”யார் அந்த சார்”போராட்டம்
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரத்தை கையில் எடுத்த அதிமுக சென்னையில் உள்ள பிரபல எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி ”யார் அந்த சார்” என்ற பதாகைகளை ஏந்திய படி போராட்டம் நடத்தியது. இந்த போராட்டம் தொடர்பான போட்டோக்கள் சமூக வலைதலங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இந்த பரபபரப்புகளுக்கு இடையே மேலும் அரசியல் களத்தை சூடாக்கியது , ”அதிமுக ஐடிவிங் நடத்திய இந்த போராட்டத்தை பாராட்டுகிறேன்” என்று அண்ணாமலை போட்ட ஒற்றை பதிவு பரபரப்பை எற்படுத்தியது.
கூட்டணி முறிவுக்கு பிறகு அதிமுகவை கடுமையாக தாக்கி வரும் அண்ணாமலை திடீரென அதிமுகவை பாராட்டியது அதிமுக , பாஜக இரு தரப்பிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இச்சூழலில் அமித் ஷா போட்ட ஆர்டர் தான் அண்ணமலையை இப்படி பேச வைத்திருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.கடந்த சில நாட்கலுக்கு முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்திருக்கிறார்.
கூட்டணிக் கதவு அடைபடக்கூடாது
அப்போது அண்ணாமலையிடம் அமித்ஷா,”2026ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. உங்களால் தமிழ்நாட்டில் எந்த கட்சியுடனும் நமது கூட்டணிக் கதவு அடைபடக்கூடாது. அதைப் போல நீங்கள் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க வேண்டாம். வாய்ப்புள்ள எல்லா கூட்டணிக் கதவுகளையும் நாம் திறந்தே வைத்திருக்க வேண்டும்” என்று உத்தரவு போட்டதாக தகவல் வெளியாயுள்ளது. இச்சூழலில் தான் அண்ணாமலை அதிமுகவை பாராட்டி பதிவு வெளியிட்டிருக்கிறார். இதைப்பற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியிடம் கேட்ட போது அதுதான் பாராட்டிவிட்டாரே என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு சென்றது அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் அமையும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.