ஐ.பி.எல் 2024:


ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய ஐ.பி.எல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இதுவரை 7 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இரண்டு வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 புள்ளிகளுடன் உள்ளது. அதேநேரம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 8 வது இடத்தில் இருக்கிறது.  இந்நிலையில் தான் இன்று (மார்ச் 27) ஹைதராபாத்தில் எட்டாவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.


மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:


இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாட உள்ளன. அதேநேரம் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடையாளமாக பார்க்கப்படும் ரோகித் சர்மா இன்றை போட்டியில் களம் இறங்கி உள்ளார். முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை டெக்கான் ஜார்சர்ஸ் அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வந்தார்.


இதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார் ரோகித் சர்மா. அந்த வகையில் கடந்த 20211 ஆம் ஆண்டு முதல் இந்த சீசன் வரை தொடர்ந்து 14 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டன் பொறுப்பில் இருந்து வழிநடத்தி வந்தார். மும்பை அணியின் சிறப்பான கேப்டனாக இருந்த இவர் தான் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடனமே அந்த அணிக்கு ஐ.பி.எல் கோப்பையை பெற்றுக்கொடுத்தார்.


ஜெர்சி கொடுத்து வாழ்த்திய சச்சின்:


அதன்பின்னர், கடந்த 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். இவ்வாறாக மும்பை அணியின் சிறந்த கேப்டனாக இருந்த ரோகித்தை இந்த சீசனில் சாதாரண வீரராக மற்றியது அந்த அணி நிர்வாகம். அதேநேரம் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்து. இச்சூழலில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான் தான் இந்த சீசனில் மும்பை அணி விளையாடி வருகிறது. 






இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தன்னுடைய 200 வது போட்டியில் களம் இறங்கி இருக்கிறார் ரோகித் சர்மா. அந்தவகையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று களம் இறங்கியிருக்கும் ரோகித் சர்மாவை ரசிகர்கள் பாராட்டினார்கள். அதேநேரம் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்த சச்சின் டெண்டுலகர் வாழ்த்தி உள்ளார். அதன்படி, 200 என்ற நம்பர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை ரோகித் சர்மாவிற்கு வழங்கி பாராட்டி உள்ளார் சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கரின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.


 


மேலும் படிக்க: Rohit Sharma: மும்பை இந்தியன்ஸின் அடையாளம்...200வது போட்டியில் ஹிட்மேன் ரோகித் சர்மா!


மேலும் படிக்க: Watch Video: மைதானத்திற்கு செல்லாமலே CSK போட்டியை நேரடியாக பார்த்த ரசிகர்கள்! வைரல் வீடியோ!