இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பு, பாசறைத் திரும்பும் நிகழ்வு ஆகியவற்றை காண்பதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை நாளை முதல் தொடங்க உள்ளது.
இந்தியாவின் மிக மிக முக்கியமான இரண்டு தினங்களாக கொண்டாடப்படுவது சுதந்திர தினமும், குடியரசு தினமும் ஆகும். 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்தியா, 3 ஆண்டுகளுக்கு பின்னர் 1950ம் ஆண்டு குடியரசு நாடு ஆனது. கடந்த 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி ஆண்டுதோறும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியரசு தின ராணுவ அணிவகுப்பு:
நாட்டின் 76வது குடியரசு தினம் வரும் 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை நாடே கோலாகலமாக கொண்டாட உள்ளது. டெல்லி கடமைப்பாதையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முப்படைகளின் அணிவகுப்பை ஏற்பார்.
நாட்டின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையிலும் கலாசார பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் நோக்கிலும் கடமைப்பாதையில் அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதற்கு முன்பாக, ராணுவ அணிவகுப்புக்கான ஒத்திகையும் நடைபெற உள்ளது.
கட்டணச்சீட்டு விவரம் வெளியீடு:
இந்த நிலையில், குடியரசு தின அணிவகுப்பு, பாசறைத் திரும்பும் நிகழ்வு ஆகியவற்றை காண்பதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை நாளை முதல் தொடங்க உள்ளது. இதற்கான கட்டணச்சீட்டு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
வ. |
நிகழ்ச்சி |
கட்டணச்சீட்டு விலை |
அட்டவணை |
1. |
குடியரசு தின அணிவகுப்பு (26.01.2025) |
ரூ.100/- & ரூ.20/- |
2025-ம் ஆண்டு ஜனவரி 02 முதல் 11 வரை –காலை 9.00 மணி முதல் அன்றைய இருக்கைகள் தீரும் வரை. |
2. |
பாசறை திரும்பும் நிகழ்வு |
ரூ.20/- |
|
3. |
பாசறை திரும்பும் நிகழ்வு (29.01.2025) |
ரூ.100/- |
கட்டணச் சீட்டுகளை aamantran.mod.gov.in என்ற இணைய தளத்திலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.
வழக்கமாக, டெல்லியில் நடைபெறும் குடியரசு தினத்திற்கு வெளிநாட்டு தலைவர்கள், சிறப்பு விருந்தினராக பங்கேற்பார்கள். அந்த வகையில், இந்தாண்டு குடியரசு தின சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறப்பு விருந்தினர்களின் பட்டியல்:
2023 ஆம் ஆண்டு அப்தெல் ஃபத்தா எல்-சிசி, எகிப்து ஜனாதிபதி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.
2022 மற்றும் 2021 - கோவிட் தொற்றுநோய் காரணமாக தலைமை விருந்தினர் அழைப்பு இல்லை
2020 - பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டார்
2019 - சிரில் ராமபோசா, தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி
2018 - தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (ஆசியான்) மாநிலங்களின் தலைவர்கள்
இதையும் படிக்க: அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?