LSG vs CSK LIVE Score: லக்னோவிடம் சரணடைந்த சென்னை; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ!

IPL 2024 LSG vs CSK LIVE Score Updates: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 19 Apr 2024 11:23 PM
LSG vs CSK LIVE Score: லக்னோவிடம் சரணடைந்த சென்னை; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 19 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது. 

LSG vs CSK LIVE Score: கே.எல். ராகுல் அவுட்!

தொடக்க வீரராக களமிறங்கி பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் தனது விக்கெட்டினை ஆட்டத்தின் 18வது ஓவரின் முதல் பந்தில் இழந்து வெளியேறினார். 

LSG vs CSK LIVE Score: 150 ரன்களை எட்டிய லக்னோ!

16.3 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 155 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

LSG vs CSK LIVE Score: முதல் விக்கெட்டினை கைப்பற்றிய சென்னை!

15வது ஓவரின் கடைசி பந்தில் லக்னோ அணியின் டி காக் தனது விக்கெட்டினை 43 பந்தில் 54 ரன்கள் சேர்த்த நிலையில் முஸ்தஃபிஸூர் பந்தில் இழந்து வெளியேறினார். இந்த ஆட்டத்தில் சென்னை அணி கைப்பற்றும் முதல் விக்கெட் இதுதான். 

LSG vs CSK LIVE Score: விக்கெட் வீழ்த்த சென்னை அணி போராட்டம்!

14 ஓவர்கள் வரை சென்னை அணி பவுலர்களால் இதுவரை ஒரு விக்கெட் கூட கைப்பற்ற முடியவில்லை. லக்னோ அணி 129 ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு பெரும் தலைவலியைக் கொடுத்து வருகின்றது. 

LSG vs CSK LIVE Score: கை நழுவிப் போகும் ஆட்டம்; விக்கெட்டுகள் வீழ்த்த பெரும் போராட்டத்தில் சென்னை!

13 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் லக்னோ அணியின் வெற்றிக்கு அடுத்த 7 ஓவர்களில் 64 ரன்கள் தேவைப்படுகின்றது. 

LSG vs CSK Match Highlights: பாதி ஆட்டம் முடிந்தது!

10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 89 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி சிறப்பாக முன்னேறிக்கொண்டு உள்ளது. 

LSG vs CSK LIVE Score: இலக்கை வேகமாக துரத்தும் லக்னோ!

லக்னோ அணி 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 12 ஓவரில் 102 ரன்கள் தேவைப்படுகின்றது. 

LSG vs CSK LIVE Score: 6 ஓவர்கள் முடிவு

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 6 ஓவர்களின் முடிவில் 54 ரன்கள் எடுத்துள்ளது. 

LSG vs CSK LIVE Score: 5 ஓவர்கள் முடிவு

சிஎஸ்கேவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 5 ஓவர்களின் முடிவில் 43 ரன்கள் எடுத்துள்ளது. 

LSG vs CSK LIVE Score: லக்னோ அணி நிதான ஆட்டம்

சிஎஸ்கேவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 4 ஓவர்களின் முடிவில் 34 ரன்கள் எடுத்துள்ளது. லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 22 ரன்களுடனும் டிகாக் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

LSG vs CSK LIVE Score: இறுதியில் அதிரடி காட்டிய தல, தளபதி; லக்னோ அணிக்கு 177 ரன்கள் இலக்கு!

20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியின் ஜடேஜா 40 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தும், மகேந்திர சிங் தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தும் இறுதிவரை களத்தில் இருந்தனர். 

LSG vs CSK LIVE Score: மொயின் அலி அவுட்!

அதிரடியாக சிக்ஸர்கள் விளாசிய மொயின் அலி 18வது ஓவரின் 5வது பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

LSG vs CSK LIVE Score: ஹாட்ரிக் சிக்ஸர் விளாசிய மொயின் அலி!

ரவி பிஷ்னாய் வீசிய ஆட்டத்தின் 18வது ஓவரில் மொயின் அலி ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தினார். 

LSG vs CSK LIVE Score: அரைசதம் விளாசிய ஜடேஜா!

சென்னை அணியை நெருக்கடியான் சூழலில் இருந்து மெல்ல மெல்ல மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஜடேஜா 36 பந்தில் 53 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார். 

IPL 2024 LSG vs CSK LIVE Score: பொறுப்பாக ஆடி வந்த ரஹானே அவுட்!

சென்னை அணியின் தொடக்க வீரரான ரஹானே சிறப்பான மற்றும் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் அவரின் விக்கெட்டினை குர்னல் பாண்டியா பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். ரஹானே 24 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார். 

IPL 2024 LSG vs CSK LIVE Score: சீராக ரன்கள் சேர்க்கும் சென்னை!

7.3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் சேர்த்து சீராக ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

LSG vs CSK LIVE Score: பவர்ப்ளே முடிந்தது.. 50 ரன்களை எட்டிய சென்னை..!

6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

LSG vs CSK LIVE Score: 5 ஓவர்கள் முடிந்தது!

5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL 2024 LSG vs CSK LIVE Score: கேப்டன் ருதுராஜ் அவுட்; சந்தோஷத்தில் லக்னோ!

சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் தனது விக்கெட்டினை யாஷ் தகுர் பந்தில் 13 பந்தில் 17 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

IPL 2024 LSG vs CSK LIVE Score: நான்கு ஓவர்கள் முடிந்தது!

4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 29 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL 2024 LSG vs CSK LIVE Score: நிதான ஆட்டத்தில் ஈடுபடும் சென்னை!

3.3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 24 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

LSG vs CSK LIVE Score: தொடக்கமே அதிர்ச்சி!

2.3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 11 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL 2024 LSG vs CSK LIVE Score: க்ளீன் போல்ட் - ரச்சின் ரவீந்திரா அவுட்!

சென்னை அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா தனது விக்கெட்டினை ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் மோசின் கான் பந்தில் வெளியேறினார். 

IPL 2024 LSG vs CSK LIVE Score: முதல் ஓவர் முடிந்தது!

முதல் ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

LSG vs CSK LIVE Score: லக்னோவுக்கு எதிராக களமிறங்கும் சென்னை; இமாலய இலக்கை நிர்ணயிக்குமா?

லக்னோ அணிக்கு எதிராக சென்னை அணி தனது பேட்டிங்கினைத் தொடங்கியுள்ளது. 

Background

LSG Vs CSK, IPL 2024: லக்னோ மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.


ஐபிஎல் தொடர் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 33 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று கே.எல். ராகுல் தலைமயிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.


லக்னோ - சென்னை மோதல்:


உத்தரபிரதேச  மாநிலம் லக்னோவில் உள்ள ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. லக்னோ அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் தலா 3 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் நீடிக்கிறது. கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. எனவே ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க இன்றைய போட்டியில் வெற்றி பெற லக்னோ முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், சென்னை அணியோ இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அந்த அணி வெற்றுஇ பெற்றுள்ளது. அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற தீவிரம் காட்டுகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


பலம், பலவீனங்கள்:


உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது லக்னோ அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அந்த அணியை பொறுத்தவரையில் கே.எல். ராகுல், ஸ்டோய்னிஸ், பூரான் மற்றும் டி காக் ஆகியோர் என அதிரடி பேட்ஸ்மேன்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். ஆனால், களத்தில் அவர்களின் செயல்பாடு என்பது நடப்பு தொடரில் இதுவரை மெச்சிக்கொள்ளும்படியாக இல்லை.  யாஷ் தாக்கூர் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் பந்துவீச்சில் நல்ல ஃபார்மில் உள்ளனர். இளம் வேகப்பந்துவீச்சாலர் மயங்க் யாதவ்ன் காயம் அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது.  சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்,ஷிவம் துபே மற்றும் தோனி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளன. ஆனால் ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் போன்ற மற்ற முக்கிய வீரர்கள் தொடர்ந்து சொதப்புவது அணிக்கு பின்னடைவாக உள்ளது. பந்துவீச்சில் பதிரனா மற்றும் ஜடேஜா ஆகியோர் நம்பிக்கை தருகின்றனர். 


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் லக்னோ அணி 1 முறையும், சென்னை அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.  சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி அதிகபட்சமாக 211 ரன்களையும், குறைந்தபட்சமாக 205 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், லக்னோ அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 217 ரன்களையும், குறைந்தபட்சமாக 210 ரன்களையும் பதிவு செய்துள்ளது.


மைதானம் எப்படி?


ஏக்னா கிரிக்கெட் மைதானம் ஸ்லோ பிட்ச் என்பதோடு, குறைந்தபட்ச ஸ்கோரிங் போட்டிகளுக்கு பிரபலமானதாகும். இன்றைய போட்டியிலும் அதே சூழல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும்.


உத்தேச அணி விவரங்கள்:


லக்னோ: குயின்டன் டி காக், KL ராகுல், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், மயங்க் யாதவ், யாஷ் தாக்கூர்


சென்னை: ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரகானே, ருதுராஜ் கெய்க்வாட் , சமீர் ரிஸ்வி, சிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (Wk), தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.