MI vs RR LIVE Score: சொந்த மண்ணில் சொதப்பல்; மும்பையை சிதைத்த ராஜஸ்தான் வெற்றி!
IPL 2024 MI vs RR LIVE Score Updates: ராஜஸ்தான் ராயல் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
இந்த வெற்றியின் மூலம் ராஜ்ஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் சேர்த்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. மும்பை அணி ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் 101 ரன்கள் சேர்த்துள்ளது.
13 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது 4வது விக்கெட்டாக அஸ்வினை இழந்துள்ளது. இவரை ஆகாஷ் மாத்வால் வீழ்த்தினார்.
10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டினை இழந்து 73 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ராஜஸ்தான் அணி 7 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் 7வது ஓவரில் பட்லர் தனது விக்கெட்டினை 13 ரன்னில் ஆகாஷ் மாத்வால் பந்தில் தனது விக்கெட்டினை கைப்பற்றி அசத்தினார்.
பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆகாஷ் மாத்வால் பந்தில் சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டினை இழந்தார்.
இரண்டு ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 17 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மபாகா ஐபிஎல் தொடரின் முதல் விக்கெட்டினை கைப்பற்றினார். இவரது பந்தில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார்.
போட்டியின் முதல் ஓவரின் 4வது பந்தில் ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் அணிக்கான முதல் பவுண்டரியை விளாசினார்.
126 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியுள்ளது.
மும்பை அணியின் டாப் ஆர்டரை காலி செய்த ராஜஸ்தான் பவுலர் போல்ட் சிறப்பாக பந்து வீசினார். 4 ஓவர்கள் வீசிய இவர் 22 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரோகித் சர்மா, நமன் தீர் மற்றும் டிரால்ட் பிராவிஸ் ஆகியோர் தங்களது விக்கெட்டினை இழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் சேர்த்து, ராஜஸ்தான் அணிக்கு 126 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிம் டேவிட் தனது விக்கெட்டினை 17 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
17 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.
15 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
12 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் சேர்த்துள்ளது.
11.1 வது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்யூஸ் சாவ்லா தனது விக்கெட்டினை 3 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
11 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
10 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அதிரடியாக ஆடிக்கொண்டு வந்த ஹர்திக் பாண்டியா தனது விக்கெட்டினை 21 பந்தில் 34 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா கூட்டணி 33 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து மும்பை அணியை சரிவில் இருந்து மெல்ல மெல்ல மீட்டு வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
7 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் சேர்த்து, சரிவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகின்றது.
மும்பை இந்தியன்ஸ் அணி 6.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் சேர்த்துள்ளது.
பவர்ப்ளே முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் குவித்துள்ளது.
ஹர்திக் பாண்டியா தனது முதல் பவுண்டரியை போட்டியின் 6வது ஓவரில் விளாசியுள்ளார்.
5 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் சேர்த்துள்ளது.
4 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகள இழந்து 20 ரன்கள் சேர்த்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் தனது விக்கெட்டினை 14 பந்தில் 16 ரன்கள் சேர்த்த நிலை இழந்து வெளியேறினார்.
மூன்று ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 16 ரன்கள் சேர்த்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய ப்ரெவிஸ் தனது விக்கெட்டினை தான் எதிர் கொண்ட முதல் பந்தில் இழந்து வெளியேறினார்.
இரண்டு ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 13 ரன்கள் சேர்த்துள்ளது.
இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் இஷான் கிஷன் போட்டியின் முதல் சிக்ஸரை விளாசினார்.
நமன் தீஎ தனது விக்கெட்டினை தான் எதிர் கொண்ட முதல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ரோகித் சர்மா தான் எதிர் கொண்ட முதல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
போட்டியின் நான்காவது பந்தில் இஷான் கிஷன் முதல் ரன்னை எடுத்தார்.
ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, நமன் திர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டிம் டேவிட், ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜஸ்பிரித் பும்ரா, குவேனா மபாகா
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் அஸ்வின் இன்று தனது 200வது போட்டியில் விளையாடவுள்ளார்.
கேப்டனாக ஹர்திக் பாண்டியா 50 வது போட்டியில் இன்று களமிறங்குகின்றார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக தனது முதல் வெற்றியை ஹர்திக் பாண்டியா இன்று பதிவு செய்வாரா என்ற கேள்வி ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Background
17வது ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதவுள்ளது. இரு அணிகளும் இதற்கு முன்னர் இரண்டு லீக் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இத்தோடு தனது மூன்றாவது வெற்றியை எதிர்நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை அணிக்கு எதிராக இன்று அதாவது ஏப்ரல் மாதம் முதல் தேதியில் மும்பை வான்கடே மைதானத்தில் களமிறங்குகின்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு இதுதான் வெளி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி.
நடப்பு ஐபிஎல் தொடரில் தனது சொந்த மைதானத்தில் முதல் முறையாக பலமான ராஜஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்குகின்றது. இதுமட்டும் இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி தனது மூன்றாவது லீக் போட்டியில் வெற்றி பெற்று நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு மும்பை ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி என்றால் ராஜ்ஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லருக்கு விருந்து சாப்பிடுவதைப் போல் அமைந்துவிடும். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக ஜாஸ் பட்லரின் ஆட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தியுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 15 முறை வெற்றியை தனதாக்கியுள்ளது. அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 முறை வெற்றியை தனதாக்கியுள்ளது. ஒரு போட்டி மட்டும் டிராவில் முடிந்துள்ளது. மும்பை அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 212 ரன்களும் குறைந்த பட்சமால 90 ரன்களும் சேர்த்துள்ளது. அதேபோல் ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 214 ரன்களும் குறைந்தபட்சமாக 92 ரன்களையும் எடுத்துள்ளது.
ரசிகர்களின் அதிருப்தி
இந்த போட்டியில் மும்பை அணி தனது சொந்த மைதானத்தில் களமிறங்குகின்றது. கடந்த 11 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த ரோகித் சர்மாவுக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ட்ரேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, கேப்டன் பொறுப்பையும் வழங்கியது. இதனால் மும்பை அணி ரசிகர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகினர். இந்நிலையில் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக மும்பை அணி ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த அதிக வாய்ப்புள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -