மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் நுழைவுத் தேர்வான கேட் தேர்வு ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் இந்த அனுமதிச் சீட்டைப் பெறுவது எப்படி? காணலாம்.


பிப்ரவரி மாதம் கேட் தேர்வு


ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் தேர்வு  (GATE- Graduate Aptitude Test in Engineering)  நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 2025ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.


பொறியியல் படிப்புகளோடு தொழில்நுட்பம் கட்டுமானம், அறிவியல் மற்றும் மானுடவியல் சார்ந்த முதுநிலை படிப்புகளுக்கும் முனைவர்கள் படிப்புகளில் சேருவதற்கும் கேட் தேர்வு மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன. தனியார் கல்வி நிறுவனங்களும் கேட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.


அரசு வேலைக்கும் உதவும் கேட் தேர்வு


அதேபோல பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் (PSUs) கேட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்களை வேலையில் சேர்க்கின்றன. 


ஆண்டுதோறும் நடைபெறும் GATE தேர்வை, ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்தும். இந்த நிலையில், 2025ஆம் ஆண்டு தேர்வை ஐஐடி ரூர்க்கி நடத்த உள்ளது.


இந்த நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (ஜனவரி 7) வெளியாகி உள்ளது.




ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?



  • தேர்வர்கள் https://goaps.iitr.ac.in/login என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

  • அதில் Enrollment Id  எனப்படும் சேர்க்கை ஐ.டி. அல்லது இ மெயில் முகவரியை உள்ளிட வேண்டும்.

  • அதனுடன் கடவுச் சொல்லையும் பதிவு செய்ய வேண்டும்.

  • அவற்றை சரியாக உள்ளிட்டு ஹால் டிக்கெட்டைப் பெறலாம்.


கூடுதல் தகவல்களுக்கு: https://gate2025.iitr.ac.in/