மேலும் அறிய

MI Vs CSK Fans: சிஎஸ்கே ரசிகரை அடித்துக்கொன்ற மும்பை ரசிகர்கள் - ரோகித் சர்மா விக்கெட்டால் விவாத விபரீதம்

MI Vs CSK Fans: மகாராஷ்டிராவில் சென்னை அணி ரசிகரை மும்பை அணி ரசிகர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MI Vs CSK Fans: ரோகித் சர்மா அவுட்டானதை கொண்டாடிய சென்னை அணி ரசிகர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஐபிஎல் கோலாகலம்:

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. உலகின் பணக்கார கிரிக்கெட் தொடரான  ஐபிஎல் மூலம்,  வீரர்கள் மற்றும் அணி உரிமையாளர்கள் பல கோடிகளை வருவாயாக ஈட்டி வருகின்றன. இப்படி இருக்கையில் தான்,  ஐபிஎல் போட்டி காரணமாக மகாராஷ்டிராவின் கோலாப்பூரில், ரசிகர்களுக்கு மத்தியில் நடந்த சண்டையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை ரசிகர்கள் வெறிச்செயல்:

கடந்த 27ம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி அதிரடியாக விளையாடி 277 ரன்களை குவித்தது. இந்த போட்டியை மகாராஷ்டிராவில் கோலப்பூரில் உள்ள ஹன்மந்த்வாடி பகுதியில், கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து பார்த்து வந்தனர். இமாலய இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. நட்சத்திர வீரரும், இந்திய அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது பந்தோபந்த் பாப்சோ திபிலே என்ற 63 வயதான சென்னை ரசிகர் ஒருவர், ரோகித் சர்மா அவுட் ஆகிவிட்டார், இனி மும்பை அணி எப்படி இந்த இமாலய இலக்கை எட்டும் என கேலியாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த மும்பை ரசிகர்கள், பாப்சோ திபிலேவை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

சிஎஸ்கே ரசிகர் அடித்துக் கொலை:

தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த பாப்சோ திபிலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட மும்பை ரசிகர்களான பல்வந்த் மகாதேவ் ஜான்ஜே (வயது 50) மற்றும் சாகர் சதாசிவ் ஜான்ஜே (வயது 35) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். கிரிக்கெட் போட்டியால் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், ஒரு போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த அணி என்ற மோசமான சாதனையை மும்பை அணி படைத்ததால், மகாதேவ் ஜான்ஜே மற்றும் சாகர் சதாசிவ் ஜான்ஜே ஆகியோர் ஏற்கனவே கோபத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், பாப்சோ திபிலே கேலி செய்ததால் ஆத்திரமடைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

மும்பை அணி தோல்வி:

இதனிடையே, ஐதராபாத் அணிக்கு எதிரான அந்த போட்டியில் மும்பை அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 2 லீக் போட்டிகளிலும், மும்பை அணி தோல்வியுற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs SRH Match Highlights: மொத்தமாக சொதப்பிய கம்மின்ஸ் படை; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா!
KKR vs SRH Match Highlights: மொத்தமாக சொதப்பிய கம்மின்ஸ் படை; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு! மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு! மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Rahul Tripathi: எதிர்பாராதவிதமாக ரன் அவுட்.. உடைந்து அழுத SRH வீரர் ராகுல் திரிபாதி! புகைப்படம் வைரல்
Rahul Tripathi: எதிர்பாராதவிதமாக ரன் அவுட்.. உடைந்து அழுத SRH வீரர் ராகுல் திரிபாதி! புகைப்படம் வைரல்
Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!
Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Kodaikanal Flood | 5 மணி நேர போராட்டம்.. குழந்தையுடன் காத்திருந்த தாய் கொடைக்கானல் வெள்ளம்Duraimurugan vs EPS | ”கள்ள மௌனம் கைவந்த கலை!தேர்தல் கூட்டணிய பார்த்தோம்” EPS-ஐ விளாசும் துரைமுருகன்Rahul gandhi with dogs | ”BESTFRIEND-க்கு உடம்பு முடியல” நாயுடன் விளையாடும் ராகுல்! வைரல் வீடியோOdisha VK Pandian | தமிழர் மீது வெறுப்பை கக்கிய மோடி! பாஜக vs பிஜு ஜனதா தளம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs SRH Match Highlights: மொத்தமாக சொதப்பிய கம்மின்ஸ் படை; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா!
KKR vs SRH Match Highlights: மொத்தமாக சொதப்பிய கம்மின்ஸ் படை; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு! மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு! மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Rahul Tripathi: எதிர்பாராதவிதமாக ரன் அவுட்.. உடைந்து அழுத SRH வீரர் ராகுல் திரிபாதி! புகைப்படம் வைரல்
Rahul Tripathi: எதிர்பாராதவிதமாக ரன் அவுட்.. உடைந்து அழுத SRH வீரர் ராகுல் திரிபாதி! புகைப்படம் வைரல்
Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!
Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!
Vetrimaaran: 'கருடன்' பட இயக்குநருக்குள் இவ்வளவு மனிதாபிமானமா? - வெற்றிமாறன் சொன்ன கிரேட் தகவல்
Vetrimaaran: 'கருடன்' பட இயக்குநருக்குள் இவ்வளவு மனிதாபிமானமா? - வெற்றிமாறன் சொன்ன கிரேட் தகவல்
Indian 2 First Single Promo: வெளியானது குட்டி ப்ரோமோ! அனிருத் மிரட்டலில் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் க்ளிம்ப்ஸ்!
Indian 2 First Single Promo: வெளியானது குட்டி ப்ரோமோ! அனிருத் மிரட்டலில் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் க்ளிம்ப்ஸ்!
அச்சோ! இப்படி ஒரு துரதிஷ்டமா? மனைவி கண்முன்னே பறிபோன கணவரின் உயிர் - என்ன நடந்தது?
அச்சோ! இப்படி ஒரு துரதிஷ்டமா? மனைவி கண்முன்னே பறிபோன கணவரின் உயிர் - என்ன நடந்தது?
'பெட் ரெஸ்ட்' யாருக்கு!: பிரதமர் மோடியும், தேஜஸ்வி யாதவும் ஒருவரையொருவர் கிண்டல்!
'பெட் ரெஸ்ட்' யாருக்கு!: பிரதமர் மோடியும், தேஜஸ்வி யாதவும் ஒருவரையொருவர் கிண்டல்!
Embed widget