MI vs SRH LIVE Score: அதிரடி சதம் விளாசிய SKY; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை!
IPL 2024 MI vs SRH LIVE: மும்பை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் உடனுக்குடன் காணலாம்.
மும்பை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் தனது சதத்தினை எட்டினார். இவர் 51 பந்துகளில் 102 ரன்கள் குவித்தார். சிக்ஸர் விளாசி அணிக்கு வெற்றியை ஈட்டித்தந்ததுடன் தனது சதத்தினையும் எட்டினார்.
50 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் 90 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார். வெற்றிக்கு இன்னும் 7 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றது.
16.1 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மும்பை அணி கடைசி 5 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிக் கொண்டுள்ளது.
14 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். இதில் இவர் 5 பவுண்டரியும் மூன்று சிக்ஸரும் விளாசியுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார். 12 ஓவர்கள் முடிவில் 105 ரன்கள் சேர்த்துள்ளது மும்பை.
மும்பை அணி 11.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா கூட்டணி 41 பந்தில் 62 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆட்டத்தின் 4வது ஓவரில் ரோகித் சர்மா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 5 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவரது விக்கெட்டினை பேட் கம்மின்ஸ் கைப்பற்றினார்.
ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். 3 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 31 ரன்கள் சேர்த்துள்ளது.
இரண்டு ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 27 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அதிரடியாக பவுண்டரி விளாசிய இஷான் கிஷன் இரண்டாவது ஓவரின் 4வது பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை மார்க்கோ யான்சென் கைப்பற்றினார்.
இலக்கைத் துரத்த களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா பவுண்டரி விளாசி தங்களது ரன் கணக்கைத் தொடங்கியுள்ளனர். முதல் ஓவர் முடிவில் மும்பை அணி 13 ரன்கள் சேர்த்துள்ளது.
174 ரன்கள் இலக்கைத் துரத்த ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை அணி களமிறங்கியுள்ளது.
20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்துள்ளது. மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்டியா மற்றும் பியூஸ் சவ்லா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
19 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஹைதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
18 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஹைதராபாத் அணியின் ஷாபாஸ் அகமது தனது விக்கெட்டினை 16வது ஓவரின் முதல் பந்திலும் மார்கோ யான்சென் 5வது பந்திலும் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். இவர்களது விக்கெட்டினை ஹர்திக் பாண்டியா கைப்பற்றினார்.
ஹைதராபாத் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
14 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
13 ஓவர்கள் முடிந்த நிலையில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.
ஹென்ரிச் கிளாசென் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
12 ஓவர்கள் முடிந்த நிலையில் ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.
நிதிஷ் ரெட்டி 20 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
11 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.
11 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியாக விளையாடி வந்த ஹைதராபாத் அணி வீரர் ட்ராவிஸ் ஹெட் 48 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
10 ஓவர்கள் முடுந்த நிலையில் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
8 ஓவர்கள் முடிந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.
6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார் மயங் அகர்வால்
7 ஓவர்கள் முடிந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.
பவர்ப்ளே முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 56 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஹைதராபாத் அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மும்பை அணியின் இளம் பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு நோபால் வீசினார். இதில் முதல் நோ பாலில் டிராவிஸ் ஹெட் க்ளீன் போல்ட் ஆனார்.
4 ஓவர்கள் முடிவில் மும்பை விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் சேர்த்து வருகின்றது.
மூன்று ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஹைதராபாத் அணி 2 ஓவர்கள் முடிவில் 21 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இரண்டாவது ஓவரின் 4வது பந்தை அபிஷேக் சிக்ஸருக்கு விளாசினார். இந்த சிக்ஸர்தான் இந்த போட்டியின் முதல் சிக்ஸர்.
முதல் ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 7 ரன்கள் சேர்த்துள்ளது. முதல் ஓவரின் கடைசி பந்து டிராவிஸ் ஹெட் பேட்டில் பட்டு இன்சைடு எட்ஃப் ஆகி பவுண்டரிக்கு போனது.
ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா தொடங்கியுள்ளனர்.
மும்பை அணி சார்பாக இன்று அன்ஷுல் கம்போஜ் என்ற புதிய பவுலர் அறிமுகமாகின்றார்.
மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்): இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டிம் டேவிட், அன்ஷுல் கம்போஜ், பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், மயங்க் அகர்வால், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சன், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), புவனேஷ்வர் குமார், டி நடராஜன்
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
விறுவிறுப்பான ஐ.பி.எல் சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இதுவரை 22 ஐபிஎல் போட்டிகள் மோதியுள்ளது. இதில். அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 12 முறை வெற்றி பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 முறை வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற மும்பை:
வான்கடே ஸ்டேடியத்தின் பிட்ச் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஸ்டேடியத்தில் பேட்ஸ்மேன்கள் அபாரமாக ரன் குவித்து வருகின்றனர். இருப்பினும், போட்டியின் தொடக்கத்தின்போது வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை வீழ்த்த அதிக வாய்ப்புகள் உண்டு.
அதேசமயம், இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், பீல்டிங் அணி சவால்களை எதிர்கொள்ளலாம். இதன் காரணமாக டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை முதலில் தேர்வு செய்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்)
அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், மயங்க் அகர்வால், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சன், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), புவனேஷ்வர் குமார், டி நடராஜன்
மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்)
இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டிம் டேவிட், அன்ஷுல் கம்போஜ், பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா
- - - - - - - - - Advertisement - - - - - - - - -