Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

சுகுமாறன் Last Updated: 22 Dec 2024 11:55 AM
பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி

பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் தொடங்கியது தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்

மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு

தமிழ்நாட்டில் கொட்டப்பட்டுள்ள கேரள கழிவுளை அகற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கேரள அதிகாரிகள் தமிழ்நாடு வந்தனர்.

சென்னைபள்ளிக்கரணையில் விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

சென்னை பள்ளிக்கரணையில் சாலை தடுப்பில் இரு சக்கர வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.  

Background

* நெல்லையில் கேரள கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது - கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் கைது 
* நெல்லையில் கொட்டப்பட்ட கேரளா மருத்துவ கழிவுகளை அகற்றும் பணிகள் இன்று தொடக்கம் - கேரளாவில் இருந்து துணை ஆட்சியர் தலைமையிலான குழு இன்று வருகை 
* திருப்பூர் மாவட்டத்தில் சிறைச்சாலையில் இருந்து கைதி தப்பி ஓட்டம் - போலீசார் தீவிர வலைவீச்சு
* செறிவூட்டப்பட்ட அரிசிக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஜி.எஸ்.டி. குறைவு
* பழைய கார், ஷூ ஆகியவற்றிக்கு ஜி.எஸ்.டி. வரி உயர்வு 
* ஜீன் தெரபிய சிகிச்சைக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலும் விலக்கு 
* குவைத்தில் இந்தியர்களை காண்பது மினி இந்தியாவை போல உள்ளது - பிரதமர் மோடி 
* மஹாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கி உத்தரவு - உள்துறை, சட்டம் உள்ளிட்ட 4 துறைகளை தன்வசம் வைத்துக் கொண்டார் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்
*  மகாராஷ்டிரா துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டேவிற்கு பொதுப்பணி துறையும்,அஜித் பவாருக்கு நிதி துறையும் ஒதுக்கீடு 
* பஞ்சாபில் 6 மாடி கட்டிடம் இடிந்து தரை மட்டம் - இடிபாடுகளில் பலரும் சிக்கி இருக்கலாம் என்று அச்சம் 
* திரிபுராவில் 78 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் 
* கள்ளக்குறிச்சி சோதனை சாவடியில் லஞ்சம் தர மறுத்த வாகன ஓட்டிகளிடம் சோதனை சாவடி அதிகாரி  வாக்குவாதம்  
* தஞ்சை, அரியலூர் மாவட்டங்களில் இரண்டாவது நாளாக இரவில் கனமழை - தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என எதிர்பார்ப்பு 
* வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது - வானிலை ஆய்வு மையம் தகவல் 
* திமுக அரசு மக்கள் பிரச்சினையை கண்டு கொள்ளாமல் தூங்கி கொண்டிருக்கிறது - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு 
* ஆர்,என்.ரவி ஆளுநராக வந்த பிறகுதான் துணை வேந்தர் நியமனம் வெளிப்படையாக இருக்கிறது - அண்ணாமலை அமைச்சருக்கு பதில் 
* கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தது தெரிந்தும் அல்லு அர்ஜுன் படம் பார்த்து கொண்டிருந்தார் - தெலங்கானா முதலைமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு 
* தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் மறுப்பு  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.