MI vs SRH LIVE Score: சதம் விளாசிய க்ரீன்; ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி..!

IPL 2023 MI vs SRH LIVE Score: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 21 May 2023 07:33 PM
MI vs SRH LIVE Score: மும்பை அபார வெற்றி..!

IPL 2023, SRH vs MI: மும்பை இந்தியன்ஸ் அணி  18 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. மும்பை அணியின் சார்பில் கேமரூன் க்ரீன் 100 ரன்கள் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. 

MI vs SRH LIVE Score: வெற்றியை நெருங்கும் மும்பை..!

201 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் மும்பை அணி 16 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs SRH LIVE Score: ரோகித் சர்மா அவுட்..!

சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா தனது விக்கெட்டை 56 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

MI vs SRH LIVE Score: 13 ஓவர்களில் மும்பை..!

அதிரடியாக ஆடி வரும் மும்பை அணி 13 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 148 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs SRH LIVE Score: ரோகித் சர்மா அரைசதம்..!

தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி வரும் மும்பை அணியின் கேப்டன் 31 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.  

MI vs SRH LIVE Score: 11 ஓவர்களில் மும்பை..!

அதிரடியாக ஆடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 121 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs SRH LIVE Score: க்ரீன் அரைசதம்..!

களமிறங்கியது முதல் அதிரடியாக ஆடி வரும் க்ரீன் 20 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார். 

MI vs SRH LIVE Score: 6 ஓவர்கள் முடிவில் மும்பை..!

அதிரடியாக ஆடி வரும் மும்பை அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs SRH LIVE Score: கியரை மாற்றும் க்ரீன்..!

களமிறங்கியது முதல் அதிரடியாக ஆடி வரும் க்ரீன் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி வருகிறார். 

MI vs SRH LIVE Score: 50 ரன்களைத் தொட்ட மும்பை இந்தியன்ஸ்..!

5.2 ஓவர்களில் மும்பை அணி ஒரு விக்கெட்டை இழந்து 50 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs SRH LIVE Score: பவர்ப்ளே பாதி முடிந்தது..!

201 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள மும்பை அணி முதல் மூன்று ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 24 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs SRH LIVE Score: முதல் விக்கெட்டை இழந்த மும்பை..!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இஷான் கிஷன் 14 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

MI vs SRH LIVE Score: ஹாரி ப்ரூக் டக் அவுட்..!

19வது ஓவரின் கடைசி பந்தில் களமிறங்கிய ஹாரி ப்ரூக் க்ளீன் போல்ட் ஆகி ரன் ஏதும் சேர்க்காமல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

MI vs SRH LIVE Score: க்ளாஸன் க்ளீன் போல்ட்..!

மாத்வால் பந்து வீச்சில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் க்ளாஸன் தனது விக்கெட்டை இழந்துள்ளார். 

MI vs SRH LIVE Score: மூன்றாவது விக்கெட்..!

ஹைதராபாத் அணியின் ப்ளிப்ஸ் 4 பந்தில் ஒரு ரன் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

MI vs SRH LIVE Score: மயாங்க் அகர்வால் அவுட்..!

தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி வந்த மயாங்க் அகர்வால் தனது விக்கெட்டை 83 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்துள்ளார். 

MI vs SRH LIVE Score: 150 ரன்களைக் கடந்த ஹைதராபாத்..!

15 ஓவரில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 157 ரன்கள் சேர்த்துள்ளது.  

MI vs SRH LIVE Score: முதல் விக்கெட்..!

ஹைதராபாத் அணியின் விவ்ராந்த் 47 பந்தில் 63 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

MI vs SRH LIVE Score: மயாங்க் அகர்வால் அரைசதம்..!

தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி வரும் மயாங்க் அகர்வால் 32 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். 

MI vs SRH LIVE Score: 100 ரன்களைக் கடந்த ஹைதராபாத்..!

தொடக்கம் முதல் சிறப்பாக ஆடி வரும் ஹைதராபாத் அணி 11 ஓவர்கள் முடிவில் 103 ரன்கள் சேர்த்துள்ளது.  ஹைதராபாத் அணியின் விவ்ராந்த் தனது அரைசதத்தினைக் கடந்துள்ளார். 

MI vs SRH LIVE Score: பாதி ஆட்டம் முடிந்தது.. வழுவான நிலையில் ஹைதராபாத்..!

ஹைதராபாத் அணி 10 ஓவர்களில் விக்கெட் எதையும் இழக்காமல் 93 ரன்கள் சேர்த்துள்ளனர். 

MI vs SRH LIVE Score: முதல் சிக்ஸர்..!

இந்த போட்டியின் முதல் சிக்ஸர் 8வது ஓவரில் ஹைதரபாத் அணியின் விவ்ராந்த் சர்மா அடித்துள்ளார். 

MI vs SRH LIVE Score: பவர்ப்ளேவில் 50ஐத் தொட்ட ஹைதராபாத்..!

பவர்ப்ளேவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs SRH LIVE Score: ஓவருக்கு இரண்டு பவுண்டரி..!

ஹைதராபாத் அணி சிறப்பான முறையில் பேட்டிங் செய்து வருகிறது. கடந்த மூன்று ஓவர்களாக ஓவருக்கு இரண்டு பவுண்டரிகள் விளாசி வருகிறது. 5 ஓவரில் அந்த அணி 43 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs SRH LIVE Score: 4 ஓவரில் ஹைதராபாத்..!

4 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs SRH LIVE Score: பவர்ப்ளே பாதி முடிந்தது..!

3 ஓவர்களில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs SRH LIVE Score: அடுத்தடுத்து பவுண்டரி..!

போட்டியின் மூன்றாவது ஓவரில் மயங்க் அகர்வால் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசியுள்ளார். 

MI vs SRH LIVE Score: முதல் ஓவரில் ஹைதராபாத்..!

முதல் ஓவரில் ஹைதராபாத் அணி 5 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs SRH LIVE Score: டாஸ்..!

டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 

Background

ஐபிஎல் தொடரின் 69வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது மதியம் 3.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. 


5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்று பிளே ஆஃப்பை உறுதி செய்ய முயற்சிக்கும். மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே பிளே ஆஃப் பந்தயத்தில் இருந்து விலகிய நிலையில், இன்று தனது கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது. வான்கடே மைதானத்தில் மும்பை அணி 6 லீக் போட்டிகளில் விளையாடி 4 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் உள்ளது. எனவே, பார்மை தொடர முயற்சிக்கும். 


பேட்டிங்கை பொறுத்தவரை சூர்யகுமார் யாதவ் மற்றும் நேஹால் வதேரா நல்ல பார்மில் உள்ளனர். ஆனால், பந்துவீச்சாளர்களில் நிலைமையே கவலை அளிக்கிறது. அதை சரி செய்தால் பிளே ஆஃப் கனவு பலிக்கும். 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த சீசனில் சிறப்பாக விளையாடவில்லை. தற்போது ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எனவே வெற்றிபெற்று 9வது இடத்திலாவது முன்னேற முயற்சிக்கும். ஹைதராபாத் அணியின் விளையாடும் லெவன் அணியில் இருந்து உம்ரான் மாலிக்கை நீக்கியது ஏற்கனவே சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. எனவே இன்றைய கடைசி லீக் போட்டியில் மாலிக்கை ஹைதராபாத் அணி முயற்சிக்கலாம். 


MI vs SRH போட்டி விவரங்கள்:



  • மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி: 69

  • இடம்: வான்கடே ஸ்டேடியம், மும்பை

  • தேதி & நேரம்: ஞாயிறு, மே 21, பிற்பகல் 3:30 மணி

  • டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா


வான்கடே ஸ்டேடியம் பிட்ச் அறிக்கை: 


வான்கடே ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாகவே பார்க்கப்படுகிறது. சேஸிங் செய்ய சிறந்த பிட்ச். எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யலாம். 190க்கு மேல் இந்த ஸ்டேடியத்தில் எடுத்தால் நல்ல ஸ்கோராக இருக்கும். 


கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்: 


மும்பை இந்தியன்ஸ் (MI):


ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா, டிம் டேவிட், ஹிருத்திக் ஷோக்கீன், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால்


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH):


அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ஹாரி புரூக், கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், கார்த்திக் தியாகி, மயங்க் டாகர், புவனேஷ்வர் குமார், நிதிஷ் ரெட்டி


யார் சிறந்து விளங்குவார்கள்..?


ஹென்ரிச் கிளாசென்:


தென்னாப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென் தற்போதைய சீசனில் அபார பார்மில் உள்ளார். கடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தினார். இவர் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 430 ரன்கள் குவித்துள்ளார். மேலும், ஐபிஎல் ஆரஞ்சு கேப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார். இன்றைய போட்டியில் தனது பார்மை மீண்டும் தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம். 


பியூஸ் சாவ்லா: 


மும்பை அணியின் பியூஸ் சாவ்லா இந்த சீசனில் கலக்கி வருகிறார். இவர் இதுவரை 13 போட்டிகளில் 20 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இன்று ஆபத்தான வீரராக வலம் வரலாம். 


இன்றைய போட்டி கணிப்பு : மும்பை அணி வெற்றிபெறும். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.