இன்று புத்தாண்டு 2025 ஆண்டு பிறந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் லேசான சாரல் மழை பெய்தது. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் கனமழையானது வெளுத்து வாங்கியது.


இயல்பாக டிசம்பர் மாதத்துடன் வடகிழக்கு பருவமழையானது நிறைவடைந்துவிடும்; ஆனால், இந்த பருவத்தில் ஜனவரி 15 வரை நீடிப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வரும் நாட்களில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




தமிழ்நாட்டில் மழை நிலவரம்:


இந்நிலையில், இன்று மற்றும் அடுத்த 7 நாட்களுக்கு மழை நிலவரம் குறித்து தெரிந்து கொள்வோம். பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 


01-01-2025:


தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.


கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) பகுதியில் இரவு நேரங்களில் ஒரிரு ங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது.


02-01-2025:


தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.


03-01-2025 முதல் 06-01-2025 வரை:


தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


07-01-2025:


கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.அதிகாலை வேளையில் வேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்  என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


Also Read: Happy New Year 2025 Wishes: விருப்பமானவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கனுமா.! உங்களுக்கான சிறந்த வாழ்த்துகள்.!