Nirmala Sitharaman: பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வங்கினால் கூட வரியா? என மத்திய அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

Continues below advertisement

பாப்கார்ன் மீது 3 விதமான வரி:

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில், பாப்கார்னுக்கு மாறுபட்ட வரி விகிதங்களை அறிவித்ததைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கவுன்சிலின் தகவலின்படி, முன்பே பேக் செய்யப்பட்ட &  உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலந்த பாப்கார்னுக்கு 12% வரி விதிக்கப்படும், அதே நேரத்தில் கேரமல் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 18% வரி விதிக்கப்படும். இதுதொடர்பாக பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  "பாப்கார்னை சர்க்கரையுடன் (கேரமல் பாப்கார்ன்) கலக்கும்போது, ​​அதன் இன்றியமையாத தன்மை சர்க்கரை மிட்டாய்க்கு மாறுகிறது, எனவே 18 சதவிகித ஜிஎஸ்டியை ஈர்க்கும்" என்று விளக்கமளித்தார். இதையடுத்து ஒரே பொருளுக்கு தனித்தனி வரி அடுக்குகளை வைத்திருப்பதன் தர்க்கத்தை பயனர்கள் கேள்வி எழுப்பினர்.

Continues below advertisement

நெட்டிசன்கள் கேள்வி

சமூக வலைதளத்தில் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், “அடுத்து என்ன? நீரை பருகினால் 5% ஜிஎஸ்டி, விழுங்கினால் 12% ஜிஎஸ்டி, கீழே சிந்தினால் 18% ஜிஎஸ்டியா” என கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு நபரோ,  "ஒரு தேசம், ஒரே தேர்தல்" என்று வாதிடுபவர்கள் பாப்கார்னுக்கு ஒரே வரி விகிதத்தை அமல்படுத்த முடியாது" என விமர்சித்துள்ளார். இன்னொருவரோ " பாப்கார்ன் ஒரு ஆடம்பர சிற்றுண்டி என்பதால் அதன் மீது 18% ஜிஎஸ்டி என்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது, ஆனால் குறைந்த வசதி கொண்டவர்கள் வாங்கும் பழைய கார்களுக்கு ஏன் அதே விகிதம்?" என வேதனை தெரிவித்துள்ளார். மற்றொரு நபரோ  "காப்பீடு மீதான ஜிஎஸ்டியை அகற்றுவதை விட அல்லது குறைப்பதை விட பாப்கார்ன் மீதான ஜிஎஸ்டி அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானதாக தோன்றுகிறது" என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

குவியும் மீம்ஸ்கள்