HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்

எச்.எம்.பி.வி.வைரஸ் பாதிப்பால் சீனாவில் தற்போது என்ன நிலவரம்? என்று அங்கு வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Continues below advertisement

கொரோன வைரஸ் பரவலுக்குப் பிறகு சீனாவில் எந்தவொரு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் ஒட்டுமொத்த உலக நாடுகளும் அச்சத்திற்கு ஆளாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது உலகை அச்சுறுத்தும் புதிய வைரசாக எச்.எம்.பி.வி. வைரஸ் உருவெடுத்துள்ளது. 

எச்.எம்.பி.வி.வைரஸ்

Continues below advertisement

இந்த வைரஸ் பாதிப்பு தற்போது இந்தியாவிலும் தொடங்கியுள்ளது. பெரும்பாலும் குழந்தைகளேயே இந்த வைரஸ் தாக்கும் என்பதால் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில், சீனாவில் மீண்டும் ஊரடங்கு? சீனாவில் மீண்டும் கட்டுப்பாடுகள்? என்று தகவல்கள் பரவி வரும் நிலையில், அவை அனைத்தும் வதந்தி என்று அங்கு மருத்துவராக பணியாற்றும் மருத்துவர் கங்கேஸ்வரன் பணியாற்றும் தமிழர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

பாதிப்பிற்கு காரணம் என்ன?

அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, "சீனாவில் உண்மையான நிலவரம் என்னவென்று தெரியாமல் தகவலைப் பரப்புகின்றனர்.  இங்கு உண்மையில் நிமோனியா, ஆஸ்துமா என நோயாளிகள் அதிகமாவதற்கு காரணம் என்னவென்றால், காலநிலை மாற்றம்தான். நான் இருக்கும் நகரத்திலே ஜீரோ டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை செல்ல உள்ளது. இந்த காலநிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரியில் இப்போது மட்டுமில்லாமல் எப்போதும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் நிமோனியா கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். நான் 2013ம் ஆண்டில் இருந்து சீனாவில் இருக்கிறேன். 

மீண்டும் ஊரடங்கா?

அதேபோல, இன்ப்ளூயன்சா, ப்ளூ இது வழக்கமாக இந்த சீசனில் அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் காலநிலை மாற்றமே ஆகும். மற்றபடி இவர்கள் கூறுவது போல புது வைரஸ் உருவாகியிருக்கிறது. திரும்ப பேண்டமிக்கா? லாக்டவுமா? சீனா முழுவதும் எமர்ஜென்சியா? இங்கே உள்ள மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். சீனா அரசாங்கம் மறைக்கிறது என்று எந்தவொரு சூழலும் கிடையாது. 

உண்மையான களநிலவரத்தைப் பாருங்க. சீனா வந்திருக்கமாட்டார்கள். சீனாவைப் பார்த்திருக்க மாட்டார்கள். இங்கே என்ன நடக்கிறது? என்று தெரியாமல் ஏன் இப்படி யூ டியூபில் பண்ணுகிறீர்கள். நீங்கள் சொல்வதைத்தான் மக்கள் நம்புகிறார்கள். அங்கே உள்ள எங்கள் குடும்பம் நம்புகிறது. 

ALSO READ | HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!

தமிழ் மாணவர்கள், இந்திய மாணவர்கள் குடும்பத்தினர் உங்கள் தகவலால் பயப்படுகிறார்கள். நிலைமை மோசமானதாக இருந்தால் நாங்களே மோசமாக உள்ளது என்று கூறுவோம். நான் மருத்துவத்துறையில் பணியாற்றுகிறேன். எனக்கே பயத்தை உருவாக்குகிறார்கள். ஏன் இப்படி பண்ணுகிறீர்கள்? என்றுதான் தெரியவில்லை.

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

தற்போது மருத்துவர் கங்கேஸ்வரனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இருப்பினும் எச்.எம்.பி.வி. வைரசின் பாதிப்பு குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் புதிய வைரஸ் அல்ல. பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி வருகிறது என்று மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா மக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

Continues below advertisement