IPL 2024 Auction LIVE: கோடிகளில் புரண்ட வீரர்கள்; விறுவிறுப்பில் கலைகட்டிய ஐபிஎல் மினி ஏலம் முடிந்தது
IPL 2024 Auction LIVE Updates: 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்திற்கான உடனடி அப்டேட்களை ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
ஆஃப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முகமது நபியை மும்பை அணி ரூபாய் 1.5 கோடிக்கு வாங்கியுள்ளது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி லோக்கி ஃபெர்குஷனை வாங்கியுள்ளது. இவரது அடிப்படை விலை 2 கோடி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவ்னீஷ் ஆரவெல்லியை 20 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.
முஜீப் உர் ரஹ்மானை ரூபாய் 2 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.
பஞ்சாப் கிங்ஸ் அணி ரீலீ ரோசோவை 8 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாங் காங் நாட்டினைச் சார்ந்த ஜதவேத் சுப்ரமணியம் என்ற வீரரை வாங்கியுள்ளது.
பிரின்ஸ் சௌத்ரி என்ற அன் - கேப்டு ப்ளேயரை 20 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.
தோனியின் சொந்த ஊரான ராஞ்சியைச் சேர்ந்த ராபின் மின்ஸை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 3.60 கோடிக்கு வாங்கியுள்ளது. இடது கை பேட்ஸ்மேனான இவர் விக்கெட் கீப்பரும் கூட.
பஞ்சாப் கிங்ஸ் அணி சஷாங் சிங், தனய் தியாகராஜன் மற்றும் அஷ்தோஷ் சர்மாவை அடிப்படை விலை 20 லட்சத்திற்கு வாங்கியது.
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சுமித் குமாரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இவர் ஜார்கண்ட் கிரிக்கெட் அகாடமியைச் சார்ந்தவர்.
மும்பை இந்தியன்ஸ் அணி நமன் தீரை ரூபாய் 20 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளரான நுவான் துஷாராவை ரூபாய் 4.80 கோடிக்கு வாங்கியுள்ளது.
ஜே ரிச்சர்ட்சனை டெல்லி அணி அடிப்படை விலையான ரூ. 1.50 கோடியில் இருந்து ரூ. 5.00 கோடிக்கு வாங்கியுள்ளது.
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிகுர் ரகுமானை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூபாய் 2 கோடிக்கு வாங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூபாய் 10 கோடிக்கு வாங்கியது. இவரின் அடிப்படை விலை 50 லட்சமாக இருந்தது.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லியை லக்னோ அணி அடிப்படை விலையான 2 கோடிக்கு வாங்கியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாம் கரனை பெங்களூரு அணி அவரின் அடிப்படை விலையான 1.5 கோடிக்கு வாங்கியுள்ளது.
நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷமை யாரும் வாங்க முன்வராததால் அவர் விலைபோகாத வீரர்கள் பட்டியலில் சேர்க்கபப்ட்டார்.
லக்னோ அணி அஸ்டன் அகரை அவரின் அடிப்படை விலையான ஒரு கோடிக்கு வாங்கியது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் அவரின் அடிப்படை விலையான ரூபாய் 1.5 கோடிக்கு கொல்கத்தா வாங்கியது.
நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஃபின் ஆலனை யாரும் வாங்க முன்வராததால் அவர் ஏலம் கேட்கப்படாத வீரர்கள் பட்டியிலில் சேர்க்கப்பட்டார்.
RCB - 6.75 கோடி
KKR - 6.55 கோடி
PBKS - 13.15 கோடி
CSK- 3.20 கோடி
DC - 16.85 கோடி
RR - 0.90 கோடி
MI - 7.95 கோடி
SRH - 3.40 கோடி
LSG - 4.15 கோடி
GT - 21.45 கோடி
அடுத்த ஸ்லாட்டில் வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் ஏலம் கூறப்படவுள்ளனர். இவர்கள் அனைவரும் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் ஆவர்.
வீரர்களின் பெயர்கள்: ஃபின் ஆலன், அலிக் அத்தானாஸ், மார்க் சாப்மேன், சாமுவேல் ஹெய்ன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், பிராண்டன் கிங், கொலின் மன்றோ, ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், ஆஷ்டன் டர்னர், ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன், ஜேம்ஸ் வின்ஸ், இப்ராஹிம் சத்ரான் மற்றும் நஜிபுல்லா சத்ரன்.
தமிழ்நாடு வீரர் முருகன் அஸ்வினை எந்த அணியும் வாங்க விரும்பாததால் அவர் விலை போகாத வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி சுழற்பந்து வீச்சாளரான ஸ்ரேயஸ் கோபாலை அவரின் அடிப்படை விலையான ரூபாய் 20 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.
தமிழ்நாடு வீரர் மணிமாறன் சித்தார்தை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ரூ.2.40 கோடிக்கு வாங்கியுள்ளது. இவர் சுழற்பந்து வீச்சாளராவார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சளரான மனவ் சுதரை அவரின் அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் ரஷித் தாரை டெல்லி அணி அவரின் அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு வாங்கியது.
வேகப்பந்து வீச்சாளர் கார்த்தி யோகியை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூபாய் 60 லட்சத்துக்கு வாங்கியது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங்கை அவரின் அடிப்படை விலையான ரூபாய் 20 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியால் சுஷாந்த் மிஸ்ரா ரூபாய் 2.20 கோடிக்கு வாங்கப்பட்டார்.
வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ரூபாய் 5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாம் கோக்லரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூபாய் 40 லட்சத்துக்கு வாங்கியது.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் குமார் குஷகராவை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரூபாய் 7.20 கோடிக்கு வாங்கியுள்ளது.
விக்கெட் கீப்பர்களை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டி போட்டு வருகின்றன.
தமிழ்நாடு வீரர் ஷாரூக்கானை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூபாய் 7 கோடியே 40 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. இவரை வாங்க பஞ்சாப் அணி போட்டி போட்டது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அர்ஷின் குல்கர்னியை அவரின் அடிப்படை விலையான ரூபாய் 20 லட்சத்துக்கு வாங்கியது.
பேட்ஸ்மேனான ஆங்கிரிஷ் ரகுவன்ஷியை அவரது அடிப்படை விலையான ரூபாய் 20 லட்சத்துக்கு வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீர் ரிஸ்வியை குஜராத் அணியுடனான ஏலப்போட்டியில் ரூபாய் 8 கோடியே 40 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பேட்ஸ்மேனான சமீர் ரிஸ்வியை ஏலத்தில் எடுக்க சென்னை அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் போட்டிபோட்டு வருகின்றன.
கேரளாவைச் சேர்ந்த பேட்ஸ்மேனான ரோகன் குன்னம்மலை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் அவர் விலைபோகாத வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பேட்ஸ்மேனான சுபம் தூபேவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூபாய் 5 கோடியே 80 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டேரில் மிட்ஷெல் அணி நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இவரை சென்னை அணி ரூபாய் 14 கோடிக்கு வாங்கியது.
அதிக விலைக்கு ஏலம் போன பேட் கம்மின்ஸையும் டிராவிஸ் ஹெட்டையும் பாராட்டி சமூகவலைதளத்தில் வாழ்த்து தெரிவிக்க முயற்சி செயதபோது, டேவிட் வார்னரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் ப்ளாக் செய்துள்ளதை தெரிந்துகொண்டு அதனை சமூக வலைதளத்தில் பதிவாகவும் பகிர்ந்துள்ளார்.
ஹைதராபாத் அணி தன்னை ஏலத்தில் எடுத்ததிற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை ஹைதராபாத் அணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூபாய் 11.60 கோடி கையிருப்பு உள்ளது. சென்னை அணி இதுவரை 19.80 கோடி செலவு செய்துள்ளது.
செட் 5இல் ஏலத்தில் பங்கேற்ற சர்வதேச போட்டிகளில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர்களான முஜீப் ரஹ்மான் , அடில் ரஷித் , முகமது வக்கார் சலாம்கெயில் , தப்ரைஸ் ஷம்சி , இஷ் சோதி , அகேல் கொசைன் ஆகியோரை வாங்க 10 அணிகளும் விருப்பம் காட்டாததால் இவர்கள் ஏலம் கேட்கப்படாத வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷன்காவை மும்பை அணி 4 கோடியே 60 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.
ஹைதராபாத் அணி இந்திய மிதவேகப்பந்து வீச்சாளர் உனத்கட்டை ஒரு கோடியே 60 லட்சதுக்கு வாங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுடை எந்த அணியும் ஏலம் கேட்கவில்லை.
ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24.75 கோடிக்கு வாங்கியுள்ளது. இவர்தான் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் ஆவார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவியை 6.80- கோடிக்கு வாங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் ஜோஸ் இங்லிஷ் மற்றும் இங்கிலாந்து அணியின் இலங்கை அணியின் குஷால் மெண்டீஸை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் யுமேஷ் யாதவை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 5.80 கோடிக்கு வாங்கியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்ஜாரி ஜோசப்பை பெங்களூரு அணி 11.50 கோடிக்கு வாங்கியுள்ளது.
கொல்கத்தா அணி வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சகாரியாவை ரூபாய் 50 லட்சத்துக்கு வாங்கியது.
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஃபெர்குசனை எந்த அணியும் ஏலம் கேட்கவில்லை. இவரின் அடிப்படை விலை ரூபாய் 2 கோடி.
இந்திய விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத்தை அவரின் அடிப்படை விலையான ரூபாய் 50 லட்சத்துக்கு வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
தென்னாப்பிரிக்க வீரர் இடிப் ஸ்டெப்ஸ் அவரின் அடிப்படை விலையான ரூபாய் 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டார்.
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பிலிப் சால்ட்டை வாங்க எந்த அணியும் முனைப்பு காட்டாததால் அவர் ஏலம் போகாத வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டேரில் மிச்செலை 14 கோடிக்கு வாங்கியுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் பட்டேலை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூபாய் 11. 75 கோடிக்கு வாங்கியுள்ளது.
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஜெரால்ட் கோட்ஸியை மும்பை அணி 5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸை ரூபாய் 20 கோடியே 50 லட்சத்துக்கு ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.
இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை 4 கோடிக்கு மீண்டும் வாங்கியது சென்னை அணி.
உலகக் கோப்பை 2023ல் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
பெங்களூர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்காவை 1.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.
ஐபிஎல் வரலாற்றில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் மணீஷ் பாண்டேவை ஏலம் எடுக்க எந்தவொரு அணியும் முன்வரவில்லை.
டெஸ்ட் போட்டியில் 300 ரன்களை எடுத்து சாதனை படைத்திருந்த கருண் நாயரை எந்தவொரு அணிகளும் ஏலம் எடுக்கவில்லை. அதேபோல், ஸ்மித்தையும் எந்தவொரு அணியும் வாங்க முன்வரவில்லை.
ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை 6.8 கோடிக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை 4 கோடிக்கு ஏலம் எடுத்த டெல்லி கேபிடல்ஸ் அணி.
2 கோடி அடிப்படையில் விலையில் களமிறங்கிய ரூசோவை எந்தவொரு அணியும் எடுக்காமல் விட்டது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மேன் பவலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவிருக்கும் ஐபிஎல் மினி ஏலம்..
நிதிஷ் ராணா, ரின்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷ்ரேயாஸ் ஐயர், ஜேசன் ராய், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.
ஷிகர் தவான், மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங் (wk), ஜிதேஷ் சர்மா (wk), சிக்கந்தர் ராசா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே , அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், சாம் குர்ரன், ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, சிவம் சிங்.
டூப்ளெசிஸ், மேக்ஸ்வெல், கோலி, ரஜத் பட்டிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், வில் ஜேக்ஸ், லோம்ரோர், கர்ண் ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டாகர், வைஷாக் விஜய் குமார், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார், கேமரூன் கிரீன்
அப்துல் சமத், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம் (கேட்ச்), மார்கோ ஜான்சன், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், சன்விர் சிங், ஹென்ரிச் கிளாசென், புவனேஷ்வர் குமார் , மயங்க் அகர்வால், டி நடராஜன், அன்மோல்ப்ரீத் சிங், மயங்க் மார்கண்டே, உபேந்திர சிங் யாதவ், உம்ரான் மாலிக், நிதிஷ் குமார் ரெட்டி, ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஷாபாஸ் அகமது
சஞ்சு சாம்சன் , ஜோஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டொனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ரவிச்சந்திரன் அஷ்வின் , குல்தீப் சென், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஜம்பா, அவேஷ் கான்
KL ராகுல் , டி காக், நிகோலஸ் பூரான், ஆயுஷ் பதோனி, கைல் மேயர்ஸ், ஸ்டோய்னிஷ், தீபக் ஹூடா,ரவி பிஷ்னோய், நவீன் உல் -ஹக், க்ருனால் பாண்டியா, யுத்வீர் சிங், பிரேராக் மன்கட், யாஷ் தாக்கூர், அமித் மிஸ்ரா, மார்க் வூட், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், தேவ்தத் படிக்கல்
ரிஷப் பந்த், பிரவின் துபே, டேவிட் வார்னர், விக்கி ஓஸ்ட்வால், பிரித்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், லுங்கி நிகிடி, லலித் யாதவ் , கலீல் அகமது, மிட்செல் மார்ஷ், இஷாந்த் சர்மா, யாஷ் துல், முகேஷ் குமார்.
சுப்மன் கில் (கேட்ச்), டேவிட் மில்லர், மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், பி. சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் டெவாடியா, முகமது ஷமி, நூர் அகமது, ஆர். சாய் கிஷோர், ரஷித் கான், ஜோசுவா லிட்டில், மோஹித் ஷர்மா.
MS தோனி (c) (wk), மொயீன் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (wk), துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மஹீஷ் தீக்ஷனா.
மகேந்திர சிங் தோனியின் கீழ் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், சிறந்த கேப்டன்களில் ஒருவரின் கீழ் விளையாடுவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் - ஜெரால்ட் கோட்ஸி
ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ரோஹித் சர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், என். திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், ஷம்ஸ் முலானி, நேஹல் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரொமாரியோ ஷெப்பர்ட்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த 38 வயதான முகமது நபி ஐபிஎல் 2024 ஏலத்திற்கான தேர்வுப்பட்டியலில் மிகவும் வயதான வீரர் ஆக இருக்கிறார்.
ஏலத்தில் பங்கேற்பதில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 17 வயதான குவேனா மபாகா, ஐபிஎல் 2024 ஏலத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் வீரர் ஆவார்.
குஜராத் டைட்டன்ஸ் (ரூ. 38.15 கோடி), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (ரூ. 34 கோடி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ரூ. 32.7 கோடி), சென்னை சூப்பர் கிங்ஸ் (ரூ. 31.4 கோடி), பஞ்சாப் கிங்ஸ் (ரூ. 29.1 கோடி), டெல்லி கேபிடல்ஸ் (ரூ. 28.95 கோடி), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ரூ. 23.25 கோடி), மும்பை இந்தியன்ஸ் (ரூ. 17.75 கோடி), ராஜஸ்தான் ராயல்ஸ் (ரூ.14.5 கோடி), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (ரூ. 13.15 கோடி).
குறைந்தபட்சமாக 20 லட்சம் தொடங்கி 30 லட்சம், 40 லட்சம், 50 லட்சம், 75 லட்சம், 1 கோடி, 1.5 கோடி மற்றும் அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை ஒரு வீரரின் அடிப்படை ஏலத்தொகை நிர்ணயிக்கப்படுகிறது.
214 இந்திய வீரர்கள் மற்றும் 119 வெளிநாட்டு வீரர்கள் உடன், அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த இரு வீரர்களும் பங்கேற்கின்றனர். அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த இருவரையும் சேர்த்து சர்வதேச போட்டிகளில் விளையாடிய 116 வீரர்களும், சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாத 215 வீரர்களும் உள்ளனர்.
2024ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான வீரர்களின் இறுதி ஏலப்பட்டியலில் 333 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதிகபட்சமாக 77 இடங்கள் 10 அணிகளால் நிரப்பப்பட உள்ளன. அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருப்பார்கள்.
ஐபிஎல் 2024 சீசனுக்கான வீரர்களின் ஏலம் Star Sports நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்பட்டு, Jio Cinema மூலம் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும். ரசிகர்கள் இதனை கண்டு ரசிக்கலாம். ஐபிஎல் ஏல வரலாற்றில் முதல்முறையாக வீரர்களுக்கான ஏலத்தை, மல்லிகா சாகர் என்ற பெண் நெறியாளர் தொகுத்து வழங்க உள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 17வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம், இன்று துபாயில் நடைபெற உள்ளது. அந்த ஊரின் ஏலம் உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணிக்கும், இந்திய நேரப்படி மதியம் 1:00 மணிக்கும் தொடங்கும். கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 17வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம், இன்று துபாயில் நடைபெற உள்ளது. அந்த ஊரின் ஏலம் உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணிக்கும், இந்திய நேரப்படி மதியம் 1:00 மணிக்கும் தொடங்கும். கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Background
IPL Auction 2024 LIVE Updates:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 மினி ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. பத்து அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியை பலமான அணியாக மாற்ற தயாராகி வருகின்றனர். ஏலம் எப்போது, எங்கு நடக்கின்றது என்பதையும், எப்படி நேரடியாக ஏலத்தினை பார்க்க முடியும் என்ற முழு விவரங்களையும் இந்தக் கட்டுரையில் காணலாம்.
ஐபிஎல் 2024 ஏலம் எப்போது?
ஐபிஎல் 2024 ஏலம் டிசம்பர் 19 செவ்வாய்க்கிழமை துபாயில் கோகோ கோலா அரங்கில் நடைபெறும். நிகழ்ச்சி இந்திய நேரப்படி மதியம் 1.00 மணிக்கு தொடங்கவுள்ளது
2024 ஐபிஎல் ஏலத்தைப் பார்ப்பது எப்படி?
ஐபிஎல் 2024 ஏலம் டிவி பார்வையாளர்களுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. டிஜிட்டல் முறையில் ஏலத்தினை பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் காணலாம்.
ஐபிஎல் 2024 ஏலத்தில் எத்தனை வீரர்கள் உள்ளார்கள்?
ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் களமிறங்கவுள்ளனர். இதில் அதிகபட்சமாக 77 வீரர்களை மட்டும்தான் மொத்தமாக உள்ள 10 அணி உரிமையாளர்களால் ஏலம் கூறமுடியும். மொத்தம் ஏலம் கூறப்படவுள்ள 77 வீரர்களில் 30 வீரர்கள் வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். மொத்தமாக மொத்தம் களமிறங்கவுள்ள 333 வீரர்களில் 214 இந்திய வீரர்கள் மற்றும் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த இருவர் உட்பட 119 வெளிநாட்டு வீரர்கள். அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த இருவருடன் 116 கேப்டு பிளேயர்களும், 215 அன் கேப் பிளேயர்களும் உள்ளனர்.
2024 ஐபிஎல் ஏலத்திற்கான ஏலதாரர் யார்?
துபாயில் நடைபெறும் ஐபிஎல் 2024 ஏலத்திற்கான ஏலத்தில் மல்லிகா சாகர் இருப்பார்.
2024 ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு உரிமையாளருக்கும் எவ்வளவு பணம் உள்ளது?
குஜராத் டைட்டன்ஸ் (ரூ 38.15 கோடி), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ரூ 34 கோடி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ரூ 32.7 கோடி), சென்னை சூப்பர் கிங்ஸ் (ரூ 31.4 கோடி), பஞ்சாப் கிங்ஸ் (ரூ 29.1 கோடி), டெல்லி கேபிடல்ஸ் (ரூ 28.95 கோடி), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ரூ. 23.25 கோடி), மும்பை இந்தியன்ஸ் (ரூ. 17.75 கோடி), ராஜஸ்தான் ராயல்ஸ் (ரூ. 14.5 கோடி), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (ரூ. 13.15 கோடி).
2024 ஐபிஎல் ஏலத்தில் இளைய மற்றும் வயதான வீரர்கள் யார்?
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 17 வயதான குவேனா மபாகா, ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்கும் இளம் கிரிக்கெட் வீரர் ஆவார்.
ஆப்கானிஸ்தானின் 38 வயதான முகமது நபி ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்கும் மிகவும் வயதான வீரர் ஆவார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் யாருக்கெல்லாம் குறி வைக்க வாய்ப்பு:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தற்போது ரூ. 31.4 கோடி உள்ளது. சென்னை அணி ஷர்துல் தாக்கூர், மணீஷ் பாண்டே, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரை வாங்க ஆர்வம் காட்டலாம். குறிப்பாக ஷர்துல் தாக்குர் இதற்கு முன்பு சென்னை அணிக்காக விளையாடி உள்ளார். வேகப்பந்து வீச்சாளரான இவர் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய அனுபவம் உள்ளவர். இவருக்காக சென்னை அணி ரூபாய் 10 கோடி வரை செலவு செய்ய வாய்ப்புள்ளது.
கடந்த சீசனில் கோப்பையை வென்ற கையுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வினை அறிவித்த அம்பாத்தி ராயுடுவின் இடத்தினை நிரப்ப சென்னை அணி இந்திய வீரரை தேர்வு செய்ய நினைத்தால், அவர்களின் தேர்வாக மணீஷ் பாண்டே இருக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் பந்து வீச்சினை இன்னும் பலப்படுத்த நினைத்தால் பெங்களூரு அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட ஜோஷ் ஹோசில்வுட்டை வாங்க சென்னை அணி வாங்க ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -