நேபாளம்-திபெத் எல்லையில் இன்று அதிகாலை காத்மாண்டு அருகே 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் புது டெல்லி, சிலிகுரி மற்றும் பாட்னா ஆகிய இந்திய நகரங்களில் லேசான நில அதிர்வானது உணரப்பட்டது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்:
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று (07.01.25) அதிகாலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு (USGS) வெளியிட்டுள்ள தகவலின் படி, நிலநடுக்கமானது இமயமலை தொடர்கள் அமைந்துள்ள லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கிலோமீட்டர் தொலைவில் ஏற்ப்பட்டதாக தெரிகிறது. மேலும் பூமியின் நிலப்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது இந்திய நேரப்படி காலை 06:35:16 மணிக்கு நிகழ்ந்தது, இதனால் வீடுகளுக்குள இருந்த பீதியுடன் மக்கள் சாலைகள் தஞ்சமடைந்தாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் சேதம் குறித்து இது வரை எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.
டெல்லியில் நில அதிர்வு:
இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது வட இந்தியாவிலும் உணரப்பட்டது, டெல்லி, பாட்னா, சிலிகுரி ஆகிய நகரங்களிலும் லேசான நில அதிர்வானது உணரப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் பலர் நிலம் நடுங்குவதை உணர்ந்து பாதுகாப்புக்காக வெளியில் விரைந்தனர். இதையடுத்து உள்ளூர் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை அறிவுரைகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர, சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
சென்ற மாதம் நிலநடுக்கம்:
சென்ற ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
2015 ஏப்ரலில் பயங்கர நிலநடுக்கம்:
ஏப்ரல் 2015 இல், நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், சுமார் 9,000 பேர் இறந்தனர் மற்றும் 22,000 மக்கள் காயமடைந்தனர். மேகும் 8,00,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.