KKR vs MI LIVE Score: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 158 ரன்கள் இலக்கு!
IPL 2024 KKR vs MI LIVE Score Updates: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
15 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.
14 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.
14 பந்துகள் களத்தில் நின்ற ஆண்ட்ரே ரஸ்ஸல் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 24 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
23 பந்துகள் களத்தில் நின்ற நிதிஷ் ராணா 33 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
11 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியாக விளையாடி வந்த வெங்கடேஷ் அய்யர் 42 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
8 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்துள்ளது.
5 ஓவர்கள் முடிந்த நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது கொல்கத்தா அணி
கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் விக்கெட்டை பறிகொடுத்தார்.
3 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது.
2 ஓவர்கள் முடிந்த நிலையில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்துள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.
சுனில் நரைன் டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
முதல் ஓவர் முடிந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பிலிப் சால்ட் 6 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
மழையால் தாமதமான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
Background
ஐ.பி.எல் சீசன் 17:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 59 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன. மீதமுள்ள 8 அணிகளும், பிளே-ஆஃப் சுற்றுக்காக முட்டி மோதி வருகின்றன. இனி வரும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று, தங்களது பிளே-ஆஃப் வாய்ப்பை இறுதி செய்ய அந்த அணிகள் தீவிரம் காட்டுகின்றன. அந்த வகையில், இன்றைய லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.
மும்பை - கொல்கத்தா:
கொல்கத்தா அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி, 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 லீக் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றாலே அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். மும்பை அணியோ 12 போட்டிகளில் நான்கில் மட்டும் வென்று பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. இருப்பினும் நடப்பு தொடரில் ஏற்கனவே பெற்ற தோல்விக்கு, கொல்கத்தாவை பழிவாங்க மும்பை அணி முனைப்பு காட்டுகிறது. இதனை தகர்த்து, நடப்பு தொடரில் முதல் அணியாக கொல்கத்தா பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 23 முறையும், கொல்கத்தா அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் மும்பை அணி அதிகபட்சமாக 210 ரன்களையும், குறைந்தபட்சமாக 108 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், மும்பை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 232 ரன்களையும், குறைந்தபட்சமாக 67 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
ஈடன் கார்டன் மைதானம் எப்படி?
ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங்கிற்கு ஏதுவானது என்பது அனைவரும் அறிந்ததே. நடப்பாண்டிலும் அதில் எந்த மாற்றமும் இல்லை. நடப்பு தொடரில் கொல்கத்தாவில் இதுவரை ஆறு போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் நான்கில் சேஸிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும், இரவில் நிலவும் பனிப்பொழிவு பேட்டிங்கிற்கு சாதகமாக அமைகிறது. எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதே நல்ல முடிவாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -