ஐ.பி.எல் 2024:



ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய ஐ.பி.எல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இதுவரை 7 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இரண்டு வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தில் இருக்கிறது.


அடுத்த இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 புள்ளிகளுடன் உள்ளது. அதேநேரம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 8 வது இடத்தில் இருக்கிறது. 


200 வது போட்டியில் களம் இறங்கும் ரோகித் சர்மா:


இந்நிலையில் தான் இன்று (மார்ச் 27) ஹைதராபாத்தில் எட்டாவது லீக் போட்டி நடைபெற உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாட உள்ளன. அதேநேரம் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடையாளமாக பார்க்கப்படும் ரோகித் சர்மா இன்றை போட்டியில் விளையாட உள்ளார்.






அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வரும் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 200 வது போட்டியில் விளையாட உள்ளார். அவர் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இல்லாவிட்டாலும் கடந்த சீசன்கள் வரை அந்த அணிக்கு பல சூழல்களில் வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.






கடந்த 2011 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த ரோகித் சர்மா 199 போட்டிகளில் விளையாடி உள்ளார்.  கடந்த 14 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் ரோகித் சர்மா செய்துள்ள சாதனைகளை பார்ப்போம்:


 



  • மும்பை இந்தியன்ஸ் அணிக்காக எடுத்த ரன்கள்: 5,084


 



  • மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன். அந்தவகையில், ( 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020) ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுகொடுத்திருக்கிறார்.


 



  • ஐ.பி.எல் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற 2 வது கேப்டன்.


 



  • கேப்டனாக இதுவரை எடுத்த ரன்கள் 3,986


 


மேலும் படிக்க: Ravindra Jadeja: குஜராத் அணிக்கு எதிரான போட்டி...ஜடேஜாவுக்கு ரசிகர்கள் கொடுக்கப்போகும் இன்ப அதிர்ச்சி!


மேலும் படிக்க: IPL 2024 Ruturaj Gaikwad: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக கடைசி 5 போட்டிகள்...ருதுராஜ் கெய்க்வாட் செய்த தரமான சம்பவம்!