நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்

பாலியல் ரீதியான தொந்தரவு அளித்ததாக இளம்பெண் அளித்த புகாரில் மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் மீது மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Continues below advertisement
சிறைவாசியின் உணவகம்
 
மதுரை பைபாஸ் சாலை பகுதியில் முன்னாள் சிறைவாசி ஒருவர் தனது மகளுடன் சாலையோர உணவகத்தை நடத்தி வந்துள்ளார். இங்கு மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணிபுரியும் பாலகுருசாமி என்பவர்  சாப்பிடுவதற்காக உணவகத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது உதவி ஜெயிலர் பாலகுருசாமி உணவகத்தில் இருந்த சிறைவாசி மகளான இளம்பெண்ணிடம் அடிக்கடி பேசிவந்துள்ளார்.
 
அவ்வப்போது எதாவது உதவி செய்வதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில் உதவி ஜெயிலர் பாலகுருசாமி நேற்று காலை மதுரை ஆரப்பாளையம் ஞான ஒளிவுபுரம் பகுதியில் ஏடிஎம்க்கு சென்றுவிட்டு திரும்பியபோது  சிறைவாசியின் மகளான இளம்பெண் பாலகுருசாமி தன்னிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டதாக  கூறி  பாலகுருசாமியை பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலை பகுதியிலே வைத்து சரமாரியாக அடித்தார். 
 
 
உதவி ஜெயலர் மீது பெண் புகார்
 
இதனையடுத்து இளம்பெண் மதுரை மாநகர் தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாலகுருசாமி மீது புகார் அளித்தார். அதன்படி நேற்று 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்ட பின்னர் பாலகுருசாமி மீது இளம்பெண் அளித்த புகாரின் கீழ் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாலகுருசாமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே  உதவி ஜெயிலர் பாலகுருசாமியை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடதக்கது.
 
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola