கு நேர்:

 

விளையாடிய போட்டிகள்: 0

குஜராத் டைட்டன்ஸ்: 0

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 0

 

குஜராத் ஸ்டேடியத்தில் SRH vs GT நேருக்கு நேர்:

 

விளையாடிய போட்டிகள்: 2

குஜராத் டைட்டன்ஸ்: 2

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 0

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:


அபிஷேக் சர்மா, டிராவிஸ் தலைவர், மயங்க் அகர்வால், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன்/கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்/ஜெய்தேவ் உனத்கட்


குஜராத் டைட்டன்ஸ் அணி:


சுப்மன் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), பி சாய் சுதர்சன், எம் ஷாருக் கான், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோஹித் சர்மா, நூர் அகமது, ஜோஷ் லிட்டில்/அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஆர் சாய் கிஷோர்/சந்தீப் வாரியர் 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.